Tuesday, February 4, 2020

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்: 10

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்: 10

• ரஹஸ்ய கிரந்தங்களுக்கு உரை எழுதத் திருவுள்ளம் கொண்ட மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி, தத்வ த்ரயம் மற்றும் ஸ்ரீ வசனபூஷணத்திற்கு வேதம், வேதாந்தம், புராணங்கள், அருளிச் செயல் போன்றவைகளைக் கொண்டு பரக்க உரை எழுதினார். 

• இவற்றைத் தொடர்ந்து இராமானுச நூற்றந்தாதி, ஞான சாரம் மற்றும் ஆசார்யனேயே அனைத்துமாய் உணர்த்தக்கூடிய ப்ரமேய சாரம் உள்ளிட்டவைகளுக்கு உரை அருளிச்செயதார் .

• திருவாய்மொழியின் சொற்களையும் பொருளையும் தொகுத்துச் சுருங்க அளிக்கும்படிக்குச் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய ஜீயரை ப்ரார்த்திக்கத் திருவாய்மொழி நூற்றந்தாதி என்னும் வெண்பா அமைப்பிலுள்ள நூறு பாசுரங்களை சாதித்தார். வெண்பா என்பது கற்க எளிமையாக இருப்பினும் அமைக்கக் கடினமான ஒன்று. 

• அதிலும் இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதியில் ஒரு பதிகத்தின் முதல் மற்றும் இறுதிச் சொற்களே பாசுரத்தின் முதல் மற்றும் இறுதிச் சொற்களாய் வைத்து, முதல் இரண்டு வரிகளில் பதிகத்தின் பொருளையும் அடுத்த இரண்டு வரிகளில் நம்மாழ்வார் விஷயமான கொண்டாட்டத்தையும் வைத்து அமைத்துள்ளார்.

• பூர்வர்கள் சாதித்த விஷயங்கள் அனைத்தையும் பதிவிட்டுச் சாதிக்கும் படி சில ஸ்ரீவைஷ்ணவர்கள் ப்ரார்த்திக்க, மாமுனிகள் தானும் ஆழ்வார்கள் திருநக்ஷத்ரம் மற்றும் திருவவதார ஸ்தலங்கள், திருவாய்மொழியின் ஏற்றம், திருவாய்மொழி வ்யாக்யானங்களின் ஏற்றம், அவைகளைச் சாதித்தவர்களின் விவரங்கள், பிள்ளை உலகாரியனின் திருவவதாரம் மற்றும் ஏற்றம், சீர் வசனபூஷணத்தின் ஏற்றம் , ஆசார்யனுக்கு ஆற்றும் தொண்டின் ஏற்றம் போன்றவற்றை எடுத்துரைக்கக் கூடிய ப்ரபந்தமான உபதேச ரத்தின மாலையைச் சாதித்தார்.

No comments:

Post a Comment