ஸ்மரணாத் அருணாசலம்"
அண்ணாமலைக்கு அரோஹரா என்று சொல்லி,பெரியவாள் பாதங்களில் விழுந்த ஒரு பண்டார பிச்சைக்காரன்.- (அவனிடம் கூட ஈஸ்வரனைப் பார்த்த பெரியவா)
(தெய்வம் தெய்வ வடிவிலேயே வந்தாலும், நம்பாத பாமரர்கள் நாம்- என்னத்தைச் சொல்ல!)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
ஒரு கிராமத்தில் முகாமை முடித்துக் கொண்டு, அடுத்த முகாமுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள் பெரியவாள்.
வழியில் ஒரு பிச்சைக்காரன் வந்தான். தொலைவிலிருந்து பார்த்தபோதே, 'இவர் ஒரு சாமியார். ரொம்பப் பேர் கூட வருகிறார்கள். நல்ல சில்லறை தேறும்' என்று எண்ணியிருப்பான் போலும்.
அருகில் வந்ததும், "அண்ணாமலைக்கு அரோஹரா' என்று கூவிக் கொண்டே, பெரியவா பாதங்களில் விழுந்தான். பெரியவாள், உடன் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.
"இவன் நமக்கு ரொம்பவும் உபகாரம் செய்திருக்கான்"-----பெரியவா.
'இவன் என்ன உபகாரம் செய்தான்?'--(தொண்டர்கள் மனதில்)
"ஸ்மரணாத் அருணாசலம் என்று சொல்வார்கள். அருணாசலேஸ்வரை நினைத்தாலே போதுமாம். ரொம்ப புண்ணியம்!.இவன் நமக்கெல்லாம் அருணாசலேஸ்வரை ஞாபகப்படுத்தி, உபகாரம் செய்திருக்கான்."- பெரியவா.
பிச்சைக்காரன் இன்னும் நின்று கொண்டிருந்தான். பத்து பைசா கூட கிடைக்கவில்லை.
பெரியவாள், அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்கள்.
"இன்னிக்கு, எங்கேயும் பிச்சைக்குப் போக வேண்டாம்.."-- பெரியவா.
"அப்படியானால், சாப்பாட்டுக்கு என்ன வழி"--- பிச்சைக்காரன்.
"மடத்திலேயே சாப்பிடலாம்.... அப்புறமா வெளியூர் போ"----பெரியவா.
பெரியவாள் பக்தர்களைப் பார்த்துச் சொன்னார்கள்;
"எந்தரோ மஹானுபாவுலு. எங்கெங்கெல்லாமோ..எத்தனையோ மகான்கள்,சித்தர்கள்,பக்தர்கள் இருக்கிறார்கள். இந்தப் பண்டாரத்தைப் பாருங்கள். நாளைய தினத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அன்றன்று கிடைக்கும் பிட்சையில் காலம் தள்ளுகிறான்.இவனுக்குள்ள ஞானம் கூட நமக்கு வருவதில்லை" -பெரியவா.
ஒரு பண்டார - பிச்சைக்காரனிடம் கூட ஈஸ்வரனைப் பார்த்தார்கள்,பெரியவாள். உடன் வந்து கொன்டிருந்த ஒரு வித்வான் சொன்னார்'
"ஈஸ்வரனே அவதாரம் செய்து வந்தால்கூட, நாம் அவரை வெறும் மனிதராகப் பார்க்கிறோம்!""
பெரியவாளைத்தான் குறிப்பிட்டாரோ?
தெய்வம், தெய்வ வடிவிலேயே வந்தாலும், நம்பாத பாமரர்கள் நாம். என்னத்தைச் சொல்ல?
Jaya Jaya shankara hare hare shankara
No comments:
Post a Comment