Tuesday, May 3, 2022

அடை

 அடை 

பரிமாறும் அளவு - 4

🍱 தேவையான பொருட்கள் - 
பச்சரசி - 2கப்
புழுங்கலரிசி - 2கப்
கடலைபருப்பு - 1கப்
துவரம்பருப்பு - 1கப்
உளுந்தம்பருப்பு - 1/4கப்
 மிளகாய் வத்தல் - 5
பெருங்காயம் - சிறிது
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பில்லை - சிறிது

🍴 செய்முறை -

அரிசியை  தனியாகவும்  பருப்பை  தனியாகவும் 4 மணி நேரம்  ஊற வைக்கவும்.

பிறகு அரிசி, மிளகாய் வத்தல், உப்பு மற்றும் பெருங்காயம் அனைத்தையும் நன்றாக கிரைண்டரில் அரைக்கவும்.

பருப்பு மற்றும் வெங்காயத்தை கர கரவென்று அரைக்கவும்.

இரண்டு கலவையும் ஒன்று சேர்த்து கறிவேப்பில்லையை அதனுடன் சேர்க்கவும். 

பின் தோசைக் கல்லை போட்டு அடை மாவை ஊத்தி சுட்டு எடுக்கவும்.

சுவையான அடை தயார். இதை தேங்காய் சட்னி/ அவியல்/ சாம்பாருடன் சாப்பிடலாம்.

👩‍🍳 குறிப்புகள் - 

வெங்காயத்தை அரைக்காமல் சிறிதாக வெட்டி அப்படியே அரைத்த மாவில் சேர்த்தும் அடை சுடலாம்.

No comments:

Post a Comment