Wednesday, October 31, 2018

அட சிரிச்சுட்டு போங்கப்பா...

 அட சிரிச்சுட்டு போங்கப்பா....😄

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?

இப்ப மருந்து கொட்டிடுச்சி.

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா...!!

அய்யோ...!! அப்பறம்?

“சாத்திட்டா”

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்
காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!!???....

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி
இருக்கு?

போயும் போயும்v இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு
தோணுது டாக்டர்…!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"

"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

அதனால…?

வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?"

"நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?

ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில்
கோடீஸ்வரனாகி விடுவான்,
கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி’ல
ஏழையாயிடுவாரு…!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"

"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

💃🏽உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!!!

 😜😜😜😄😄😄😃😃😃

😂 சிரிப்போ சிரிப்பு.😂
`````
அவர்:  ஏன்டா உங்க அப்பன் பேரை....,
  "பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச".......??

இவன்:
   என் பெயர் கெட்டுப் போகாம பாத்துக்கன்னு....,

  அவர்தான் சொன்னாரு....!!
           😁😁😁😁😁

அவர்:
   "ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம்"...!!

இவர்: எப்படி.....?

அவர்: ரெண்டு கையிலேயும்....,
 " சாம்பார் வாளிய தூக்கிட்டு போறமாதிரி நடப்பாங்க".....!!
              😁😁😁😁

அவர்:
   ஆண்கள்ல 65% பேர்....,
" மனைவி சொல்றதை அப்படியே கேப்பாங்க"......!!

இவர்: அப்ப மீதி 35% பேர்.....?

அவர்:
  அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல.
           😂😂😂😂

சோமு: நாட்ல அநியாயம் நடக்குது..

பாபு:எப்புடி சொல்றீங்க.?

சோமு:
  "வெயில் காலத்துல மோர் பந்தல் வைக்கிற மாதிரி"......,
 " மழை காலத்துல டீ பந்தல் வைக்கமாட்றாங்களே"....!!
           😁😁😁😁

அவன்:
  இதோ போறானே...., "அவனுக்கு பொது அறிவு சுத்தமா இல்ல".....!!

இவன்: எப்டி சொல்றீங்க?

அவன்:
  பழமொழிக்கு இங்கிலீஸ்ல என்னன்னு கேட்டான்.....!!

 "புரூட் லாங்வேஜ்'னு சொன்னா ஒத்துக்க மாட்றான்"......!!
          😂😂😂😂

டாக்டர்:
   இந்த மருந்தை.....,
" காலைல வெறும் வயித்துல சாப்பிடுங்க".......!!

வந்தவர்:
 "ஒரு பனியன்கூட போட்டிருக்ககூடாதா டாக்டர்"...?
            😂😂😂😂

கணவன்:
  என்னடி சாம்பார்ல  இரண்டு ரூபாய் காயின் கிடக்குது"......?

மனைவி:
 நீங்கதானே....,
   "சமையலில் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க".....?
         😁😁😁😁

அவர்:
    "அர்ச்சனை உங்க பேருக்கா".....?

இவர்:
   "சாமி பேருக்கே பண்ணுங்க ஐயரே".....!!

 "எனக்கு தினம் வீட்டுல அர்ச்சனை நடக்குது".....!!
     😁😁😁😁😁

தீபாவளி எபெக்ட்...
```````
மனைவி:
    எனக்கு....,
 " இதே டிசைன்ல வேற கலர்ல காட்டுங்க"..... !!

கணவன்:
 அடியேய்.....!!
  துணி எல்லாம் எடுத்து முடிச்சு....,
  "நாம இப்ப காய்கறி கடைல இருக்கறோம்"....!!

நீ எடுத்தது புடலங்காயை...., அதுல வேற கலர் டிசைன் கிடையாது".....!!
            😂😂😂😂

தாத்தா :
  அந்த காலத்துல உன் வயசுல ......,
 "நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா  வீட்டுக்கு வரும் போது......,

 "பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்"....!! தெரியுமா .......?

பேரன் :
 "இப்போ அப்படியெல்லாம் செய்ய முடியாது தாத்தா".....!!

 "எல்லா கடையிலயும் நிறைய C C TV கேமரா வச்சுருக்காங்க".......!!
          😁😁😁😁😁