பயனுள்ள செய்தி என்பதால் பகிர்கிறேன். இயன்றவர் பகிரலாம்
இந்தியா முழுக்க உள்ள 180 மருத்துவர்கள் இணைந்து லாக்டவுன் கிளினிக் என்ற பெயரில் இலவசமாக டெலிமெடிசன் ஆலோசனைகள் வழங்குகிறார்கள். டெலி மெடிசன் என்றால் நோயாளி நேரில் செல்ல வேண்டியதில்லை. வாட்ஸப்பைப் பயன்படுத்தி ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ஸ்பெஷலிஸ்ட்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.
அனுபவம்
என் நண்பர் ஒருவருக்குக் கைவிரல் ஒன்றில் சிறுகாயம். அதன் அருகில் தொற்று. அவர் வலியால் துன்பட்டுக் கொண்டிருந்தார்
குறிப்பிட்ட எண்ணிற்கு வாட்ஸப் அனுப்பினார். கையில் காயம் தொற்று மருத்துவம் வேண்டும் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்
அடுத்த சில நொடியில் பதில் வந்தது. உங்கள் பெயர், வயது, பாலினம், என்ன பிரச்சினை, ஏற்கனவே உடலில் இருந்துவரும் பிரசினைகள், இப்போது என்ன மருந்துகள் சாப்பிட்டு வருகிறீர்கள் என்ற விவரங்களையும் டெலிமெடிசன் ஆலோசனைக்கு சம்மதிக்கிறேன் என்ற உறுதி மொழியையும் அனுப்புங்கள் என்று பதில் வந்தது. அவரும் அந்தத் தகவல்களையும், அவற்றுடன் கைப் புண்ணை படம் எடுத்து இணைத்தும் அனுப்பினார்.
அடுத்த சில நிமிடங்களில் பதில் வந்தது. உங்கள் பிரச்சினை ஒரு தோல் மருத்துவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரே நேரே உங்களைத் தொடர்பு கொள்வார். அதற்கு 10 நிமிடத்திலிருந்து 3 மணி நேரம் ஆகலாம். உங்கள் படம் தெளிவாக இல்லை. வேறு அனுப்ப முடியுமா பாருங்கள் என்று பதிலில் குறிப்பிடப் பட்டிருந்தது
சுமார் 2 மணி நேரம் கழித்து தோல் மருத்துவரே நேரே பதில் அனுப்பினார். முதல் வரி நீங்கள் டயபெட்டிக் என்பதால் தொற்றை அலட்சியப்படுத்ததீர்கள் என்று இருந்தது. பின் மருத்துகளையும் அதை எந்தெந்த வேளையில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அவ்வளவுதான் பிரசினை தீர்ந்தது. பத்து பைசா செலவில்லை!
யார்?
இந்த முயற்சியை முன்னெடுத்திருப்பவர் டாக்டர் பிரகாஷ் அய்யாத்துரை என்ற ராமச்சந்திரா மெடிக்கல் சென்டரைச் சேர்ந்தவர்.
தொடர்புக்கு:
தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840876460,
(வாட்ஸப் செய்தி மாத்திரம். தட்டச்சு செய்ய முடியாதவர் குரல் வழிச் செய்தியைப் பதிவு செய்யலாம் (Voice Message). போனில் அழைக்க வேண்டாம்.
செய்தி நறுக்கு
https://epaper.timesgroup.com/Olive/ODN/TimesOfIndia/#
No comments:
Post a Comment