_*குழந்தைகளுக்கான டிபன் சப்பாத்தி ரோல்*_
🍱 *தேவையான பொருட்கள் :*
சப்பாத்தி - 5, வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
🍴 *செய்முறை:*
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
சப்பாத்திகளின் நடுவே வதக்கிய கலவையை வைத்து பாய் போல சுருட்டவும்.
தோசைக்கல்லை காய வைத்து சுருட்டிய சப்பாத்திகளை வைத்து இருபுறமும் டோஸ்ட் செய்து எடுத்து பரிமாறவும். சூப்பரான சப்பாத்தி ரோல் ரெடி.
🌷🌷
No comments:
Post a Comment