Thursday, February 6, 2020

பெரியவாஏன்வரவில்லை?

பெரியவாஏன்வரவில்லை?

திரு.பி.டி.ராஜனுக்குபரபரப்பாகஇருந்தது.கசமுசாவென்றுசிலர்பேசியதுகாதில்விழுந்தது.அதாவதுபெரியவாமுன்னரேவந்தாயிற்று 

ஆனால்பொற்றாமரைக்குளக்கரையிலேயேஉட்கார்ந்திருக்கிறாராம்ராஜனுக்குப்புரிந்து விட்டது. ஓடினார் குளக்கரைக்கு. பலநாட்களுக்கு முன் பெரியவா சொன்னதை இவர் மறந்துவிட்டார். அவர்மறக்கவில்லை. "பெரியவங்க இப்படி சோதிக்கலாமா? 

இந்தகோவில்ல பெரியவாளுக்கு இடம் ஒதுக்க நான் யாரு?கோவிலே பெரியவாளுடையது. மீனாஷியே பெரியவங்க!என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார்.அவருடன் வந்தமற்றவர்களும் வணங்கி, அவர் உட்சென்றதும் பின்னால்வர, தயாராக இருந்தார்கள்.பெரியவா வாயிலுக்குள் பிரவேசிக்காமல், பக்கத்தில் ஒதுங்கிக் கொண்டு தலையைத் திருப்பிப் பார்த்தார். அங்கே ஏழைமக்கள் இருந்தார்கள். அவர்களை நோக்கி "உள்ளேபோங்கள்'என்று சைகைகாட்டினார். உடனே போலீஸ் அதிகாரியும்,பிரமுகர்களும் பின்வாங்குகிறார்கள். 

அந்த மக்கள் கூட்டமாக சிறப்புஒதுக்கீடு செய்யப் பட்டஇடத்திற்கு போய் நின்றார்கள். ஆதினகர்த்தர்கள், கவர்னர், முதல் அமைச்சர் இவர்களை விட அந்த அப்பாவிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்! அதன் பிறகே பெரியவா உள்ளே சென்றார். மற்ற பிரமுகர்கள் பின்பற்றினார்கள். கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இதே போல் இன்னொரு நிகழ்ச்சி! .சென்னயிலுள்ளஒரு பிரபல பத்திரிகை அலுவலகத்திற்கு பெரியவா விஜயம் செய்தார். மடத்து சிப்பந்திகள் கூடவே வந்தார்கள்.அங்கு மிக நவீனமான , விலை உயர்ந்த கருவிகள் வங்கி வைத்திருந்தார்கள் .அதையெல்லாம் பெரியவா பார்வையிட்டு அருள் செய்ய வேண்டும் என்பது உரிமையாளர்கள் நினைத்து பாதுகாப்பான பகுதிகளையும், திறந்து விட்டார்கள்.

சிப்பந்திகள்பத்திரிகை தயாராவதை அறியும் ஆவலில் கூட்டமாக உள்ளே நுழைந்தார்கள். வாயிலில் பூர்ணகும்பத்தையேற்றபெரியவா.அங்குள்ளோரிடம் உரையாடியபடி பின்னால் வந்து கொண்டிருந்தார்.
முன்னே சென்ற சிப்பந்திகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். அச்சகத்தின் விசேச பகுதிகளுக்கு, பெரியவாளையும் ,ஒரு சில முக்கியமானவர்களையும் அனுமதித்தால்போதும் என்பது அவர்கள் எண்ணம். கருவிகளைப்பற்றிவிளக்கவேண்டிய அதிகாரி சிப்பந்திகளை அடித்து விரட்டாதகுறையாக பேசி விடுகிறார்.அவர்கள் திரும்பும் அதே சமயம் பெரியவா அங்கு வந்து விடுகிறார். அவரைவரவேற்கிறார்கள் அதிகாரிகள்.

பெரியவா அவர்களைப் பார்த்து, சிரித்தமுகத்துடன்' இதோ,இவாளெல்லாம்வந்திருக்காளே, இவர்களுக்கு புரியறாமாதிரி உன் புதுப்புது மசின்களைப் பற்றி explain பண்ணு, நானும் அவாளை முன்னிட்டு கேட்டுக்கறேன்"என்று சிப்பந்திகளைக் காட்டி சொன்னார். சிரித்துக் கொண்டே தான் சொன்னார்.ஆனால் அந்த அதிகாரிக்கு வேர்த்து விட்டது.தான் அவமானப் படுத்திய அதே சிப்பந்திகளை அழைத்து, அவர்களிப் பார்த்தே கருவிகளைப் பற்றி விளக்கி,இயக்கியும் காண்பித்தார். நடுவில் அவர் பெரியவாளிடம் விளக்க ஆரம்பித்த போதெல்லாம் அவர் 'அவர்களைப்பார்த்தே சொல்லு. அவாளுக்கு புரியறமாதிரி சொல்றது தான் விஸேஷம். அதிலிருந்தே நானும் தெரிஞ்சுக்கறேன்".என்றார்.அதாவது சாமானியருக்கும்யந்திர நுட்பங்களை விளக்கும் திறமை அந்த அதிகாரிக்கு இருப்பதாக அவரைக் கொண்டாடுவது போல் பேசி., தன் மடத்து கௌரவத்தைக் காத்துக் கொண்டு விட்டார்.

அன்றுராமன்,விபீஷணனுக்கு பட்டாபிசேகம் செய்ய லக்ஷுமணனை அனுப்பினான்.விபீஷணன் சீதையை அழைத்து கொண்டு ராமனிடம் வந்த போது வானரர்கள் முந்தியடித்துக் கொண்டு சூழ்ந்து கொண்டார்கள். அவர்களை விபீஷணனின் அதிகாரிகள் அடித்து விரட்டினார்கள்.அப்போது ராமன் விபீசணனை கோபத்துடன் பார்த்து 'என்னை லட்சியம் செய்யாமல் என் எதிரிலேயே என் ஜனங்களை விரட்டுகிறாயா?தடுக்காதே அவர்களை "என்றான்.அதே போன்ற நிலைமையில் தான் பெரியவா சாதுர்யமாக செயல் பட்டார்.
செண்பகமாலையும் கொன்றையும் சூடும் சிவபெருமானே சங்கரசிவா!

No comments:

Post a Comment