Wednesday, April 29, 2020

கருடபுராணம் - பகுதி 3

#கருடபுராணம் - பகுதி 3 

#சாலக்கிராமம்
===========

விஷ்ணுவின் பிரதி, சாலக்கிராமம் ஆகும். அது ஒருவகைக் கல்லால் ஆனது. கண்டகி ஆற்றங்கரையில் விஷ்ணு கல்லாகுமாறு சபிக்கப்பட்டார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. பலவகை சாலக்கிராமங்கள் பற்றி கருட புராணம் கூறுகிறது. எல்லா சாலக் கிராம கற்களும் புனிதமானவையே. ஒரு சாலக்கிராமத்தைத் தொட்டால் முற்பிறப்பில் செய்யப்பட்ட பாவங்களும் தீரும்.

1. கேசவ சாலக்கிராமம் என்பது சங்கு, சக்கர, கதை, தாமரைக் குறிகள் காணப்படுவது. இவை கூறப்பட்ட வரிசையில் இருக்க வேண்டும்.

2. மாதவ சாலக்கிராமத்தில் சங்கு, சக்கரம், பத்ம, கதை வரிசையில் இருக்கும்.

3. நாராயண சாலக்கிராமத்தில் பத்மம், கதை, சக்கரம், சங்கு என்ற வரிசை இருக்கும்.

4. கோவிந்த சாலக்கிராமத்தில் கதை, பத்மம், சங்கு, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.

5. விஷ்ணு சாலக்கிராமத்தில் பத்மம், சங்கு, சக்கரம், கதை என்ற வரிசை இருக்கும்.

6. மதுசூதன சாலக்கிராமத்தில் சங்கு, பத்மம், கதை, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.

7. திரிவிக்கிரம சாலக்கிராமத்தில் கதை, சக்கரம், சங்கு, பத்மம் என்று வரிசை இருக்கும்.

8. வாமன வடிவில் சக்கரம், கதை, பத்மம், சங்கம் என்ற வரிசையிலும்

9. ஸ்ரீதரன் வடிவில் சக்கரம், பத்மம், சங்கம், கதை என்ற வரிசையிலும்

10. ஹ்ருஷிகேசன் அமைப்பில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்

11. பத்மநாபன் அமைப்பில் பத்மம், சக்கரம், கதை, சங்கு என்ற வரிசையிலும்

12. தாமோதரன் வடிவில் சங்கு, சக்கர, கதை, பத்மம் என்ற வரிசையிலும்

13. வாசுதேவன் வடிவில் சக்கரம், சங்கு, கதை, பத்மம் என்ற வரிசையிலும்

14. சங்கர்ஷனில் சங்கு, பத்மம், சக்கரம், கதை என்ற வரிசையிலும்

15. பிரத்யும்னனில் சங்கு, கதை, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்

16. அநிருத்தன் அமைப்பில் கதை, சங்கு, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்

17. புருஷோத்தமன் அமைப்பில் பத்மம், சங்கு, கதை, சக்கரம் என்ற வரிசையிலும்
1
8. அதோக்ஷஜ வடிவில் கதை, சங்கு, சக்கரம், பத்மம் என்ற வரிசையிலும்

19. நரசிம்மன் உருவில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்

20. அச்சுதன் அமைப்பில் பத்மம், சக்கரம், சங்கு, கதை என்ற வரிசையிலும்

21. ஜனார்த்தனன் வடிவில் சங்கு, சக்கரம், பத்மம், கதை என்ற வரிசையிலும்

22. உபேந்திரனில் கதை, சக்கரம், பத்மம், சங்கு என்ற வரிசையிலும்

23. ஹரி அமைப்பில் சக்கரம், பத்மம், கதை, சங்கு என்ற வரிசையிலும்

24. ஸ்ரீ கிருஷ்ணனில் கதை, பத்மம், சக்கரம், சங்கு என்ற வரிசையிலும் அமைந்திருக்கும்.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!

#ஸ்ரீ கருட தண்டகம் 
********

எம்பெருமானுக்கு வாகனமாக இருக்கும் பட்சி ராஜனாகிய ஸ்ரீகருடனைப் பற்றி ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளியது இந்த ஸ்தோத்திரம். 

கருட பகவானே ! வேதம் படித்த பெரியோர்கள் உம்மை இடைவிடாமல் துதிக்கின்றனர். உம்முடைய சிறகுகளில் இருந்து மிகவும் வலிமையாக காற்று வீசுகிறது. அந்தக் காற்றினால் கடல்கள் கரையை மீறிப் பொங்குகின்றன. அப்போது எழும்பும் அலைகள் பாதாள லோகம் வரையில் பாய்கின்றன. அந்தப் பாய்ச்சல் காற்றோடு கலந்து மிகவும் விசையோடு பாம் என்ற பேரொளியை எழுப்புகின்றன. அந்த சத்தத்தைக் கேட்டதும் பூமியைத் தாங்கும் திக்கஜங்கள் தங்களுடன் யாரோ போருக்கு வருவதாக நினைத்து கோபத்தோடு எதிர்த்து வருகின்றன. அந்த நேரத்தில் உம்முடைய நாகங்கள் என்ற ஆயுதத்தைக் கொண்டு திக்கஜங்களை அடக்கிவிடுகிறீர்.

கருட பகவானே உம்முடைய கூர்மையான வளைந்த அலகு  எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுகிறது. உம்முடைய கோரப்பற்களைக் காணும் எதிரிகள் இவை தேவேந்திரனின் வஜ்ராயுதமோ என்ற கதி கலங்கிப் 
பின் வாங்குகிறார்கள். இத்தகைய பெருமைகள் கொண்ட உம்மை அடியேன் போற்றுகிறேன். வேதாந்த வித்தைகள் அடியேனுக்கு வசமாகும்படியாக அருள் செய்ய வேண்டும். மேலும் எப்போதும் உமக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் தவறாமல் அடியேனுக்கு தந்தருள வேண்டும் என்கிறார் ஸ்ரீ தேசிகர். 

ஸ்வாமி தேசிகன் திருவடிகளே
சரணம்

#கருட_வழிபாடும்... கருட வழிபாட்டிற்குரிய திதிகள்..!!

🦅 காக்கும் கடவுள் என்று போற்றப்படுபவர் மகாவிஷ்ணு. இவருடைய வாகனமாக இருப்பவர் கருடன். இவர் 'பெரிய திருவடி" என்றும் புகழப்படுகிறார். வானத்தில் வட்டமிடும் கருடனை கண்டு தரிசிப்பவர்களுக்கு, அவர்களை பிடித்த தோஷங்கள் அனைத்தும் அகலுவதாக ஐதீகம். 

🦅 கருட பகவான் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார். மற்ற தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு இருப்பதுபோல் கருட பகவானுக்கும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. இதை பக்தர்கள் அனைவரும் சிரத்தையோடு கடைபிடித்து ஸ்ரீ கருட பகவானின் அருளாசிக்கு பாத்திரமாக வேண்டும்.

🦅 ஆர்வம் நிறைந்த ஆழ்ந்த பக்தியுடன் கருடனை வழிபட்டால், வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும். கருட தரிசனம் கிடைத்தால் விரதத்தை உடனே முடித்துக்கொண்டு உணவருந்தலாம்.

🦅 ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ள கருட பகவானின் விரத வழிபாடு நமக்கு கைகொடுக்கிறது. நவகிரகங்களினால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களையும் விலக்குபவராகவும் கருடன் திகழ்கிறார்.

இவரை எந்த திதிகளில் வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இங்கே பார்க்கலாம்.

வளர்பிறை பிரதமை : கண் திருஷ்டி, செய்வினை தோஷங்கள் அகலும்.

தேய்பிறை பிரதமை : வறுமை நீங்கி, குபேர சம்பத்து ஏற்படும்.

வளர்பிறை திருதியை : சந்திரனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

வளர்பிறை சஷ்டி : செவ்வாய் தோஷம் அகலும்.

வளர்பிறை சப்தமி : சூரிய பகவானால் உண்டான தோஷங்கள் நீங்கும்.

வளர்பிறை சதுர்த்தி : விநாயகப் பெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும்.

வளர்பிறை நவமி : கல்வி ஞானம், தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

தேய்பிறை நவமி : மரண பயம் நீங்கும்.

தேய்பிறை தசமி : குரு தோஷம் விலகும், புத்திர பாக்கியம் கிடைக்கும்.

வளர்பிறை துவாதசி : புதன் தோஷம் விலகும். அறிவாற்றல் பெருகும்.

தேய்பிறை துவாதசி : மகாவிஷ்ணுவின் நெஞ்சில் குடியிருக்கும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

அமாவாசை : ஆண் குழந்தை பிறக்கும் வரம் கிடைக்கும்.

பௌர்ணமி : மகாலட்சுமியின் அம்சமான பெண் வாரிசு பிறக்கும் யோகம் வாய்க்கும்.

🦅 வானத்தில் வட்டமிடும் கருடனை நாம் அனைத்து நேரங்களிலும் காண இயலாது. எனவே வைணவத் தலங்களில் அருளும் கருடாழ்வாரை வணங்கி, அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம்.

🦅 நாம் வெளியில் செல்லும்போது கருட பகவான் வலமிருந்து இடம் போனால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. இடமிருந்து வலம் போனால் வருத்தம் உண்டாகும். கருடன் வட்டமிடுவது நலத்தையும், நன்மைகளையும் கொடுக்கும்.

🦅 கருடன் இரையை கவ்வியபடி வலமிருந்து இடம் போனால் ஆதாயம், வெற்றி உண்டாகும். அத்துடன் பகைகள் அழியும். கருடனை நாம் எந்தத் திசையில் காண்கிறோமோ அந்தத் திசையில் இருந்து லாபம் ஏற்படும்.


No comments:

Post a Comment