தினம் ஒரு திருத்தலம் இன்று ..................................
*வேதாரண்யம்*
🟤 இந்து சமய வேதங்களான சதுர் வேதங்கள் என்று அழைக்கப்பெறும் ரிக், யசூர்,சாம, அதர்வண வேதங்கள் நான்கும் மனித உருவம் கொண்டு இத்தலத்தில் இருக்கும் இறைவனை பூசை செய்து வந்தன. கலியுகம் தொடங்கும் தருவாயில் சிவபெருமான் பூமியில் இருப்பது அவருக்கு உகந்தல்ல என்று எண்ணிய வேதங்கள், அவரிடம் கைலாயம் செல்லுமாறு கூறி, இத்தலத்தின் கதவினையும் அடைத்துவிட்டு சென்றன.
நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த கதவினை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி திறந்து வைத்தனர்.
⚪ அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம்.
🟤 இத்தலம் சப்தவிடத்தலங்களில் ஒன்று.
⚪ கோயில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் படி இறைவன் அருளிய திருத்தலம்.
🟤 அகத்தியர், வசிஷ்டர், கௌதமர், விசுவாமித்திரர், நாரதர், மாந்தாதா, முசுகுந்த சக்கரவர்த்தி, ஸ்ரீராமர் ஆகியோர் பூசித்த திருத்தலம் .
🚌 வழி : திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவில்உள்ளது இத்திருத்தலம் .
வேய் உறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே ஆக அறும் நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
(திருஞானசம்பந்தர்)
🌼இறைவன் : திருமறைக்காடர்
🌼இறைவி : வேதநாயகியம்மை
🌼 அம்மை , அப்பனின் நின் பொன்னார் திருவடிகள் 👣👣👣👣👣போற்றி போற்றி
🌼 இத்திருத்தலம் சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம்
No comments:
Post a Comment