Tuesday, February 4, 2020

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்:4

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்:4

• திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயர் இவ்விருவரையும் திருவேங்கடமுடையானிடம் அழைத்துச் செல்ல, இவர்களைக் கண்டு போர உகந்த திருவேங்கடமுடையான் தீர்த்தம் ஸ்ரீ சடகோபம் மற்றும் பிரசாதங்களை தந்தருளினார்.

•  இதனை பெற்றுக் கொண்டு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் , திருவேங்கடமுடையானிடம் பிரியா விடை பெற்று கிளம்பினார்.

• இவர் காஞ்சிக்கு எழுந்தருளி, தேவப்பெருமாளை மங்களாசாஸனம் செய்தார். தேவப்பெருமாள் இவரை எம்பெருமானார் என்று கொண்டாடி பிரசாதம் ஸ்ரீ சடகோபம் உள்ளிட்டவைகளை தருகிறார்
மணவாளமுனிப்பரன்– காஞ்சிபுரம்

• பின்னர் ஸ்ரீபெரும்புதூர் சென்று எம்பெருமானாரின் வடிவழகில் மூழ்கி எம்பெருமானாருக்கு மங்களாசாஸனம் செய்கிறார்.

• காஞ்சிக்குத் திரும்பிய இவர், கிடாம்பி ஆச்சான் திருவம்சத்தில் தோன்றியவரான கிடாம்பி நாயனாரை அடைந்து ஸ்ரீ பாஷ்யம் காலக்ஷேபம் கேட்கத் துவங்குகிறார். 

• இந்த வேளையிலே இவரை சிலர் தர்க்க வாதத்துக்கு அழைக்க, ஆசார்யன் தன்னை பகவத் விஷயத்தில் மட்டும் ஈடுபடச் சொன்னதைச் சுட்டிக் காட்டி , மறுத்துவிடுகிறார். 

• பின் , சில நலன் விரும்பிகள் பணிக்க, வாதம் செய்து வாதிகளுக்கு தக்க விளக்கங்களைக் கொடுக்க, அவர்களும் இவரின் மேன்மை கண்டு கொண்டாடிச் செல்கிறார்கள்.

No comments:

Post a Comment