Thursday, April 15, 2021

மது(ரை) ர கான மணி அய்யர்

 மது(ரை) ர கான மணி அய்யர்

---------------------------------------------------

காஞ்சி மாமுனிவர் பெரியவாளுக்கு மணி அய்யரின் பாட்டு என்றால் உயிர்.  பிரபல  எழுத்தாளர் பரணீதரன் அவர்கள் பெரியவாளுடன் இருந்தபோது மணி அய்யரின் கச்சேரியை பற்றி எழுதியதாவது: ஒரு சமயம் சென்னை தியாகராய நகரில் மதுரை மணி அய்யரின் கச்சேரி ஒரு மண்டபத்தில் நடந்தது.  சுமார் 200 ரசிகர்கள் மெய் மறந்து அய்யரின் கச்சேரியை கேட்கிறார்கள்.   மணி அய்யருக்கு  அப்போது உடல் நலம் குன்றி, கண் பார்வைகள் நலிந்து போன சமயம்.

கச்சேரியின்போது மகா பெரியவாள் தனக்கு முன்பு தட்டில் வைத்திருந்த ஆரஞ்ச் பழத்தின் சுளைகளை  எடுத்துவிட்டு அதன் மூடியால் தரையில் மணி அய்யரின் பாட்டுக்கு தாளம் போட்டு ரசிக்கிறார்.  

 கச்சேரி முடிந்ததும் மணி அய்யர் ”  நான் பாடும்போது லயம் தப்பாமல் தாளம் போட்டு வந்தாரே, அவர் யார்?” என்று கேட்க, உடன் பாடியவர் மகாபெரியவாள் தான் என்று சொல்ல மணி அய்யர் தன்னை அறியாமல் “கைலாசநாதா! கபாலீஸ்வரா! என் தெய்வத்தை பார்க்க முடியவில்லையே” என்றாராம்.  

இதை கேட்ட அத்தனை ரசிகர்களின் கண்களில் தாரையாக கண்ணீர் வந்தது என்று தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். ஒரு சமயம் நாட்டில், பஞ்சம் பட்டினி ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டபோது பெரியவாள் மதுரை மணி அய்யரிடம் ” நீ கச்சேரியில் கோளறு பதிகம் பாடு, நவகிரக கீர்த்தனைகளை பாடு” என்றார்.   

அவரது வேண்டுகோளை ஏற்று கடைசிவரை தன் கச்சேரியின்போது அவைகளைப் பாடாமல் இருக்கமாட்டார்.

No comments:

Post a Comment