Thursday, February 6, 2020

ஒரு அமர்க்களமான இட்லிக் கடை

சென்னை அசோக் நகர் (உதயம் தியேட்டர்) 18வது அவென்யூவில் அமைந்துள்ள ஒரு அமர்க்களமான இட்லிக் கடை இட்லீஸ்.. பொதுவாக இட்லி, சாம்பார் இட்லி, ஃப்ரைடு இட்லி, சில்லி இட்லி, மினி இட்லி போன்ற வகைகள் தான் கேள்விப்பட்டு இருப்போம் அல்லது சாப்பிட்டு இருப்போம்.. இங்கு பூண்டுக் குழம்பு இட்லி, தயிர் இட்லி, கறிவேப்பிலைப் பொடி இட்லி போன்ற புதிய வெரைட்டிகளின் பெயரைக் கேட்டதுமே அட என வியக்க வைக்கிறது.

மிளகாய் பொடி, கறிவேப்பிலைப் பொடி, எள்ளுப் பொடி, பருப்புப் பொடி, தேங்காய் மிளகாய் பொடி என பல பொடிகளுக்கான பொருட்களை தரமாக தேர்ந்தெடுத்து அவற்றை பாரம்பரிய முறையில் பக்குவமாக நற நறவென அரைத்து இவை அனைத்தையும் இட்லிகள் மீது பரப்பி தருகிறார்கள்.. வெறும் இட்லியே அவ்வளவு சுவையாக இருக்கிறது.! வழக்கமாக இட்லிக்கு தொட்டுக் கொள்ளத் தரும் சட்னி சாம்பாரும் இங்கு கிடையாது.!

அதற்கு பதில் தக்காளிக் குழம்பு, மோர்க்குழம்பு, தக்காளி தனியா சட்னி என வெரைட்டியாக தருகிறார்கள்.! அவ்வளவு அலாதியான சுவை.. அதிலும் நெய் ஒரு ஸ்பூன் ஊற்றி பூண்டுக் குழம்போடு தரும் பொடி இட்லி அதகளம்.! அடுத்தது தயிர் இட்லி.. சீரகம் தாளித்து போட்ட புளிக்காத தயிர் ஊற்றித் தரும் பொடி இட்லி.! போதாத குறைக்கு கரகரவென நாவில் கரையும் ஓமப்பொடி காம்போ.. அடடா என்ன ஒரு ரசனை!

பீட்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளை விரும்புபவர்களின் கவனத்தை கவர பட்டர் பொடி தோசையை பீட்ஸா போல வார்த்துத் தருகிறார்கள்.. அதற்கு பொடிஸா எனப் பெயரிட்டு உள்ளார்கள்.. அதற்கும் ஒரு ஸ்பெஷல் சட்னி உண்டு.. மதியம் வத்தக்குழம்பு சாதம், பருப்பு சாதம், மட்கா தயிர்சாதம், மோர்க்களி, பானகம் என வித்யாசமான சுவை மிகுந்த உணவுகள் இவர்களது சிறப்பு.!

இவர்களின் இன்னொரு ஸ்பெஷல் சேப்பங் கிழங்கு ஃப்ரை.! அடடா அதன் சுவையை நீங்கள் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.. நிச்சயம் அருமையானதொரு ஸ்டார்ட்டர்ஸ் வகை உணவு அது.. கடையை நிர்வகித்து வரும் இளைஞர் உமேஷ் வைத்தியநாதன் இந்த சமையல் வகைகள் அனைத்தும் அவரது தாயாரின் கைப்பக்குவத்தில் உருவான எங்கள் குடும்ப பாரம்பரிய உணவுகள் என்கிறார் மிகப் பெருமையாக.

இட்லிக்கு இவர்கள் உபயோகிக்கும் இட்லி பொடிகளை தனியாகவும் விற்பனை செய்கிறார்கள் அவ்வளவு குவாலிட்டியாக அருமையான ருசியில் கிடைக்கிறது.. நம்ம வீட்டில் செய்யும் இட்லி தோசைக்கும் அவை நிச்சயம் பெருமை சேர்க்கும். வயிற்றுக்கும் பர்சுக்கும் வேதனை தராத கடை இட்லீஸ்.. ஹோம் டெலிவரி வசதி, ஆன்லைன் வசதி உண்டு.. இந்தக்கடை அசோக் நகர் 18வது அவென்யூவில் ஒரு வீட்டில் செயல்படுகிறது.!

வெகு விரைவில் சென்னையில் பல கிளைகள் காணும் என்று சத்தியம் செய்யலாம்.. தரமும் ருசியும் அதற்கு சான்றாக உள்ளது..பதிவினை படிக்கும் நண்பர்கள் அற்புதமான இந்த உணவுகளை ஒருமுறை ருசித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.. விலைப்பட்டியல் போன் நம்பருடன் தந்திருக்கிறேன்.. வித்தியாசமும் காலத்திற்கு ஏற்ற மாற்றமும் பாரம்பரியமும் மிகுந்த ஒரு உணவகம் இட்லீஸ்.

ஆர்டர் செய்ய : 9551604056.
600083, 17, 18th Ave, Sector 10, Sivalingapuram, Ashok Nagar, Chennai, Tamil Nadu

No comments:

Post a Comment