லக்ன ராசி குணம் தசா புத்தி அமைப்பு ✨
✨பதிவில் உள்ள படத்தை பார்த்ததும் உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் பதிவை பற்றி.
✨ஒருவருக்கு லக்னம் மற்றும் ராசி என்ற இரு அமைப்பு ஜாதகரை பற்றி சொல்லும்.
✨இதில் சூரி சந் செவ் குரு சுக் புத சனி என அவங்க அவங்களுக்கு தனித்தனி பண்புகள் உண்டு.
✨தனுசு லக்னம் மீன ராசி
✨மேஷ லக்னம் விருச்சிக ராசி
✨துலா லக்னம் ரிஷப ராசி
என்று லக்னம் மற்றும் ராசிக்கு ஒரே கிரகம் அதிபதியாக வரும் போது ஜாதகர் அந்த குறிப்பிட்ட கிரகத்தின் ஆளுகையில் முழுமையாக வருவார்.
✨மேச லக்னம்கன்னி ராசி
(முரட்டுதனம் மென்மை)
✨தனுசு லக்னம் ரிஷப ராசி
(பண்பான எல்லோரையும் மதிப்பதும்
எதையும் பெரிதாக உணர்வாக எடுக்காததும்)
✨சிம்ம லக்னம் கும்ப ராசி
(அதிகாரமும் அடங்கிபோதலும் )
✨இந்த மாதிரி முற்றிலும் மாறுபட்ட தன்மை ஜாதரிடம் இருக்கும். ஜாதகரை பிறர் புரிந்துகொள்வது சற்று சிரமமாகவே இருக்கும்.
✨இவன் எப்ப நல்லா இருப்பான் எப்ப சிடுசிடுனு இருப்பானே யூகிக்க முடியாது.
✨சில அமைப்பில் லக்னம் திரிகோண கேந்திர ராசி வந்து லக்னாதிபதி நட்பு சமம் போல வரும் அமைப்பு தசா புத்தி பாதி சிறப்பாக இருந்து பாதி எதிரணி தசா புத்தி பிரச்சனை தரும்.
✨சிலருக்கு லக்னாதிபதி ஒரு அணியாகவும் ராசியாதிபதி வேறு அணியாகவும் இருக்கும். இதில் குணம் ஓரளவு லக்ன ராசிக்கு பொருந்தி போகாது நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் தசா புக்திகளில் பெரிய மாற்றம் தராது.
✨சிலருக்கு லக்னம் ராசி இரண்டுமே ஒன்றாகிவிடும் இந்த மாதிரி அமைப்பில் ஜாதகர் குணம் ஒரே மாதிரி எப்போதும் இருக்கும். நல்ல தசா வந்தால் நல்ல பலனை சிறப்பாகவும் கெட்ட தசா வந்தால் தீயபலனை சிறப்பாகவும் தரும்.
✨அதோடு இதில் ராகு கேது தன்மை மற்றும் நடக்கும் தசா கிரகம் புக்தி கிரகம் அதோடு தொடர்பு கொண்ட கிரகங்கள் பொறுத்து தற்காலிகமாக சிலகுணங்களும் அப்போதைக்கு தொற்றி கொள்ளும்.

No comments:
Post a Comment