Friday, August 5, 2022

ஓர் அதிரடி உத்திரவு

 பையன்களோட. கோத்திரக்காரர்கள் இருக்கிற போது நீ எதற்கு?"

"ஓர் அதிரடி உத்திரவு"

சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.

எட்டு வயது, ஐந்து வயதுப் பையன்களுடன், உடன்பிறந்தான் வீட்டுக்கே வந்துவிட்டாள்,

அந்தப் பெண்மணி.கணவரோடு பிறந்தவர்கள்,அவளையும்.குழந்தைகளையும் வைத்துக் காப்பாற்றுவதாகக் கூறினார்கள். ஆனால்அவர்கள் பேச்சு எடுபடவில்லை.

குழந்தைகளின் மாமன்காரன் கை மேலோங்கியிருந்ததால் தன் சகோதரியையும் குழந்தைகளையும் தானே காப்பாற்றுவதாக அழைத்துக் கொண்டு வந்து விட்டான். நிலபுலன்களையும்அவனே நிர்வகித்தான்.

ஐந்து ஆண்டுகள் ஓடிப் போய் விட்டன .பையன்கள் வளர்ந்து விட்டார்கள். உபநயனம் செய்ய வேண்டும். மாமாக்காரர் ஸ்ரீமடத்துப்பக்தராதலால் மடத்திலேயே உபநயனம் செய்விக்க ஏற்பாடாயிற்று.

பிள்ளைகளின் தகப்பனார் வீட்டுக் காரர்களும் உபநயனத்துக்கு வந்திருந்தார்கள். ஆனால் இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப் பட்டார்கள்.

மாமாவுக்கு மகாப் பெருமை.

தங்கையின் குடும்பம் தனியாக இருந்தாலும்,அதன் முழுப் பொறுப்பையும் இவன் தானே கவனித்து வந்தான்.இப்போது மருமான்களுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தப்போகிறான்!

கர்வம் இருக்காதா?

குடும்பத்தில் எல்லோருமாக, உபநயனத்துக்கு முந்தின நாள் பெரியவாளிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தார்கள்.

மாமன் ஆடம்பரமாக வந்தான். மனைவியோடு நமஸ்காரம் செய்தான்

"இந்த மருமான்களுக்குத்தான் நாளைக்கு உபந்யனம்..." என்றான் குழைந்துகொண்டு.

"யார் பிரும்மோபதேசம் செய்யப் போகிறார்கள்?"

"நானும்,என் தம்பியும்..."

பெரியவா மெல்ல தலையை அசைத்தார்கள்.

"பையன்களோட அப்பா வழியிலே பெரியப்பா சித்தப்பா வந்திருக்காளோ...?"

மாமன் தலையில் குட்டு விழுந்தது.

"வந்திருக்கா..இதோ, இவா தான்..."

"அப்போ அவாளே மந்த்ரோபதேசம் செய்யட்டும்.

பையன்களோட. கோத்திரக்காரர்கள் இருக்கிறபோது நீ எதற்கு?"

வெலவெலத்துப் போய்விட்டான் மாமன்.

பெரியவாள் உத்திரவுப்படிதான் பிரும்மோபதேசம் ஆயிற்று.அவர்களால் தான் இப்படி ஓர் அதிரடி உத்திரவு போட முடியும். Jaya Jaya Shankara hare hare shankara

No comments:

Post a Comment