சமையல் குறிப்பு!
பகிர்வு
┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈
ரசிக்க ருசிக்க! சுவையான அம்மணி கொழுக்கட்டை செய்வது எப்படி?
Aminur Rahman
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - ஒரு கப்.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - 4 டீஸ்பூன்.
கடுகு - அரை டீஸ்பூன்.
கறிவேப்பிலை - தேவையான அளவு.
எள் - 2 டீஸ்பூன்.
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்.
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்.
மிளகாய் வற்றல் - 3.
தேங்காய்த் துருவல் - கால் கப்.
தண்ணீா் - ஒன்றரை கப்.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீா் விட்டு அதனுடன் உப்பு , எண்ணெய் சோ்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
2. தண்ணீா் நன்றாகக் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு உடனே அரிசி மாவைக் கொட்டி, கட்டியில்லாமல் கிளறி மூடிவையுங்கள் .
3. பிறகு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் மிளகாய் வற்றல் , உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, எள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சோ்த்து வறுத்துக்கொள்ளுங்கள்.
4. ஆறியதும் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது மாவை எடுத்துச் சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள் .
5. பின்னா் வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு , கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வேகவைத்த உருண்டைகளைப் போட்டுக் கிளறுங்கள்.
6. அரைத்து வைத்துள்ள கலவையைத் தூவி கிளறி இறக்குங்கள்.
பகிர்வு
┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈
No comments:
Post a Comment