ஆறு கஜம் புடவை கட்டிகொண்டு ஓர் அம்மாள் தரிசனத்துக்கு வந்தாள். மடத்துக்கு வருவது முதல் தடவை போலும். ஒன்பது கஜம் புடவை கட்டிகொண்டு வருவதுதான் குடும்ப பெண்டிரின் சம்பிரதாயம் என்பதை அறியவில்லை.
ஸ்ரீமடத்தின் மகாபக்தை என்று தன்னைப்பற்றிப் பெருமைப்பட்டு கொண்டிருந்த ஓர் அம்மையார், இந்த "ஆறு கஜ" த்தை பார்த்துவிட்டார். வந்ததே கோபம்! "மடிசார் கட்டிகொள்ளாமல் பெரியவாளை தரிசிக்ககூடாது" என்று உரத்த குரலில் உத்தரவே போட்டுவிட்டார்!
அந்த சமயம் பார்த்து (அம்மையாரின் துரதிருஷ்டவசமாக) பெரியவா அந்த பக்கம் வந்தார்கள்.
"என்ன கூச்சல்? என்ன சண்டை?"
விவரம் பெரியவாளுக்கு தெரிவிக்கப்பட்டது.
நடுங்கி கொண்டிருந்த, மடிசார் மாமியைக் கூப்பிட்டார்கள் பெரியவா.
"அந்த அம்மாள் ரொம்ப ஏழை. அவளிடம் ஒன்பது கஜம் புடவையே கிடையாது. வாங்க முடியலே ! நீ உடனே கடைக்கு போய் , ஒன்பது கஜம் புடவை இரண்டும், ரவிக்கை துண்டும் வாங்கிக்கொண்டு வந்து கொடு" என்று கடுமையான குரலில் கூறினார்கள்.
அந்தப்படியே புடைவைகள் வாங்கிகொண்டு வந்து, ஏழை அம்மாளை மடிசார் கட்டிக்க சொல்லி பெரியவாளிடம் அழைத்து வந்தார்.
"ரொம்ப சரி. ஆனாலும் நீ பண்ணினது தப்புதான். அந்த அம்மாகிட்டே மன்னிப்பு கேட்டுக்கோ ..."
பெரியவாள் சட்ட - சம்பிரதாயங்கள் மீறாதவர்கள். என்றாலும், எங்கே விலக்கு அளிக்கவேண்டும் என்ற நுட்பமும் தெரிந்தவர்கள்.
பெண்ணுக்கு கல்யாணம். மடத்திலேர்ந்து எதாவது உதவி செய்யணும்..."
ஏழை தம்பதிகள், அம்மாள் கழுத்தில் மஞ்சள் சரடு. மெல்லியதாக ஒரு வடம் செயின்.
இவர்களுக்கு உதவி செய்ய வேண்டியதுதான்.
"நான் ஒரு சந்நியாசி. ஒரு பைசா கூட கையில் தொட்டதில்லை .என்னிடம் போய் பண உதவி கேட்கிறாயே!" என்று வெளிப்படையாக பேசிகொண்டிருக்கும்போதே அந்தரங்கத்தில் ஒரு திட்டம் .
அதே சமயம், காமாட்சி கோயில் தலைமை ஸ்தானீகர் பிரசாதம் கொண்டு வந்தார். முதலில் பெரியவாளுக்கு பரிவட்டம் கட்டினார். பின்னர் குங்குமப் பிரசாதம் சமர்பித்தார்.
பெரியவாள் பரிவட்டத்தை கழிற்றி, பெண் கல்யாணத்துக்கு உதவி கேட்டு வந்தவரை சுட்டி காட்டி, "அவருக்கு கட்டு " என்று உத்தரவிட்டார்கள்.
யாசகம் கேட்டு வந்தவருக்கு அடித்தது யோகம்!
பெரியவாள் குங்குமப் பிரசாதத்தையும் அவரிடமே கொடுத்து, "எல்லாருக்கும் நீயே கொடு" என்றார்கள்.
திமுதிமுவென்று மார்வாடி கூட்டம் உள்ளே நுழைந்தது. திருத்தல பயணம். வாடகை வாகனத்தில் வந்திருந்தார்கள்.
பரிவட்டதுடன், குங்குமத்துடன் உட்கார்ந்திருந்தவர்தான் , ஸ்ரீ காமகோடி பீடாதிபதி என்று நினைத்து, காலில் விழுந்து, இருநூறும் முன்னூறுமாக காணிக்கை செலுத்தினார்கள். யாசகர் (பெரியவா முன்னரே சொல்லியிருந்தபடி) எல்லோருக்கும் குங்குமம் இட்டுவிட்டார்.
இந்த லீலா நாடகம் நடந்து முடிந்ததும், பெரியவாள் எழுந்து வந்து, மார்வாடிகளிடம் பேசி, ஆசிர்வதித்து, பிரசாதமாக பழங்களை கொடுத்தார்கள்.
"ஒரு பைசாவை கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் , கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகைச் சாமியாருக்கு!
No comments:
Post a Comment