Tuesday, February 4, 2020

வடநாட்டு திவ்ய தேசங்கள்..

108 திவ்ய தேசம்..

இனி வடநாட்டு திவ்ய தேசங்கள்..

96-வது தேசம் திரு அயோத்தி.

உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகரமாகிய லக்னோ நகரத்திலிருந்து வாரணாசி செல்லும் பாதையில் பைசாபாத் அருகே அமைந்துள்ளது.

ஸ்ரீராமன். சக்கரவர்த்தி திருமகன். இரகு நாயகன். 
தாயார்---சீதாபிராட்டி.
💎💎💎💎💎💎💎💎💎💎💎
அயோத்யா என்றால் வெல்லமுடியாத அழகு வாய்ந்ததென்று ஒரு பொருள் உண்டு.. கருட பஞ்சாசத்தில் ஸ்ரீதேசிகரும் பெரிய திருவடியின் பார்வையை அயோத்யா என்கிறார். ஜெயிக்க முடியாத அழகு வாய்ந்ததாம் அவர் திருஷ்டி...

அயோத்தியில் எங்கு பார்த்தாலும் ராம- சீதா பிராட்டியின் ஆலயங்கள் .. எங்கும் ராமதாசர்கள் ராமபஜனையை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கின்றனர்.
ஸ்ரீ ரகுநந்தனுக்கு காகுஸ்தன் என்றொரு திருநாமமுண்டு. இஷ்வாகுவின் பேரனாகிய புரஞ்ஜயன், தேவாசுர யுத்தத்தில், தேவர்கள் சார்பில் யுத்தம் செய்து வெற்றி தேடித் தந்தவன். அந்தப் போரில்,தேவேந்திரன் புரஞ்ஜயன் கோரியபடி அவனுக்கு ரிஷப வாகனமாயிருந்தான்...
🔊🔊🎶🎶🎶🎶🎶🔊🔊🔊🔊🔊

ரிஷபத்தின்( ககுத்) முகப்பின் (ஸ்த) மேல் ஏறியதால், ககுஸ்தன் என்ற பட்டத்தைப் பெற்றான் புரஞ்ஜயன்.. அந்த வம்சத்தில் அவதரித்ததால் ஸ்ரீராமரை காகுஸ்தன் என்ற திருநாமம் வந்தடைந்தது.

உதங்கமா முனிவருக்குப் பகைவனாக இருந்த துந்து வாசுரனை 21 ஆயிரம் பேரோடு சென்று சம்ஹரித்ததால் துந்துகுமாரன் என்ற வீரநாமம் பெற்றவனும் ஸ்ரீராமபிரானின் மூதாதையர் தான் ...அந்த அசுரன் மூச்சு விட்டாலே எதிரிகள் வெந்து மடிந்து கொண்டிருந்தார்கள் ..அப்பேர்ப்பட்ட அசுரனை அழித்தவன் துந்து குமாரன்.

தந்தை வயிற்றில் பிறந்த மாந்தாதாவுக்கு இந்திரன் தன் பவித்திர விரலைச் சூப்பக்கொடுத்தான்.. அந்த விரலிலிருந்து அமிர்தம் பெருகியது. குழந்தை ஒரே நாளில் ஐந்து வயது பாலகனாகியது.. பூமண்டலம் முழுவதையும் ஒரே குடையின் நிழலில் ஆண்ட மாந்தாதா ஸ்ரீராமனின் மூதாதை.
🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

மாந்தாதாவின் புதல்வன் அம்பரீஷன். அம்பரீஷன் பேரன் ஹரிதன்.. அவன் காலத்தில் பாதாள உலகத்தில் மௌனேயர் என்ற ஆறு கோடி கந்தர்வர்கள்,, நாககுலத்தாரின் ஆட்சியைப் பறித்துக் கொண்டனர்.. நாகர்கள் ஸ்ரீமந் நாராயணனிடம் முறையிட.... அவர், மாந்தாதாவின்மகன் புருகுச்சன் (பாட்டன் பெயரே இவனுக்கும் சூட்டியிருந்தனர் ),உடலில் நான் ஆவேசித்து அவர்களை அடக்குகிறேன்--என்று திருவாய் மலர்ந்தருளினார்.

நாகர்களின் சகோதரி நர்மதை.. அவளை புருகுச்சனின் பத்தினியாக்கினார்.. புருகுச்சன் கந்தர்வர்களை வென்று( திருமால் அவன் தேகத்தில் ஐக்கியமாகியிருந்தார் ) . மைத்துனர்களின் அரசை மீட்டுக் கொடுத்தான்..நர்மதையின் பெயரை உச்சரித்தால் சர்பத்தால் ஆபத்து ஏற்படாது  என்ற வரத்தையும் நாகர்கள் வழங்கியிருந்தனர்... 
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
நர்மதையின் பேரனான அனரண்யனை இராவணன் திக் விஜயம் செய்யும்போது போரில் கொன்றான்.. அனரண்யனின் பேரனின் பேரன்தான் திரிசங்கு..

திரிசங்குவின் குமாரன்தான் சத்தியத்தை கொள்கையாகக் கொண்ட அரிச்சந்திரன்.. அரிச்சந்திரனின் பேரன் ஹரிதன்.. ஹரிதனுக்கு ஒரு பெண்தான். அவள் பெயர் சஞ்சு..

சஞ்சுவுக்கு விஜயன், வசுதேவன் என்று இரண்டு மைந்தர்கள்.. விஜயனின் பேரன் பாஹு..இந்த பாஹு மன்னன் ஹேஹயர்களால் வெல்லப்பட்டு கர்ப்பிணியான மனைவியுடன் கானகம் சென்றான்..
பாஹுவின் மற்றொரு துணைவி கர்ப்பத்திலுள்ள குழந்தை அழிய விஷம் கொடுத்தாள்... ஆனால், கருவிலிருந்த பிள்ளை சாகாமல் ஏழு ஆண்டுகள் வயிற்றிலேயே இருந்தது... 

பாஹு மன்னன் வயோதிகமானதால் மரணமடைந்தான்..
கர்ப்பவதியான பார்யை தானும் உடன்கட்டை ஏற முற்பட்டாள்.. அருகிலுள்ள ஆசிரமத்திலிருந்த ஔர்வ மாமுனிவர் ,,'பெண்ணே ! தற்கொலை பாபம். உன் வயிற்றிலிருக்கும் குமாரன் அனேக யாகங்களைச் செய்து கீர்த்தியடையப் போகிறான்.. அவனை அழிக்காதே 'என்று ஞான திருஷ்டியில் பார்த்துச் சொன்னார்.

அவள் மனம் மாறினாள்.. 

முனிவரின் பாதுகாப்பில் நஞ்சுடன் குழந்தை பிறந்தது.. விஷத்தோடு பிறந்ததால் சகரன்(ஸகரன்) என்று பெயர் சூட்டினர்...மகரிஷி அவனுக்கு உபநயனம் செய்து சகல வேத சாஸ்திரங்களையும் புகட்டினார். 
🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹

ஸகரன் வளர்ந்ததும் தாயிடமிருந்து விவரம் அறிந்து ஹேஹய வம்சத்தை அழித்தான்.

சகரனின் பேரன் அம்சுமான்.. அம்சுமானின் பிள்ளை திலீபன்.. 

திலீபச் சக்கரவர்த்தியின் புதல்வன் பகீரதன்(பாகீரதன்).

(கங்கை கதையை -- நாளை பதிவிடுகிறேன்-- தீப ஒளியை முன்னிட்டு...)
↘↘↘↘↘↘↘↘↘↘↘↘↘
பகீரதன்தான் தவம் செய்து கங்கையை பூலோகத்துக்குக் கொணர்ந்தவன்.. அவனது வம்சத்தில் பிறந்த ருதுபர்ணனிடம்தான் நளச்சக்கரவர்த்தி தேரோட்டியாக இருந்து 'அக்ஷஹிருதயம்' என்ற சூதாட்டக் கலையை கற்றுத் தேர்ந்தான்.
(நளன்-- தமயந்தி கதையை ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்)

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

ருதுபர்ணனின் பேரன் சௌதாசன்..இவன மனைவி மதயந்தி. பத்தினிப் பெண்களின் வரிசையிலுள்ளவள். இவளது வம்சாவளியில் பிறந்த கட்வாங்கனும் தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் கோரியபடி அவர்கள் பக்கமிருந்து போரிட்டு வெற்றி தேடித்தந்தவன்.

தேவர்கள் வரமொன்று அளிப்பதாக கூறினர், ''தன் ஆயுள் எவ்வளவு?''என்று கேட்டான் கட்வாங்கன்.. 'இன்னும் ஒரு முகூர்த்த காலம்' என்று அவர்கள் கூற,, உடனே பூலோகம் திரும்பி, எம்பெருமானை தியானித்து மோட்சலோகம் பெற்றான்..

கட்வாங்கனின் புதல்வன் தீர்க்கபாகு. அவனது பிள்ளை ரகுவின் பெயராலேயே ரகுவம்சம் என்று விளங்கலாயிற்று.. 

அவனது புத்திரன் அஜமகாராஜன்.. அஜனின் குமாரர்தான் தசரதச் சக்கரவர்த்தி.
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
ஸ்ரீராம லட்சுமண, பரத சத்துருக்கனரின் வம்சத்தை படிப்பவருக்கும், கேட்பவருக்கும் பிள்ளைக் கலிநீங்கும் என்று விஷ்ணு புராணம் உரைக்கிறது.. சந்ததிகள் நீடூடி சந்தோசமாக வாழ்வர். இப்படி புண்ணிய வீரர்கள் ஆட்சி செய்த திவ்யதேசமிது.
           🔔🔔🔔              🔔🔔🔔

பிரம்மாவின் முதல் புத்திரரான ஸ்வாயம்புவான் என்பவருக்கு ஸ்ரீ மகாவிஷ்ணு வைகுண்டத்தின் நடுவிலிருந்து அயோத்யா என்ற பகுதியை நான்முகன் மூலமாக அளிக்க,, பூவுலகில் சரயுநதிக்குத் தெற்கே அதை நிறுவினார் என்கிறது ஸ்தல வரலாறு.. 

ஆதிசேஷன்,பாஞ்சசன்யம் ,சுதர்சனத்தோடு அவதரிக்க பகவான் செய்த திருவுள்ளம் இது..
இந்த சரயூநதியில்தான் விசுவாமித்திரரின்-- யாகம் காக்க தம்பியுடன் ஓடத்தில் சென்றார் இராமபிரான்... தூக்கமும், பசியும் இல்லாதிருக்க  ;பலா--அதிபலா என்ற இரண்டு மந்திரங்களை முனிவர் ஸ்ரீ ராம லட்சுமணருக்குக் கற்றுக்கொடுத்தது இதன் கரையில் தான்.

கஸ்யபர் தவம்செய்து வாமனரைப் பெற்ற இடத்தில் தான் விசுவாமித்திரர் யாகம் செய்தார் என்கிறது வால்மீகி ராமாயணம்...

சித்தாசிரமம் எனப்படும் இதே இடத்தில் தான் யாகத்திற்கு இடையூறு செய்ய வந்த,, சுபாகு, மாரீசனை-- அஸ்திரத்தை விட்டு விசுவாமித்திரன் விரதத்தை பூர்த்தி செய்தார் ஶ்ரீராமன்.
(அப்போதைய இராமபிரானின் வயது 12 கூட ஆகவில்லை...மாரீசனை மட்டும் கொல்லாமல் , அஸ்திரத்தால் பல மைல் தூரத்தில் ஒரு மலையில் கொண்டு போய் தள்ளிவிட்டார்...அப்போதே மாரீசனைக்கொன்றிருந்தால் --- சீதாதேவிக்கு இவ்வளவு இன்னல்கள் நடந்திருக்காது..)
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹

(ஆனால் ஶ்ரீகிருஷ்ண அவதாரத்தில் ,, அவர் யாரையும் மிச்சம் மீதி வைத்துக்கொள்ளவில்லை)...

இராவணனை சேனைகளோடு அழித்துவிட்டு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பட்டாபிஷேகம் செய்து கொண்டு வானரர்கள், விபீஷணாதியருக்குப் பரிசுகளை வாரி வழங்கி விடை கொடுத்தது இந்த அயோத்தியில்தான்!.. 

ஜானகிதேவி வால்மீகியுடன் வந்து,, சபையில் தான் உத்தமி என்று பிரமாணம் செய்து--- பூமிக்குள் மறைந்த பிறகு ,, ஸ்வர்ண சீதையோடு பல வேள்விகளை நடத்தியது இந்த அயோத்தியில் தான்!!!.
சரயூ நதி இமயத்தில் உற்பத்தியாகி அயோத்தியில் நுழைகிறது.. அயோத்தியில் புகுமுன் காளி என்ற ஆறு கலக்கிறது.. இப்போது காளி நதியை. கோக்ரா. என்கின்றனர்.. லட்சுமணன் மூழ்கிய இடம். லக்ஷ்மண்காட் என்றழைக்கப்படுகிறது.

ஸ்ரீராம அவதாரத்தின் காலம் முடிவுற்றதையறிந்த ஸ்ரீராமபிரான் ,, இந்த சரயூநதியில் தன் சகாக்களுடன் கரைந்த இடம்--குப்த காட் என்று வழங்கப்படுகிறது.
ஜானகி பிராட்டி நித்தமும் துளசி பூஜை செய்த இடம்-- துளசி மாடம் ,,ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் செய்த இடம் (இன்று இந்த இடத்தில் ஒரு பூங்காவனம் அமைத்திருக்கின்றனர்.)- அசுவமேத யாகம் நடந்த இடம்,--, வைதேகியைப் பிரிந்த இராமர் ஜடாமுடி தரித்த இடம்-- எல்லாவற்றையும் அயோத்தியில் தரிசிக்கலாம்.

பரதாழ்வார் ஸ்ரீ ராமபிரானின் பாதுகைகளை பட்டாபிஷேகம் செய்து காத்திருந்த நந்தி கிராமம் அயோத்தியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடம்;லகட்மண்டி என்று அழைக்கப்படுகிறது...அதை கனகபவனம் என்கின்றனர்.
.இங்கே மாருதிக்கு கணக்கிட முடியாத ஆலயங்கள் உள்ளன.. ராமஜென்ம பூமிக்கு அருகில் உள்ள ஹனுமான்கடி மிகப் பெரிய ஆலயமாகும்..இங்கே இடைவிடாமல் பகதர்கள் இராமாயணம் படிப்பது கண்கொள்ளா சேவையாகும்...

ஸ்ரீ ரகுநாதர் அயோத்தி மாநகரத்தை 8 பங்குகளாக்கி--- தன் புதல்வர்கள் லவ- குசர்,,, பரத புத்திரர்களான தக்ஷசன்- புஷ்கலனுக்கும்,,, லக்ஷ்மண குமாரர்களான அங்கதன்-- சந்திரகேசனனுக்கும்,, சத்துருக்கனன் மைந்தர்களான சூரஸேன்- சூடாஹிக்கும் பிரித்துக் கொடுத்தார்.

பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடிப்பொடியார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஐவரும் மங்களாசாசனம் செய்த திவ்ய ஸ்தலமிது....
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

'''ரகுவம்ச மாணிக்கமான ஸ்ரீராமன் விஸ்வரூபி.. சமுத்திரத்தையே ஒரு பாணத்தால் வற்றடிக்கக்கூடிய வல்லமை பெற்றவர்.. ஒரு சொல்-- ஒரு இல்-- ஒரு வில்,, என்ற லட்சியத்துடன் வாழ்பவர்..பாதாளம் அவரது திருவடிகள்.. சத்தியலோகம் அவரது சிரசு...சூரியனே அவரது பார்வை.. மேகம் அவரது கேசம்.. அஸ்வினி தேவர்கள் அவரது நாசி.. இரவும், பகலும் அவர் கண் இணைப்பதால் உண்டாகின்றன..

பத்து திக்குகளும் அவரது செவி..ராமநாமம் சகல பாபங்களையும் போக்கும் என்று வேதங்கள் உரைக்கின்றன...

ஸ்ரீராமனை தெய்வமென்றுணராமல் பகை கொண்டிருப்பது விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சியின் நிலையை ஒத்ததாகும்'''---- என்று மண்டோதரி இராவணனுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறாள்...

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி|
தந்நோ ராமப் ப்ரசோதயாத் ||

நன்மை யும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றி தீருமே
இம்மையே ராமா வென்றெழுத்தினால்..

ராம் ராமாய நம:
ஓம் நமோ நாராயணாய|||

No comments:

Post a Comment