ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்:3
• திருவரங்கத்திலே சிலகாலம் கழித்துக்கொண்டு எழுந்தருளி இருந்த இவரை, நம்பெருமாள் திருவரங்கம் திருப்பதியை இருப்பாக கொள்ளும்படிக்கும் ஆழமான சம்பிரதாய அர்த்தங்களை அடியார்களுக்கு அளித்தருளும் படியும் நியமிக்க மிக்க மகிழ்ந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், துலுக்கர்கள் படை எடுப்பால் தொலைந்த கிரந்தங்களைச் சேகரிக்க துவங்குகிறார் .
• உத்தம நம்பியின் கைங்கர்யங்களிலே இருக்கும் குறைகளை இவரிடத்தில் விண்ணப்பம் செய்த பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமியை, உத்தம நம்பியை திருத்திப் பணிக்கொள்ளுமாறு நியமனம் செய்கிறார்.
• திருவேங்கடத்திற்கு (திருமலை திருப்பதி) மங்களாசாசனம் செய்ய திருவுள்ளம் கொண்ட இவர், பொன்னடிக்கால் ஜீயரோடு திருவேங்கட யாத்திரை மேற்கொள்கிறார்.
• செல்லும் வழியிலே திருக்கோவலூர் மற்றும் திருக்கடிகை (சோழசிம்மபுரம்/சோளிங்கர்) கை தொழுகிறார். திருமலையிலே, எம்பெருமானாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயர் ஸ்வாமி ஒரு கனவு காண்கிறார்.
• அந்த கனவிலே ஒரு க்ருஹஸ்தர் பெரிய பெருமாளை போன்று திருமலை அளவுக்கு நீண்டு படுத்துக்கொண்டு இருக்க அவரது திருவடிவாரத்தில் ஒரு சந்நியாசி இருந்து பணிவிடை செய்து கொண்டிருக்கிறார்.
• அந்தக் கனவிலே இவர்கள் யாரென்று ஸ்ரீவைஷ்ணவர்களை வினவ, கிடப்பவர் ஈட்டுப் பெருக்கரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்றும் அவர் திருவடிகளில் இருப்பவர் அவரது ப்ராண சுக்ருதான (மூச்சுக்காற்று) பொன்னடிக்கால் ஜீயர் என்றும் தெரிவித்தனர்.
• இதனைத் தொடர்ந்து திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயர் சுவாமி தானும் கண் விழித்துக்கொண்டு இவ்விருவரும் விரைவில் அப்பனுக்குப் பல்லாண்டு பாட வரவிருப்பதை அறிந்து, வரவேற்பதற்குத் தக்க சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தார்.
• அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தானும் முறையே திருமலை ஆழ்வார் (திருவேங்கடமாமலை), கோவிந்தராஜன் மற்றும் ந்ருசிம்ஹனைத் தொழுது திருவேங்கடம் வந்தடைந்தார்.
+91 99629 83634 left
No comments:
Post a Comment