🥗தகவல்📩 களஞ்சியம் 👩🍳
இன்றைய சமையல் குறிப்பு!
பகிர்வு
┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈
ரசிக்க ருசிக்க! சுவையான இனிப்பான இனிப்பு போளி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்!
இனிப்பு என்றால் எல்லோரும் பிடிக்கும். குழந்தைகளுக்கு சாக்லேட்க்கு பதில் இந்த மாதிரி உணவுகள் செய்து கொடுத்தால் இனிப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
வாங்க! இனிப்பான போளி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
கடலைப் பருப்பு - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
வெல்லம் - 1 1/2 கப்
நெய் - 4 தேக்கரண்டி
மஞ்சள் - 1/4 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு ,மஞ்சள், 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலக்கவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக சப்பாத்தி மாவுப் பதத்திற்கு பிசைந்து வைக்கவும். பிறகு இதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கலந்து வைக்கவும்.
பிறகு ஒரு குக்கரில் கடலைப் பருப்பு சுத்தம் செய்து போட்டு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி 6 விசில் வரும் வரை வைக்கவும்.
விசில் அடங்கியதும் பருப்பு குழைய வெந்ததும் கரண்டி வைத்து மசித்து விடவும்.
பிறகு ஒரு வாணலில் நெய், மசித்த பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து வெல்லம் பொட்டு கரைந்ததும் உப்பு , நெய் சேர்த்து நல்ல வாணலியில் ஒட்டம வந்ததும் இறக்கவும். இப்போது பூர்ணம் தயார்.
தயாரித்து வைத்துள்ள பூர்ணம் பந்துகளாகப் பிடித்து வைக்கவும்.
பிறகு கலந்து வைத்துள்ள மாவைப் பந்துகளாக பிரித்து அவை பூர்ணம் விட சிறிய அளவில் இருக்க வேண்டும்.
பிறகு சப்பாத்தி மாதிரி மாவு உருட்டி எடுத்து அதன் உள்ளே பூர்ணம் வைத்து மடித்து மறுபடியும் உருட்டவும்.
பிறகு ஒரு தோசைக் கல்லில் உருட்டி உள்ள போளி போட்டு நெய் ஊற்றித் திருப்பி எடுக்கவும்.
பகிர்வு
┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈
No comments:
Post a Comment