Tuesday, February 4, 2020

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்: 5

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்: 5

• இவரது புத்திக் கூர்மையைக் கண்டு வியந்த கிடாம்பி நாயனார் இவரை, இவரின் உண்மையான ஸ்வரூபத்தை காட்டும் படி பணிக்க, ஆசார்யன் சொல் கேட்டு நடக்கத் திருவுள்ளம் கொண்டமையால் தனது ஆதிசேஷ ஸ்வரூபத்தை வெளிக்காட்டுகிறார். 

• இதனைக் கண்டு கிடாம்பி நாயனார் தானும் பரவசித்து இவர் பால் மேலும் பரிவு காட்டத் துவங்குகிறார். ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபங்களை நன்கு கேட்டறிந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்யனிடம் விடை பெற்றுக் கொண்டு திருவரங்கத்திற்குத் திரும்புகிறார்.

• திருவரங்கம் திரும்பிய அழகிய மணவாள பெருமாள் நாயனாரை கண்டு திருவுள்ளம் பூரித்த அரங்கன், இவரைத் திருவரங்கத்திலேயே இனி எழுந்தருளி இருக்கும் படியும், இனி மேலும் யாத்திரைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் நியமித்தார்.

• இந்தத் தருவாயில், இவரின் சில உறவினர்கள் சில ஆசௌசங்களை இவரிடம் தெரிவிக்க, இவைகள் காலக்ஷேப கைங்கர்யங்களுக்கு இடையூறுகளாக இருந்தமையால், ஆழ்வார்திருநகரியில் இவருடன் திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளில் சத் விஷயம் பயின்றவரான சடகோப யதியிடம் சன்யாசம் பெற்றுக்கொள்கிறார். 

• பிறகு இதை பெரிய பெருமாளிடம் தெரிவிக்க, பெரிய பெருமாள் பிற்காலத்தில் தனது ஆசார்யன் திருநாமத்தையே தான் கொள்ள வேண்டும் என்ற ஆசையினால், அழகிய மணவாள முனி என்ற திருநாமத்தையே இவருக்குச் சாற்றி, காலக்ஷேபம் சாதித்துக் கொண்டு தங்குவதற்கு பல்லவராயன் மடத்தையும் அளித்தருளினார்.

•  உத்தம நம்பி தலைமையில் அணைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் பல்லவராயன் மடத்திற்கு எழுந்தருளி “மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றண்டிரும்” என்று இவருக்குப் பல்லாண்டு பாடினர்.

No comments:

Post a Comment