🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 84 🌹🌹🌹
நவக்கிரகங்களில் சனி பகவானுக்குரிய தலம். குழந்தைக்குக் காட்சி கொடுத்த பெருமாள் நமக்காகவும் காட்சி தந்து அருளும் அற்புதமான திவ்யதேசம்.
அது என்ன சோரநாதன்? வாருங்கள் பெயர்க்காரணம் அறிந்திடலாம்.
திருக்குளந்தை (பெருங்குளம்)
தாயார்: அலர்மேல் மங்கை தாயார், குளந்தைவல்லி
உற்சவர்: மாயகூத்தன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: ஆனந்த நிலைய விமானம்
தீர்த்தம்: பெருங்குளம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ குளந்தைவல்லீ ஸமேத ஸ்ரீ மாயகூத்தன் ஸ்வாமிநே நமஹ.
ஊர்: பெருங்குளம்
🌺🌺 தலவரலாறு :-
வையமெல்லாம், நிறைந்துள்ள வைகுண்ட வாசனாம் ஸ்ரீமந்நாராயணனான இறைவன் நாராயணன் கமலாவதி என்ற பெண் குழந்தைக்கு காட்சி தந்ததால் இத்தலம் "திருக்குளந்தை" என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
பிரம்மாண்ட புராணத்தின் பதிவுகளின் அடிப்படையில் இத்தலத்தைப் பற்றிய சில குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன. இதனால் அக்காலத்தில் இந்த தலம் இருந்த இடம் "தடாக வனம்" என்றழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
வேதசாரன் என்ற அந்தணர், தனக்கு மகப்பேறு வேண்டி, தனது மனைவியான குமுதவல்லியுடன் இங்குள்ள பொய்கையில் நீராடி திருமாலை எண்ணி தினந்தோறும் வழிபட்டு வந்தனர்.
இறைவன் நாராயணனின் அருளால் "கமலாவதி" என்ற ஒரு மகள் பிறந்ததாகவும், அப்பெண் குழந்தையின் பக்தியில் மகிழ்ந்த இத்தல இறைவன் குழந்தைக்கு காட்சி கொடுத்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
நவதிருப்பதிகளில் இத்தலம் சனி பகவானுக்குரிய தலமாக வழிபடப்படுகிறது.
🌺🌺 சோரநாதன் பெயர்க்காரணம்:-
அச்மஸாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் அவனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அவனை அழித்ததாகவும் சொல்வார்கள்.
இவ்வாறு நர்த்தன கோலத்தில் இத்தலத்தில் காட்சி தருவதால் இங்குள்ள இறைவன் சோரநாதன் என்னும் திருநாமம் பெற்றார்.
🌺🌺 சிறப்புகள்:-
நவதிருப்பதிகளில் இத்தலம் ஏழாவது திருத்தலம்.
நவகிரகங்களில் சனி பகவானுக்குரிய தலமாக இத்தலம் திகழ்கிறது.
இறைவன் நர்த்தன கோலத்தில் காட்சி தருவதால் சோரநாதன் என்ற திருநாமம் பெற்றார்.
திருமகள் பிராட்டி குளந்தைவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.
நம்மாழ்வார் ஒரு பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 மங்களாசாசனம் :-
மெல்லாம் பாடற்றொழிய இழிந்து வைகல் பல்வளையார் முன் பரிசழிந்தேன்
மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக் கூத்தன் ஆடற்
பறவை யுயர்த்த வல்போர் ஆழி வளவனை யாதரித்தே!!!"
- நம்மாழ்வார்.
🌺🌺 வழித்தடம்:-
திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கத்தில் திருப்புள்ளிங்குடியிலிருந்து 10 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஏரல் செல்லும் பேருந்தில் பயணம் செய்து திருக்குளந்தை அடையலாம்.
அருள்மிகு குளந்தைவல்லி தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில்:-
அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில் - திருக்கோளூர் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
ஓம் நமோ நாராயணாய நம:!!!
No comments:
Post a Comment