Friday, April 24, 2020

திருக்கடிகை-சோளசிம்ஹபுரம்-சோளிங்கர்

திருக்கடிகை-சோளசிம்ஹபுரம்-சோளிங்கர்

மூலவர்:
யோக ந்ருஸூம்ஹர் (அக்காரக்கணி)
உற்சவர்:
பக்தவத்சலன்
தாயார்:
ஸ்ரீ அம்ருதபலவல்லி தாயார்
மங்களாசாசனம்:
பேயாழ்வார்,
திருமங்கையாழ்வார்

பெருமாள் தனது பக்தனான ப்ரகலாதனுக்கு ந்ருஸிம்ஹனாக காட்சி தந்த அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டும் என்று சப்த ரிஷிகள் இத்தலத்தில் தவமிருந்தனர்!

காலன்-கேயன் என்ற அசுரர்கள் இவர்களது தவத்தைக் கலைக்க, ரிஷிகள் பெருமாளை ப்ரார்த்தித்தனர். உடன் பெருமாள் தனது சங்கு-சக்ர திவ்யாயுதங்களை ஆஞ்சநேயரிடம் அளித்து அவர்களை காக்க வேண்டினார். ஆஞ்சநேயரும் அவ்வாறே அசுரர்களை அழித்து ரிஷிகளை காக்க, பெருமாள் அங்கே நரஸிம்ஹ மூர்த்தியாக ஸேவை சாதித்தார்! 

உடன் ந்ருஸிம்ஹர், ஆஞ்சநேயரிடம் என்னை தரிசிக்க வரும் பக்தர்களை எனக்கு எதிரில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று பணித்தார். 

ஆகையால் ந்ருஸிம்ஹ பெரியமலைக்கு(1305படிகள்) நேர் எதிரே (406படிகள்) சிறிய மலையில் ஆஞ்சநேயர் தனிக்கோவிலில் ஸேவை சாதித்து வரும் பக்தர்களை காக்கிறார்! இங்கு அவர் யோகநிலையில் முன்னிரண்டு கரத்தில் ஜபமாலையும், பின்னிரண்டு கரத்தில் சங்கு-சக்ரமும் ஏந்தியபடி ஸேவை சாதிக்கிறார்! சதுர்புஜ யோக ஆஞ்சநேயர் என்ற திருநாமம் கொண்ட இவரது கண்கள், பெரிய மலையில் உள்ள யோக ந்ருஸிம்ஹரின் திருவடியைப் பார்த்தபடி அமைந்துள்ளது!

இந்த பெரிய மலை, யோக ந்ருஸிம்ஹர் தலத்தில் ஒரு கடிகை(சுமார் 30நிமிடங்கள்) தங்கியிருந்தாலே மோட்சம் நிச்சயம் ஆதலால் கடிகாசலம்! - திருக்கடிகை என்ற பெயரும் உண்டு.

விஸ்வாமித்ரர், இங்கே ந்ருஸிம்ஹனை ஒரு கடிகை துதிசெய்து ப்ரும்ஹரிஷி என்ற பட்டத்தைப் பெற்றதாக ஐதீகம்!


No comments:

Post a Comment