ஒரு குருக்களின் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடந்தது.
உடனே அவர் நகராட்சி அலுவலகத்திற்க்கு போன் செய்தார்.
"ஐயா என் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடக்கிறது.தயவுசெய்து , அதனை அகற்ற ஏற்பாடு செய்யுங்கள்"
நகராட்சி அலுவலகத்தில் போனை எடுத்தவர் நக்கலாகச் சொன்னார்.
"குருக்களே முதலில் இறந்த அந்த கழுதைக்கு செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செஞ்சு முடித்துவிட்டு சொல்லுங்கள் .நாங்கள் வருகிறோம்"
அதற்கு அந்த குருக்கள் சொன்னார்.
"அதற்க்கென்ன, செய்து விடுகின்றேன். இருந்தாலும் அந்த கழுதையோட சொந்தக்காரர்களுக்கு முதலில் சொல்ல வேண்டும் இல்லையா? அதுதான் உங்களிடம் சொன்னேன்"
யாருகிட்டே !!!!
படித்ததில் ரசித்தது
No comments:
Post a Comment