Tuesday, May 3, 2022

பொற்கோயில்

 உங்கள் வயிறு நிரம்பவில்லை எனில் பொற்கோயில் வருத்தப்படும்!

அதிலும் புனித ஸ்தலமான பொற்கோயிலில் உள்ள கிச்சனைப் பற்றி சொல்லவே வேண்டாம். பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தரில் இருக்கிறது பொற்கோயில்.

தினமும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பொற்கோயிலில் உணவு அருந்துகிறார்கள். பண்டிகை காலங்களில் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். 

தினமும் 1500 கிலோ அரிசி உணவு தயாரிக்கப்படும். 2 ஆயிரம் கிலோ காய்கறிகள் பயன்படுத்தி கறிகள் சமைக்கப்படும். 12 ஆயிரம் கிலோ கோதுமை மாவு பயன்படுத்தி ரொட்டிகள் சுடப்படும்.அது தவிர  13 ஆயிரம் கிலோ பருப்பு வகைகள் கொண்டும் குழம்பு தயாரிக்கப்படும். 

காய்கறி உணவு மட்டுமே மிகவும் சுத்தமாக சமைக்கப்பட்டு சுடச் சுட பரிமாறப்படும். 

இந்த கிச்சனில் தினமும் 2 லட்சம் ரொட்டிகளை சுட்டு எடுக்க முடியும்.  ஒரு மணி நேரத்தில் இங்குள்ள ரொட்டி சுடும் இயந்திரம் 25 ஆயிரம் ரொட்டிகளை சுட்டெடுக்கும். தினமும் 100 கேஸ் சிலிண்டர்கள் காலியாகும். 5 ஆயிரம் கிலோ கரியும் உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. தினமும் 5000 லிட்டர் பால், ஆயிரம் கிலோ சர்க்கரை, 500 கிலோ வெண்ணெய் பயன்படுத்தி கீர் தயாரிக்கப்படுகிறது. 

இந்த கிச்சனில் 450 நிரந்தர ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இது தவிர ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களும் பணியில் இருப்பார்கள். சப்பாத்தி உருட்டுவது, காற்கறி நறுக்குவது போன்ற பணிகளில் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுவார்கள். 

மிகப் பெரிய பெரிய அண்டாக்களில் உணவு சமைக்கப்படுகின்றன. கிச்சனில் இரு உணவுக் கூடங்கள் உள்ளன. ஒவ்வொரு கூடத்திலும் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் வரை சாப்பிட முடியும். 

உலகிலேயே 24 மணி நேரமும் இயங்கும் ஒரே கிச்சன் இதுவாகத்தான் இருக்கும். ஷிப்ட் முறையில் உணவு தயாரிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. உணவு பரிமாறும் பணியில் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுகின்றனர். 

தன்னார்வத் தொண்டர்களே பிளேட்டுகளை கழுவுகின்றனர். நாள் ஒன்றுக்கு 3 லட்ச பிளேட்டுகள், தம்ளர்கள் மிக சுத்தமான முறையில் கழுவப்படுகின்றன. தன்னார்வத் தொண்டர்களை 'சேவாதர்ஸ் ' என்று அழைக்கிறார்கள். 

மிகத் தரமான வகையில் உணவுத் தயாரிக்கப்பட்டு சுத்தமான முறையில்  மக்களுக்கு பரிமாறப்படுகிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் வாங்கி வயிராற உண்ணலாம். உங்கள் வயிறு நிரம்பவில்லை என்றால் மட்டுமே பொற்கோயில் வருத்தப்படும்!

No comments:

Post a Comment