Wednesday, February 5, 2020

கைலாஷ் மானசரோவர்

நமக்கெல்லாம் தெரியும் கைலாஷ் மானசரோவர் திபெத் பகுதியில் உள்ளது. ஒரு முறை டாக்டர் சுப்ரமணியன் ஸ்வாமி மஹாபெரியவாளை தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்பொழுது  மஹாபெரியவா ஸ்வாமியிடம் நீ சைனா நாட்டிடம் நம்முடைய பக்தர்கள் கைலாஷ் மனோராவேர் செல்ல அவாளை வழியை திறந்து விடும்படி கேளு என்றார்.

உடனே சுவாமி அது கஷ்டம் பெரியவா. அவா  நம்ம நாட்டோட பகுதிகளை பிடித்து வைத்துக்கொண்டு நம்முடன் சண்டை போடுகிறார்கள். நம்முடைய அரசாங்கமும் அதற்கு சம்மதிக்காது என்றார். 

அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ போய் நம்முடைய அரசாங்கத்திடம் பேசு. சீனாக்காரன் கிட்டயும் பேசு. எல்லாம் நல்ல படியா முடியும்  என்றார்.

டாக்டர் சுவாமி அரைகுறை நம்பிக்கையுடன் அப்போதைய பாரத பிரதமர் மொரார்ஜி  தேசாயிடம் இந்தவிஷயம் பற்றி பேசினார். ஆனால் மொரார்ஜி தேசாய் இதற்கு சம்மதிக்கவில்லை. ஏன் தெரியுமா சுவாமி சீனாவுக்கு சென்றால் உன்னை சரியாகக்கூட வரவேற்க மாட்டார்கள். அவமானப்படுவாய் என்றார்.

உடனே ஸ்வாமி சொன்னார் எனக்கு உத்திரவு கொடுத்தது காஞ்சி மஹாபெரியவா. அதனால் அவரது இறை அற்புதத்தால் நல்லதே நடக்கும் என்று சொல்லி சம்மதம் வாங்கி விட்டார். 

ஏனென்றால் மொரார்ஜி தேசாயும் மஹாபெரியவாளின் பக்தர்.
ஸ்வாமி சைனா சென்றார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது .இரு நாட்டில் உள்ளவர்களும் ஸ்தம்பித்து போனார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று. அந்த பரமேஸ்வரனுக்கே வெளிச்சம். இது ஒன்றும் இல்லை.

சுவாமி சைனாவில் இருந்து கிளம்பி இந்தியா வருவதற்குள் சைனா அகில உலக அளவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதுதான் இந்தியாவின் பக்தர்களுக்காக தங்களுடையநாட்டின் எல்லையை திறந்து விட முடிவு செய்துள்ளது. டாக்டர் ஸ்வாமியின் முயற்சியை பாராட்டி வாசகங்களும் வெளி வந்துள்ளன.

சுவாமி திரும்ப இந்தியா வருவதற்கு கேட்காமலேயே இந்திய அரசாங்கம்  ஹெலிகாப்டர் கொடுத்து ஸ்வாமியை அழைத்து வந்தது. 

ஸ்வாமி திரும்ப இந்தியா வந்தவுடன் அவரிடம்  அன்றைய பிரதமர் கேட்டாராம் “என்ன ஸ்வாமி சீனாக்காரர்களுக்கு மந்திரம் ஏதாவது செய்தாயா? எப்படி அவர்கள் எல்லையை திறந்து   விட சம்மதித்தார்கள்.. ஸ்வாமி சொன்னாராம் மஹாபெரியவா சொன்னார் செய்தேன் என்றாராம்.. தனி மனித அற்புதங்கள் தவிர ஒரு நாட்டின் தலைவர்கள் மனதையே மாற்றி செய்த அற்புதத்தை என்னவென்று சொல்ல.

படைத்தவன் நினைக்கிறான் படைத்தவன் கேட்கிறான்
நினைத்ததும் நடக்கும் கேட்டதும் கிடைக்கும்🙏🏻

No comments:

Post a Comment