தினம் ஒரு மூலிகை மருத்துவத்தில் இன்று இம்புரல் பயன்களை பற்றி பார்ப்போம்.
1. வயிற்றுக் கோளாறுகள் குறைய
வயிற்றுக் கோளாறுகள் குறைய இம்பூறல் இலைகளை அரைத்து ஒரு ஸ்பூன் அளவு சாறு எடுத்து அதனுடன் ஒரு கப் பால் மற்றும் சர்க்கரைக் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குறையும்.
2. நுரையீரலில் உள்ள சளி, இருமல் குறைய
இம்பூறல் வேர் மற்றும் அதிமதுரம் இரண்டையும் நன்றாக இடித்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் நுரையீரலில் உள்ள சளி, இருமல் மற்றும் இரைப்பு ஆகியவை குறையும்.
3. மாதவிடாய் கோளாறுகள் குறைய
இம்பூறல் தாவரத்தின் வேரை எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து 1 டம்ளர் நீர் விட்டு பாதியாக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் குறையும்.
4. விக்கல் குறைய
இம்பூறல் செடியின் வேரை எடுத்து பசும்பால் அரைத்து சிறிய உருண்டையை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் விக்கல் குறையும்.
5. விஷப்பூச்சிகள், வண்டுகள் போன்றவை கடித்தால் அதன் விஷக்கடி தாக்கம் குறைய
விஷக்கடி குறைய கைப்பிடி அளவு இம்பூறல் இலைகளோடு, அதன் வேரை சேர்த்து 5 கப் நீரிலிட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி விஷப்பூச்சிகள், வண்டுகள் கடித்த விஷக்கடி மேல் இந்த நீரை கொண்டு கழுவி வந்தால் விஷக்கடியால் ஏற்பட்ட புண்கள் குறையும்.

No comments:
Post a Comment