இன்சூரன்ஸ்ல முதலீடு பண்ணலாம்னு வந்துருக்கேள் இல்லையா?
ஆமா
வருசத்துக்கு 8% வட்டின்னு சொல்லியிருப்பாளே?
ஆமா சொன்னா
வருசா வருசம் வட்டி டான்ணு வந்திருக்கும்னு சொல்லியிருப்பாளே?
ஆமா சொன்னா
நூறு வயசு வரைக்கும் வட்டி வரும்னு சொல்லியிருப்பாளே?
சொன்னா சொன்னா
நாப்பது வயசு மனுசா தெவசம் பண்றா மாதிரி வருசா வருசம் 90,000 ரூபாய தத்தம் பண்ணா 100 வயசுல போனஸோட சேத்து ஒரு கோடியே பத்து லக்ஷம் வரும்னு சொல்லியிருப்பாளே?
ஆமா நீங்க ஏன் எதெல்லாம் கேக்கறேள்?
சொன்னாளே!! என்னிடையும் சொன்னாளே!!
அப்ப நீங்களும் ஜீவன் உமங்ல பணம் போட்டேளா?
நேக்கு என்ன கிருக்கா பிடிச்சிருக்கு
1. கொடுத்த பணத்துக்கு 8% கெடச்சத்தான் அது வட்டி, சம் அஸ்யூர்டுக்கு 8% லோகத்துல எத்தனை பேருக்குப் புரியும்
2. 40 வயசு கிரகஸ்தர், 15 வருஷம் பணம் கட்டறார், சம் அஸ்யூர்ட் பிசாத்து வெறும் 11 லக்ஷ ரூபா தர்றா. அதுக்கே 90 ஆயிரம் ரூபா ப்ரீமியம் கட்டணுமாம்.
3. எல் ஐ சி தரும் போனஸ் சாஸ்வதமில்லை, சரி இன்னிக்கு போனஸே என்னிக்கும் இருக்கும்னே வச்சிப்போம். ப்ளான் 845 ஜீவன் உமங்குக்கு போனஸ் எவ்ளோன்னு insurancefunda. டாட்டு இன்ல பாத்தேன். 15 வருசம் ப்ரீமியம் கட்டணும் மொத்தமா 60 வருசம் பாலிசி காலம், இதுக்கு சிம்பிள் போனஸ் ஆயிரம் ரூவாய்க்கு 60 ரூவா ஒவ்வொரு வருசமும், ஃபைனல் போனஸ் ஆயிரம் ரூவாய்க்கு 3550 ரூபா ஒரு தடவை மட்டும். ஆக சம் அஸ்யூர்ட் 11 லட்சம், சிம்பிள் போனஸ் 39 லட்சம் 60 ஆயிரம், ஃபைனல் போனஸ் 39 லட்சத்து ஐயாயிரம் ஆக மொத்தம் 89,65,000 ரூபா 100 வயசு வரை இருந்தா கிடைக்கும். ஒரு கோடியே பத்து லட்சமெல்லாம் கேசத்துல கூட கிடைக்காது.
சரிங்காணும், 15 வருசத்துக்கு அப்புறம் வருசா வருசம் 88 ஆயிரம் தருவா, 100 வயசுல 90 லட்சம் கிடைக்கறதோன்னோ? அப்ப இன்வெஸ்ட் பண்ணலாமே ஓய்?
சித்த இருங்கோ எக்சலில் போட்டு காட்டறேன்
ஜீவன் உமங்ல வருசத்துக்கு 90 ஆயிரம் போடறதுக்கு பதிலா மாசா மாசம் 7500 ரூபாய்னு 15 வருச முதலீட்டை வேற எடத்துல போட்டேள்னா, (நல்ல மியூச்சுவல் ஃபண்ட்கள்)
55 வயசுல உங்க கிட்டயே 31 லட்ச ரூபா இருக்கும். அதுலேருந்து நீங்களே வருசா வருசம் 88000 ரூபாய எடுத்துண்டு மிச்சத்தை வெறும் 5% வட்டி / வளர்ச்சி தரும் எதுலயாவது (பி எஃப்க்கே கவர்மெண்ட் 8%க்கு மேல தர்றது) இன்வெஸ்ட் பண்ணி வச்சா அந்தப்பணம் வளர்ந்துண்டே போகும், அங்கேருந்து 37 வருசத்துலயே உங்க கையில் 90 லட்சம் இருக்கும். உங்களால 6% வளர்ச்சி முடிஞ்சா இன்னும் சீக்கிரமே ஒரு கோடிய எட்டிடலாம்.
நீர் உருவாக்குன கார்பஸ் (வருசத்துக்கு 88 ஆயிரம் எடுத்தப்புறம்) தரும் வட்டி 88000க்கு மேல வர்றதால வளந்துண்டே போகுமே தவிர குறையாது
இதையெல்லாம் விட இன்னோண்ணும் இருக்கு ஓய், ஜீவன் உமங்க்ல நீர் செத்தா பணம் கிடைக்கும் இல்லேன்னா 100 வயசு வரைக்கும் இருந்தா பணம் கிடைக்கும். வருசத்துக்கு வெறும் 88 ஆயிரத்த வச்சிக்கிட்டு நீர் ஷவரம் கூட பண்ணிக்க முடியாது அப்ப. வேற நல்ல இடத்துல இன்வெஸ்ட் பண்ணேள்னா, உம்ம தேவைக்கு பணம் ரெடியா இருக்கும், ஆத்துல இருக்கறவாளும் நீர் மண்டையப் போட்டாத்தேவலன்னு நினைக்காம இருப்பா..
ரொம்ப நன்னா புரிஞ்சிடுத்து ஓய், ரொம்ப நன்றி
ஜீவன் உமங் அளப்பறைகள்.
S Narayanan
No comments:
Post a Comment