Tuesday, February 4, 2020

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்: 1

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்: 1

• பெரிய பெருமாள் திருவருளால் ஆழ்வார்திருநகரியிலே ஆதிசேஷனே வரயோகியாய் திருவவதாரம் செய்தருளினார்.

• இவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்திலே இவரது தந்தையார் இடத்திலே வேதாத்தியயனம் செய்து சாமான்ய சாஸ்திரங்களையும் கற்றுத் தேறுகிறார். நாளடைவிலே திருமணமும் செய்து வைக்கப் படுகிறார்.

• திருவாய்மொழிப் பிள்ளையின் வைபவங்களைச் செவியுற்று ஆழ்வார்திருநகரிக்குத் திரும்பிய இவர், திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைத் தஞ்சம் அடைகிறார். 

• இவருக்கு ஓர் திருமகனார் பிறக்க , அவருக்குத் திருநாமம் சாற்றி அருளவேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளையை ப்ரார்த்திக்கிறார். திருவாய்மொழிப் பிள்ளை , இராமானுச நூற்றந்தாதியிலே இராமானுச என்று 108 முறை வருவதால், அந்தத் திருநாமமே உகந்ததென்று சாதித்தருளி, இவரது திருக்குமாரருக்கு “எம்மையன் இராமானுசன் ” என்று திருநாமம் சாற்றி அருளுகிறார்.

• திருவாய்மொழிப் பிள்ளை இன்பமிகு விண்ணாடு (பரமபதம்) எய்தியபின், இவரே ஸத் ஸம்பிரதாய ப்ரவர்த்தகர் ஆகிறார்.

• அருளிச்செயலிலே குறிப்பாக திருவாய்மொழியிலே மற்றும் ஈடு 36000 படியிலே தேர்ந்தவர் ஆகும் இவர், அவைகளுக்கான ப்ரமாணங்களையும் திரட்டி அவற்றை பதிவும் செய்கிறார்.

No comments:

Post a Comment