ஆடி அமாவாசை ஸ்பெஷல்
எளிய தர்ப்பண பூஜை முறைகள், பகுதி - 12.
தர்ப்பண மந்திரம் அறியாதோர்...
போகர்: ''தர்ப்பண மந்திரங்களை அறியாதோர் பிறர் உதவியுடன் தர்ப்பண ஏற்புடையதா? குருதேவா!" பூஜைகளைச் செய்வது
ஸ்ரீஅகஸ்தியர்: "உண்மையான உள்ளத்துடன் எவ்வித சுயலாபத்தையும் எதிர்பாராமல், கட்டணம் பெறாமல் தர்ப்பணம் செய்து வைப்போரின் உதவியை நாடுவதில் தவறில்லை. ஆனால் அத்தகைய புனித உள்ளம் உடையோர் இக்காலத்தில் கிடைப்பது அரிது.'' (கட்டணம் பெற்றால் மந்திரத்தை விற்பது போலாகும். நாமாக விரும்பி தானமாக அளிப்பதில் தவறில்லை.)
அவ்வாறு தர்ப்பணம் செய்து வைப்போருக்குச் சில ஆன்மீகத் தகுதிகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அவர்கள் தினமும்
1️⃣ குறைந்தது 10,000 முறையாவது காயத்ரீ மந்திரம் ஜபிக்க வேண்டும்.
2️⃣ சந்தியா வந்தனம் போன்ற நித்திய கர்மாக்களை மூன்று வேளையும் தவறாமல் செய்ய வேண்டும்.
3️⃣ தீட்சை வைத்து. (குடுமி) பஞ்சகச்ச ஆடை அணிபவராயிருக்க வேண்டும்.
இத்தகைய தகுதிகள் பூண்டவரைத் தேடிப் பிடிப்பது மிகவும் கடினம். எனவே அத்தகையோர் கிடைக்காவிடில் சுயமாக தர்ப்பண பூஜை செய்வதே சிறப்பானது.
போகர்: ''குருதேவா! தாங்கள் மேலே குறிப்பிட்ட ஆன்மீகத் தகுதிகள் தர்ப்பணம் செய்து வைப்பவருக்கு மட்டும்தான் பொருந்துமா?"
ஸ்ரீஅகஸ்தியர்: அப்படியல்ல. எனதருமை போகா! சுயமாகத் தர்ப்பண பூஜை செய்பவருக்கும் இந்தத் தகுதிகள் பொருந்தும். ஆனால் நமக்கே தகுதிகள் இல்லையே என்று மனதார உணர்ந்தால் ஆன்மீகத்தில் நெறிமுறைகளுடன் வாழ முயற்சிப்போம். எளிய மந்திரங்களில் துவங்கி ஆர்வத்துடன் செய்பவருக்கு நாளடைவில் ஆழ்ந்த ஈடுபாடு தானாகவே உருவாகிறது. நாளடைவில் உள்ளத் தூய்மையோடு பித்ரு பூஜை மட்டுமல்லாமல் அனைத்து இறைக் காரியங்களையும் ஆர்வத்துடன் செய்யும் பாங்கு வந்தடைகிறது.'
பிறர் செய்து வைத்தாலோ, ஏனோதானோ வென்று வாழ்க்கை முழுவதும் அப்படியே கழிந்து விடும். மேலும் சுயமாகத் தர்ப்பண பூஜை செய்யும்போது, பூஜைகளில் உள்ள குறைகளைக்கூடப் பொருட்படுத்தாமல் பித்ருக்கள் மனதார ஏற்று ஆனந்தத்துடன் ஆசீர்வதிக்கின்றனர்.
ராமர் செய்த பித்ரு பூஜை
ஸ்ரீராமர் தன் தந்தையான தசரதனுக்கும், கிருஷ்ணன் தன் மூதாதயர் அனைவருக்கும் தர்பணம் செய்ததாக நமது இதிகாசங்கள் கூறுகின்றன.
பித்ரு பூஜை நமது முன்னோர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. ஸ்ரீராமர் தன் தந்தையான தசரதனுக்கும், கிருஷ்ணன் தன் மூதாதயர் அனைவருக்கும் இவ்வாறு தர்பணம் செய்ததாக நமது இதிகாசங்கள் கூறுகின்றன. ஆனால் இக்காலத்திலோ சூரியனின் ஒளியை விட அதிக பிரகாசமாக உலாவரும் அவர்களை நம் கண்களால் காண இயலாத நிலையில் நமது வாழ்வியல் தன்மை அமைந்துள்ளதால் மானசீகமாக பூஜை செய்து, நாம் தரும் திதி நமது முன்னோர்களை மகிழ்விக்கின்றது
நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம். நம் பித்ருக்கள் (மண்), புரூரவர் (நீர்), விசுவதேவர் (நெருப்பு), அஸீருத்வர் (காற்று), ஆதித்யர் (ஆகாயம்) என பஞ்ச பூத அம்சமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்று.
திரேதா யுகத்திலும், கிருதாயுகத்திலும் மகாளய பட்ச நாட்களில் மூதாதையர்கள் நேரில் தரிசனம் தந்து உணவு பெற்று வாழ்த்தி சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப் பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான். எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவினால் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.
தர்ப்பண மகிமை தொடரும்..
ஓம் குருவே சரணம் 🙇
No comments:
Post a Comment