Friday, October 19, 2018

இமயத்தின் மடியில் இல்லாளுடன்-கேதார் ,பத்ரி யாத்திரை அனுபவம்.......பகுதி 1

😎இமயத்தின் மடியில் இல்லாளுடன்😘் ....கேதார் ,பத்ரி யாத்திரை அனுபவம்.......பகுதி 1...

.கங்கோத்ரி ,யமுனோத்ரி,கேதார் நாத் பத்ரி நாத் இந்நான்கும் சார்( நான்கு) தாம் யாத்திரை எனப்படும். இதில் கேதார் நாத் பத்ரிநாத்திற்கு தனியே மனைவியுடன் யாத்திரை அனுபவம்..🙏🏾தமிழ்நாட்டில் இருந்து செல்லும் நமக்கு இப்பகுதியில் நிலவும் தட்பவெப்பம், உணவு, மொழி, ஏன் கோவில்கள், வழிபாட்டு முறைகள் என்று அனைத்துமே புதுமையாக தோன்றும். ஆகவே மிக்க ஏற்பாடுகளுடன்தான் நாம் செல்ல வேண்டும். 
முதலாவது மலைகளில் அதிக குளிர் இருக்கும் என்பதால் கம்பளி உடைகள், கம்பளித் தொப்பி, கம்பளி கையுறை, கம்பளி காலுறை கட்டாயம் எடுத்து செல்வது அவசியம். அடுத்தது உணவு அங்குள்ள மக்கள் அதிகமாக கோதுமை மற்றும் கடுகு எண்ணெயை பயன் படுத்துவதால் அது நமக்கு பிடிக்காமலும் அதே சமயம் நமது உடலுக்கு ஒத்துக்கொள்ளாமலும் போகலாம் என் மனைவிக்கோ  🍎🍊ஆப்பிள் மாதுளை தவிர எந்தப்பழமும் கூடாது 🤑பிஸ்கட், சாக்லேட், இனிப்பு வகைகள் காரங்கள், முந்திரி, பாதாம் போன்ற உலர்ந்த பழங்களும் ஒத்துக்கொள்ளாது.😟😟காரம் அறவே கூடாது,😀😀ஆனாலும் சமாளித்து மீண்டு வந்தோம். மற்றவர்கள் எளிதில் சுமந்து செல்லக்கூடிய அதே சமயம் தமக்கு உகந்த உணவுப் பொருள்களையும், மற்றும் மருந்து மாத்திரைகள், முதலுதவிப் பெட்டி, பூஜை பொருட்கள், டார்ச் லைட் / மெழுகுவர்த்தி, மழைக் கோட், மலைப்பாதையில் நடப்பதற்கு ஏதுவான காலணிகள் (Shoes), ஆகியவற்றை எடுத்து செல்லவேண்டியது அவசியம். பாம்பு போல வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதைகளில் நீண்ட நேரப்பயணம், நேரத்திற்கு நமக்கு தகுந்த உணவு கிடைக்காதது, மற்றும் நேரம் கடந்து உணவு உட்கொள்வது மற்றும் தங்கும் இடத்தில் அதிக குளிர், மலையேற்றம், மலையேற முடியாதவர்கள் மட்டக்குதிரை பயணம். நீண்ட நாள் பேருந்துப் பயணம் மற்றும் நடைப்பயணம் என்று பல்வேறு அசௌகரியங்களையும் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் எதிர்பாராத கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அனைத்திற்கும் தயாராக செல்வது மிகவும் நலலது

வருடத்தில் ஆறு மாதம் இத்தலங்களில் பனிமூடி இருக்கும் என்பதால் ஏப்ரல் முதல் ஜூன் வரையும், செப்டெம்பர் முதல் அக்டோபர் மாதம் வரையும் இந்த யாத்திரைக்கு ஏற்ற காலமாகும் , ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் மழைக்காலமாகும் எனவே இச்சமயங்களில் பயணம் செல்லாமல் இருப்பது நன்று. இவ்விடங்களில் கோடைக்காலங்களில் கூட குளிராக இருக்கும். மலைகளின் உச்சியில் பயணம் செய்வதால் சீதோஷ்ண நிலை ஒரே சீராக இருக்காது. திடீரென்று மாறக்கூடியது. நல்ல வெயில் அடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று பலத்த மழை பெய்யக்கூடும், நல்ல மழை பெய்யும் போது நிலச்சரிவுகள் ஏற்பட்டு பாதைகள் அடைபடும் போகின்ற இடத்திற்கு சரியான சமயத்திற்கு செல்ல முடியாமல் போகலாம். சில சமயம் பனி மழை பொழியும். ஏப்ரல் மே மாதங்களில் பலத்த காற்று வீசும். புழுதிப்புயல் எனப்படும் மண்ணைவாரி வீசும் காற்றும் கூட இருக்கும். அவர் விரும்பினால் மட்டுமே நமக்கு அவர் தரிசனம் கிட்டும் என்று சரணாகதி மனப்பன்மையுடன் சென்றால்தான் ஒரே தடவையில் நான்கு தலங்களையும் தரிசனம் செய்ய முடியும் என்பது பலர் தங்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.

சித்திரை (ஏப்ரல்-மே மாதம்) அக்ஷய த்ரிதியையன்று தொடங்கி தீபாவளி (அக்டோபர்- நவம்பர்) மாதம் வரையில் இத்திருக்கோவில்கள் திறந்திருக்கும். துவாரம் திறக்கும் நாள் அகண்டஜோதி தரிசனம் செய்ய பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும், பின்னர் இரண்டு மூன்று நாள் கழித்து கூட்டம் குறைந்து விடும், பாதையும் சரியாக இருக்கும் ஆகவே பள்ளி விடுமுறை காலமாக இல்லாமல் இருந்தால் இச்சமயம் யாத்திரை செய்வது உத்தமம். மே மற்றும் ஜூன் மாதங்களில் பாதை சரியாக இருக்கும் ஆனால் பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும் ஆகவே தங்கும் வசதிகளை முன்னரே செய்து கொண்டு செல்வது நல்லது. சில சமயம் தரிசனத்திற்காக 2 கி.மீ தூரம் வரிசை இருக்கும், சுவாமி தரிசனம் மிக சிறிய நேரத்திற்கு மட்டுமே கிட்டும். ஜூலை , ஆகஸ்டு மாதங்கள் பருவமழைக் காலம் என்பதால் அதிகமாக நிலச்சரிவுகள் ஏற்படும் என்பதால் அச்சமயத்தில் யாத்திரை மேற்கொள்ளாமல் இருப்பது உத்தமம்

பொதுவாக செப்டெம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் செல்வது (துவாரம் அடைக்கப்படும் நாள்) மிகச் சிறந்தது. யாத்திரை அக்டோபர் மாதம் குளிர் அதிகமாகவே இருக்கும் அப்போது கம்பளி ஆடைகள் அதிகம் எடுத்துச் செல்ல வேண்டும்.

மழைக்காலத்தில் ஏற்படும் நிலச்சரிவுகள்

( ஜுலை முதல் செப்டெம்பர் முதல்வாரம் வரை)

மலைப்பிரதேசம் என்பதால் 1962 சீனப்போருக்கு முன்னால் இப்பகுதியில் அதிகமான வளர்ச்சி இல்லாமல் இருந்தது அப்போது யாத்திரிகள் பெரும்பாலும் நடைப் பயணமாகவே சென்று இத்தலங்களை தரிசித்து வந்தனர். அதற்கு பின்னால் சாலை வசதிகள் மேம்பட்டன.
தங்குவதற்கு பல வசதிகள் உள்ளன. மடங்கள், சத்திரங்கள், ஹோட்டல்கள் என எல்லா வகை , அவரவர்கள் பண வசதிக்கேற்றாற்போல தங்கும் வசதிகள் கிட்டும். அங்கு சென்றும் அறைகளை அமர்த்திக்கொள்ளலாம் அல்லது அழைத்துச் செல்லும் யாத்திரை அமைப்பாளர்கள் தங்க வைக்கும் இடத்தில் தங்கிக் கொள்ளலாம்.கேதார் நாத்துடன் ஒப்பிடும் போது பத்ரி நாத் நிலச்சரிவு அபாயங்களை தவிர்த்து ந
ோக்கின் மிக எளிது.ஏனெனில் கோயிலுக்கு மிக அருகாமை வரை பேருந்து வசதி.ஆனால் கேதார் செல்ல சோன் பிரயாக் வரை பேருந்தும்  கௌரி குண்ட்  வரை ஜீப்பும் செல்ல இயலும்.அதன் பின் 14 கிமீ பாதை 2013 அழிவில் மற்றொரு மலையை சுற்றி 18 கிமீ நீண்டுள்ளது.இதனை திருப்பதி மற்றும் சபரி மலையுடன் ஒப்பிட முடியாது.திருப்பதி பாதையில் ஆங்காங்கே உணவு 🍞மழை ஷெல்டர் மருத்துவ உதவி,முடியாதெனில் பேருந்து பாதைக்குச் செல்லும் வசதி.இவை எதுவும் கேதார் நாத் பாதையில் இல்லை.11755 அடி உயர மலைக்கு கடும் குளிரில் மணிக்கு 2 கிமீ வேகத்தில் கடந்தாலே நீங்கள் வலிமையானவர் எனலாம்.அதிலும் இரவில் மின் விளக்குகள் இன்றி குளிரில் நீர்,உணவு இன்றி மலை ஏற வேண்டும்.போனி எனப்படும் குதிரையில்🐆🦌 ஏற 2500/ முதல் சார்ஜ்.ஆனால் சம வெளியில் ஒரு பர்லாங்க் குதிரை ஏறி🦌 போஸ் தந்த அனுபவத்தை 10000 அடி உயரத்தில் தடுப்பு சுவர் இல்லா 🐼🐼சேறும் சகதியும் நிறைந்து படிகள் பெயர்ந்து பள்ளங்கள் நிறைந்த மலைப் பாதையில் வழுக்கும்  படிகளில் மேலே பனிக்கட்டி மழை பொழிய உயிரை கையில் பிடித்து குதிரையில் இறங்கும் அனுபவத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்......
இனி எங்கள் அனுபவம் உங்கள் திட்டமிடலுக்கு தொடர்கிறேன்......😃😃