Wednesday, February 5, 2020

.ராமா ராமான்னு சொல்லு!"

.ராமா ராமான்னு சொல்லு!"

"யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன;தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;"

(பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்)

கட்டுரையாளர்-ஆர்.வீழிநாதன்

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நன்றி-போன 24-05-2016 தேதியிட்ட சக்தி விகடன்.

"பல வருஷங்களுக்கு முன்னே,காஞ்சி மஹா ஸ்வாமிகள், மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஆனந்ததாண்டவபுரத்தில் எழுந்தருளி இருந்தார். அப்போது, ஆந்திராவைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் மஹானை தரிசிப்பதற்காக அங்கே சென்றிருந்தார்.

அப்போது அங்கு வந்திருந்த சிறுவர்களிடம் நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்து,அதில் ராம நாமம் எழுதிக்கொண்டு மாலையில் வரும்படி சொல்லியனுப்பினார் மஹான். அதே போல், மாலையில் அந்தச் சிறுவர்கள் ராம நாமம் எழுதிக்கொண்டு வந்து மஹானிடம் தந்தனர்.

அங்கிருந்த சிறுவர்களில் ஒருவனைப் பார்த்து ராம நாமம் சொல்லுமாறு பணித்தார் மஹான்.

பக்கத்தில் இருந்தவர்கள் தயங்கியவாறு, "அவனால் பேசமுடியாது ஸ்வாமி"என்றனர்.

அவர்களைக் கையமர்த்தித் தடுத்த மஹான், மீண்டும் அந்தச் சிறுவனைப் பார்த்து," ம்...நீ ராம நாமம் சொல்லு!" என்று பணித்தார்.

என்ன ஆச்சரியம்! வாய் பேச இயலாத அந்தச் சிறுவன் முதலில் சற்று திணறிவிட்டு,பின்பு படிப்படியாக தெளிவான உச்சரிப்பில் ராம நாமம் சொல்லத் தொடங்கிவிட்டான்.

இதை நேரில் பார்த்து அனுபவித்த அந்த பண்டிதர் பின்னர் ராமாயண உபன்யாசம் தொடங்கியபோது, பிரார்த்தனை ஸ்லோகமாக,

"எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையோ, எந்த மஹானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ, அந்த சந்த்ரிகாமௌளியான என் குருநாதரை   நமஸ்கரிக்கிறேன்" என்று பொருள்படும் வகையில்....

"யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன;

.தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;"

என்று பாடினார்.

No comments:

Post a Comment