Friday, October 19, 2018

வைஷ்ணவ தேவி இறுதிப்பகுதி 9

வைஷ்ணவ தேவி இறுதிப்பகுதி 9
( உதவிய இணைய நண்பர்கள்)
நாங்கள் தரிசிக்க இயலாத பைரவர் கோயில் பற்றி 7 ம்பகுதியின் கதைதொடர்ச்சி....
தன் தவறினை உணர்ந்து கொண்ட பைரோன் நாத் அன்னையின் முன் மண்டியிட்டு, “அன்னையே உன்னை யாரென்று தெரியாது நான் பெருந்தவறு செய்து விட்டேன்.  என்னை மன்னித்து அருள வேண்டும் என அவள் தாழ் பணிந்தான். அன்னையும் அவனது தவறினை மன்னித்து, அவனுக்கு ஒரு வரமும் அளித்தாள். அந்த வரம் பைரோன் நாத் தலை விழுந்த இடத்தில் அவன் கோவில் கொண்டிருக்க, அன்னையை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும், பைரோன் நாத் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு வந்து பைரைவனையும் தரிசிக்க வேண்டும்.  அப்படி தரிசித்தால் தான் அன்னையை தரிசிக்க வந்த பயணம் முழுமையாகும். 

இப்போதும் அன்னையை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் பைரோன் நாத் குடியிருக்கும் பைரவ் மந்திர் செல்லாது திரும்புவதில்லை.  அப்படித் திரும்பினால் அன்னையை தரிசித்த பலன் கிட்டாது என்று நம்புகிறார்கள்.
அன்னை சொன்ன மாதிரியே இப்போதும் அவளை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் அவளை தரிசித்த பின்னர், பைரவ் மந்திர் நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள்.  பைரவ் மந்திர் “[b]பவன்” என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.  இந்தப் பாதை கொஞ்சம் கடினமான ஏற்றம் கொண்டது – சற்றே செங்குத்தான பாதை என்பதால் இதில் பயணிப்பது கொஞ்சம் கடினமானது.

எனினும் நாங்கள் இதை பின்னர்தான் கேள்விப்பட்டு தரிசிக்க இயலாத்து குறித்து வருந்தினோம்

நண்பர்கள் முன்னரே திட்டமிட்டு அன்னையையும் பைரவரையும் தரிசிக்க அன்னையின் அருளை வேண்டுகிறேன்... முற்றும்