Tuesday, February 4, 2020

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்: 2

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்: 2

• இவரது வைபவங்களைக் கேட்டறிந்த அழகிய வரதர் என்னுமவர் இவரின் முதல் சீடராய் வந்தடைகிறார். அழகிய வரதர் ஆசார்யனுக்கு அடிமை செய்யும் பொருட்டு துறவு புகுகிறார். அவருக்கு மணவாள மாமுனிகள் “வானமாமலை ஜீயர்” (அழகிய வரதரின் ஊர் வானமாமலை ஆதலால்) என்றும் பொன்னடிக்கால் ஜீயர் (இவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை வந்தடைந்தாரோ மணவாள மாமுனிகளின் சீடர்கள் எண்ணிக்கை பெருகிற்று ஆதலால் செம்பொற்கழலடி செல்வா பலதேவா என்னுமாப்போலே) என்றும் திருநாமம் சாற்றியருளினார் .

• ஆசார்யனின் திருவுள்ளத்தை நினைவு கூர்ந்த இவர், ஆழ்வாரிடம் நியமனம் பெற்றுக்கொண்டு திருவரங்கத்திற்குத் தரிசன ப்ரவர்த்தகராய் எழுந்தருளுகிறார்.

• திருவரங்கம் செல்லும் வழியிலே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார்க்கும், மாலிரும்சோலை அழகர்க்கும் மங்களாசாசனம் செய்தார்.

• திருவரங்கம் சென்றடைந்த பின், காவேரி கரையிலே மணவாள மாமுனிகள் நித்யகர்மாவை அனுஷ்டிக்கிறார். அச்சமயம் திருவரங்கத்திலே எழுந்தருளியிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் கோஷ்டியாய் பெரிய ஜீயரை எதிர்கொண்டு அழைத்து ஆண்டாள், உடையவர், நம்மாழ்வார், ப்ரணவாகார விமானம், சேனை முதல்வர், கருட பகவான், பெரிய பிராட்டியார், பெரிய பெருமாளை முறையே சேவை செய்து வைத்தனர். உடையவரை வரவேற்றார் போலே வரயோகியையும் வரவேற்று இவருக்குத் தீர்த்த ப்ரசாதங்கள் மற்றும் ஸ்ரீசடகோபம் அருளினார் திருவரங்கநகரப்பன் .

• இதனைத் தொடர்ந்து இவர் பிள்ளை உலகாரியன் திருமாளிகைக்குச் சென்று பிள்ளை உலகாரியனையும் அவர் திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரையும் அவர்கள் ஸம்ப்ரதாயத்திற்காக ஆற்றிய கைங்கர்யங்களை எண்ணி கொண்டாடி மகிழ்ந்தார்.

No comments:

Post a Comment