Wednesday, February 5, 2020

சர்க்கரை நோய் தீர்க்கும் எம்பெருமான்:

ஹிந்துக் கோயில்களை அறிவோம்: # 01

சர்க்கரை நோய் தீர்க்கும் எம்பெருமான்:

தஞ்சாவூர் - திருவையாறு சாலையில், தஞ்சாவூரிலிருந்து 26 கிமீ தொலைவில் உள்ளது கோயில் வெண்ணி. இங்கிருக்கும் சிவபெருமான் வெண்ணி கரும்பேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். தீராத சர்க்கரை நோய் உள்ளவர்கள் இங்கே ரவையும் சர்க்கரையும் கலந்து சிவபெருமானுக்குப் படைக்கலாம். இது பின்னர் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்படும். 

வெண்ணி கரும்பேஸ்வரப் பெருமான் சௌந்திர நாயகி அம்மனிடம் திருக்கோலம் கொண்டுள்ள புராதனக் கோயில் இது. 

இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். இதனுடைய பூர்வீகப் பெயர் திருவெண்ணியூர் ஆகும்.

திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் ஆகிய இருவரும் இந்தப் பெருமான் மீது பாடல் பாடியிருக்கிறார்கள். 

பெரும்பாலான ஹிந்துக்களுக்கு விடுமுறை நாட்களில் சினிமா பார்ப்பதற்கும், அரசியல் பேசுவதற்கும் மட்டுமே நேரம் இருப்பதால் இந்தக் கோயிலும் கவனிப்பாரற்று இருக்கிறது. காலை 8 முதல் 10 மணி வரையும், பின்னர் மாலை 5.30 - 7.30 மணிவரையுலும் மட்டுமே இந்தக் கோயில் திறக்கப்படுகிறது. 

கோயில் செல்ல விருப்பமுடையவர்கள் ராஜா குருக்களை 96267 69424 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய வருகை மற்றும் வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். 

ஓம் நமச்சிவாய !! தென்னாட்டுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! Thanks Ram Sridhar.

No comments:

Post a Comment