Thursday, February 6, 2020

கொத்துமல்லி இலைச்சாறு

தனது கணவனை மரணத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைக்க சூரியனையே உதிக்கவிடாமல் செய்தாள் சத்தியவான் சாவித்திரி!

ஆனால் இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என மருத்துவரால் கைவிடப்பட்டு மரணத்தின் வாசலிலிருந்த தனது சித்தப்பாவை கொத்தமல்லி இலைச்சாறு கொடுத்து காப்பாற்றிய ஒரு அற்புத நிகழ்வு தொடர்பான பதிவு!

(கடந்த(29-11-2018) வருடம் எனக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன்.அதை மீள் பதிவாக இன்று பதிவிட்டுள்ளேன்.)

கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம்

அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் ஓர் கிழிந்த துணிபோல படுத்திருந்தார் வீரமணி தாத்தா...!

உழைத்து மெலிந்த தேகம். 84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய் பழுதாகி போய் மரணத்தின் நாட்களை மருத்துவமனையில் எண்ணி கொண்டிருந்தார்...!

ரவுண்ட்ஸ் வந்த சீஃப் டாக்டர் வீரமணி தாத்தாவின் கைநாடியை பிடித்து பார்த்துவிட்டு மேவாயை தடவியபடியே.... இன்னும் இரண்டு நாள்தான் தாங்குவார் சொந்த காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடுங்க.. வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்க என்று கூறியபடியே அவர் பிள்ளைகளின் பெருங்குரலெடுத்த அழுகையை காதில் வாங்கிக்கொள்ளாமல் அடுத்த நோயாளியை பார்க்க நகர்ந்தார்...!

ஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார் வீரமணி தாத்தா. அவர் மூச்சு எப்போது வேண்டுமானாலும் நின்று விடுவேன் என்று போக்கு காட்டியது.

சொந்தங்கள் எல்லாம் வர ஆரம்பித்து விட்டனர். தாத்தாவை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என்கிற கணத்த மனதோடு...,

லிங்கநாயக்கன் பட்டி அண்ணன் மகளான சரோஜாவிற்கும் தகவல் சென்றது. பதறி அடித்தபடி வீரமணி சித்தப்பா வீட்டிற்கு ஓடினார் சரோஜா அக்கா.

கட்டிலில் மூச்சுவிட சிரமப்பட்டபடி கண்மூடி படுத்திருந்தார் தாத்தா. தம் தங்கை முறையான தாத்தாவின் மகளிடம் விசாரித்தார் அக்கா...

" சாப்பாடு இறங்குதா..?"

"அப்பப்போ கூழாக ஏதாவது கொடுக்கிறோம். கொஞ்சமா உள்ளே போகுது"

"நான் ஒன்னு சொன்னா கேட்பியா தங்கச்சி"

"சொல்லுக்கா... நான் என்ன செய்யனும்...?"

"எப்படியும் இரண்டு நாளில் இறந்திடுவார்னு டாக்கடர் சொல்லிட்டாரு இல்ல. கடைசியா ஒரு முயற்சி செய்து பார்ப்போம்... இன்னில இருந்து இந்த இரண்டு நாளும் வெறும் மல்லிச்சாறு மட்டுமே கொடுப்போம். அது கழிவுகளை வெளியேத்தி புது ரத்தத்தை ஊற வைக்கும். சித்தப்பா எழுந்து உட்காருவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!" சரோஜா அக்காவின் கண்களில் அத்தனை உறுதி.

அவர்கள் குடும்பத்தில் சரோஜா அக்கா மீது மிகுந்த மரியாதை உண்டு. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். அந்த குடும்பத்தின் ஆணிவேர் வீரமணி தாத்தா. அவர் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்தால் அதுபோல வேறு சந்தோசம் உண்டா..?

அக்காவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டனர். வீட்டில் மல்லிச்சாறு தயாரானது. ஓர் எதிர்பார்ப்போடும், பரபரப்போடும் அங்கும் இங்கும் ஓடினர். தாத்தாவை மடியில் கிடத்தி மால்லிச்சாறை அவர் வாயில் சிறிது சிறிதாக புகட்டினர்.

இரண்டுநாள் முழுக்க மல்லிச்சாறு மட்டுமே..! இடையிடையே கொஞ்சமாய் பழச்சாறும். 

டாக்டர் விதித்த கெடு இன்றோடு முடிகிறது. நாளை விடியலில் தாத்தா உயிரோடு இருப்பாரா என்கிற பதைபதைப்பில் உறவினர்கள் எல்லாம் தாத்தாவையே சுற்றி வந்தனர். 

இரவு உறங்கி போனது...!

மூன்றாம் நாள் விடியலில் நெஞ்சு திக்... திக்.. என அடித்து கொள்ள சொந்தங்கள் தாத்தாவை நெருங்கி சென்றனர். 

கண்மூடி படுத்திருந்தவர்..... ஓர் இருமலோடு விழித்து கொண்டார். 

அம்மா... அப்பா முழிச்சிட்டார்மா....!

மூத்த மகளின் சந்தோச குரல்கேட்டு தூணில் சாய்ந்து விசும்பிக்கொண்டிருந்த அந்த தாய் சேலை முந்தானையில் முகத்தை துடைத்தபடி....,

"முழிச்சிட்டீங்களா என் ராசா.... என்று பெருங்குரலெடுத்து ஆனந்தத்தில் அழுதார். 

உறவினர்கள் எல்லாம் சந்தோசத்தில் பரபரத்தனர்.

ஓடு... மல்லிஜுஸ் எடுத்துட்டு வாங்க.. ஐயாவுக்கு கொடுப்போம். எங்கிருந்தோ குரல் ஒலித்தது....,

மீண்டும் ஓர் இருமல் இருமியபடி தாத்தா எழுந்து உட்கார்ந்தார். 

"ஏன் புள்ள என்ன பார்த்து அழுதுகிட்டு நிக்கித. எதுக்கு இம்புட்டுபேரு வந்திருக்காங்க" தன் மனைவியை கேள்வியோடு பார்த்தார் வீரமணி  தாத்தா.

" ம்ம்ம்.... உமக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கத்தான் எல்லோரும் வந்திருக்காக.." - கிழவி சந்தோசத்தில் கிண்டலடித்தது. அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் எதிரொலித்தது.

ஆம்.... இங்கு புகைப்படத்தில் என்னுடன் இருப்பவர்தான் வீரமணி தாத்தா. இந்த சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றும் அவர் காலை நேரம் மல்லித்தழை நீரோடுதான் விடிகிறது. 

இந்த எண்பத்தாறு வயதிலும் ஆரோக்கியமாய் இருக்கிறார். நாம் பார்க்கசென்ற நேரம் மனிதர் கட்டிலில் ஒய்யாரமாய் படுத்திருந்தார். எவர் துணையுமின்றி எழுந்து நடமாடுகிறார்.

அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது தான் மல்லிச்சாறால் மரணத்தில் இருந்து மீண்ட கதையை விலாவரியாய் சுவாரஸ்யமாய் விளக்கினார்.

" எம்புள்ள சரோஜா மட்டும் இல்லேன்னா நான் இந்நேரம் போய் சேர்ந்து ஒன்றரை வருசம் ஆகியிருக்கும். அவ சொல்லி கொடுத்தமல்லித்தழை தண்ணிய குடிச்சுத்தான் இன்னிக்கு வரைக்கும் உயிர் வாழ்ந்திட்டு இருக்கேன்." தாத்தாவின் குரல் நெகிழ்ந்தது.

தொடர்ந்து..." இந்த மல்லிசாறை எல்லா ஏழை,பாளைகளும் குடிக்கோணும். டாக்டர் கிட்டபோயி ஆயிரகணக்குல செலவு பண்ணியும் குணமாகத என் நோய் இந்தமல்லிசாறால குணமாயிட்டுதே. எனக்கு இருந்த சுகர்நோயும் இப்ப இல்ல. மல்லிச்சாறு பத்தி எல்லா மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கய்யா.." 

தாத்தா இதை ஒரு வேண்டுகோளாகவே எங்களிடம் வைத்தார்.

" தாத்தா... சாரோஜா அக்கா இப்போ தனி ஆள் இல்ல. நாங்க எல்லாம் அவங்க பின்னால இருக்கோம். அக்காவோட இந்த மல்லிச்சாறு மகத்துவத்தை மக்கள் கிட்ட கொண்டு சேர்க்க துணையா இருப்போம்..!"

தாத்தாவிற்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு விடைபெற்று கிளம்பினோம்.....,

வானத்தில் சூரியனின் கதிர்கள் முகத்தில் பட்டு ஒர் புதிய வெளிச்சத்தை உணர்த்தியது...!

இப்பவாவது எல்லோரும் மல்லிச்சாறை குடிச்சா நல்லது இல்லைனா, அடுத்து விஜய்யை வைத்து மல்லிச்சாறு குடிங்கனு எவனாவது படம் எடுத்துறப்போறான்.!

இந்த கொத்தமல்லி இலைச்சாறு எப்படி தயாரிப்பது என்பதை இயற்கை மருத்துவம் முக நூல் பக்கத்தில் பார்த்தேன்.அதை அப்படியே கீழே பதிவிட்டுள்ளேன்


அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?:

நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,

தேங்காய் - 1 ,

நாட்டு சர்க்கரை - தேவையான அளவு 

சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

இதன் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம். 

இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது. 

(1) வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு,உப்பும்,மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.

(2)கொத்துமல்லி இலைச்சாறுடன்,பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்.

(3)கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.

 இதை தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.

உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.

வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்.

கல்லீரலை பலப்படுத்தும்.பித்தம் கட்டுக்குள் இருக்கும்.

இதை தயார் செய்வது மிகவும் எளிதானது.

இதை அனைவரும் பருகலாம்,

தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.

கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து  உபயோகிக்கலாம். 

ஆனாலும் கொத்துமல்லி இலைச்சாறுதான் சிறந்தது.

நன்றி: இயற்கை மருத்துவம் முக நூல் பக்கம்.

No comments:

Post a Comment