Tuesday, February 4, 2020

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்: 9

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்: 9

• அப்பிள்ளை மற்றும் அப்பிள்ளார் பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரத்தோடே பெரிய ஜீயர் திருவடிகளை தஞ்சம் அடைந்தனர்.

• ஒருநாள், திருவரங்கத்தில் கைங்கர்யங்களில் முக்கியமான பங்கு வகித்துப் பெரிய பெருமாளிடம் திருவாலவட்டம் வீசித் தொண்டாற்றிவந்த உத்தம நம்பி , மணவாள மாமுனிகள் திருவரங்கன் மங்களாசாஸனத்திற்கு வந்த வேளையிலே அவரை விரைவாகக் கிளம்பச் சொல்ல மணவாள மாமுனிகளும் அவ்வாறே செய்தார். 

• இதனைத் தொடர்ந்து உத்தம நம்பி சற்றே கண் அயர்ந்த வேளையிலே பெரிய பெருமாள் தானும் அவரது கனவில் தோன்றி தனது திருவனந்தாழ்வானும் மணவாள மாமுனிகளும் வேறல்ல என்பதை உணர்த்தத் தான் செய்த அபச்சாரத்தை பொருத்தருளும்படி பெரிய ஜீயர் மடத்திற்கு விரைந்து பெரிய ஜீயரை பிரார்த்திக்கலானார் உத்தம நம்பி. 

• அன்று தொட்டுப் பேரன்போடு பெரிய ஜீயர் திருவடிவாரங்களில் தொண்டாற்றி வந்தார் உத்தம நம்பி.

• சடகோபக் கொற்றி என்னும் அம்மையார் ஆய்ச்சியாரிடம் அருளிச் செயல்களைக் கற்றுக் கொண்டு வந்தார். ஒரு பகல் பொழுதில் மணவாள மாமுனிகள் எழுந்தருளியிருந்த அறையின் சாவி துவாரம் வழியாக உள்ளே பார்க்க முயன்ற சடகோபக் கொற்றி , மணவாள மாமுனிகள் தனது ஆதிசேஷ ஸ்வரூபத்துடன் உள்ளே இருப்பதைக் கண்டு திகைத்தார். 

• வெளியிலே கேட்ட சத்தத்தைத் தொடர்ந்து காரணத்தை விசாரித்த மணவாள மாமுனிகளிடம் தான் கண்டதை அம்மையார் கூற, புன்முறுவலுடன் கண்டதை ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி பெரிய ஜீயர் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment