😎இமயத்தின் மடியில் ...பகுதி10
கேதார் பற்றிய அரிய செய்தியும் காணக்கிடைக்காத சிவலிங்க புகைப்படம் கிடைத்ததால் மீண்டும் கேதார் ... venkatesan v: 👆நாங்கள் தரிசித்த கேதார் நாத் முக்கோண வடிவ லிங்கம்.எருது வடிவிலிருந்த சிவனின் திமில் பற்றி பீமன் திருகியதால் திமில் வடிவில் மாறியதாக சொல்கிறார்கள் பின்னால் ஆதிசங்கரின் சமாதி .பார்வதி சிவபெருமானிடம் ஒரு கோரிக்கையை வைத் தாள். எந்த ஐந்து இடங்களில் அவரை பார்வதி கண்டு பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டலோ அந்த இட ங்கள் எல்லாம் பவித்ரமானதி விட்டன. ஆகவே பஞ்ச பூதங்களைப் போன்ற
அவை ஐந்தும் சிவபெரு மானின் புனித ஆலயங்களாக மாறி பக்தர்கள் பூஜிக்கும் இடங் களாக அமைய வேண்டும். அவள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சிவபெருமானும்தான் தக்க நேரத்தில் அந்த ஐந்து இடங்களிலும் எழுந்தருளுவேன் என்று அவளுக்கு வாக்குறுதி தந்தார். அதுவே கேதார்நாத்தி ல் பஞ்ச லிங்க ஆலயங்கள் ஏற்படக் காரணமாக அ மைந்தன. ஆனால் அந்த ஆலயங்கள் ஐந்து இடங்களி ல் அமைந்தது எப்படி ?

சிவபெருமான் பார்வதிக்குகொடுத்த வாக்குறுதி நிறை வேறும் காலம் கனிந்து வந்தபோதுதான் பாண்டவ சகோதரர்கள் சிவபெருமானின் தரிசனத்திற்காக கே தார்னாத்துக்கு வந்தார்கள். அங்கு வந்து சிவபெருமா னை வேண்டி தவம் இருந்து வழிபட்டபடி அவரைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். பாண்டவர்கள் சிவபெ ருமானைத் தேடிக் கொண்டு அங்கு வந்தபோது அவர் களால் கண்டு பிடிக்க முடிகிறதா என்று அவர்களை சோதனை செய்து பார்க்க விரும்பிய சிவபெருமான் ஒரு மாடாக உருமாறி திரிந்து வந்தார். ஆனால் பாண் டவ சகோதரர்கள் சிவபெருமான் அங்கு வந்து தங்கி இருப்பது உண்டு என்றும் உண்மையான பக்தி கொண் டு அவரைத் தேடி அலைந்தால் அவரைக் கண்டு பிடி க்க முடியும் பிடிக்கலாம் என்பதையும் கிருஷ்ணர் மூலம் ஏற்கனவே அறிந்து இருந்தார்கள் என்பதினால் உண்மையான பக்தி கொண்டு சிவபெருமானை வழி பாட்டு வந்த பாண்டவ சகோதரர்களினால் சிவபெரு மானே அந்த மாட்டின் உருவில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆகவே அவர்கள் அந்த மாட்டை வணங்கியபடி அதன் அருகில் சென்றார்கள்.

மாட்டு உருவத்தில் இருந்த சிவபெருமான் அவர்கள் தாம் அருகில் வருவதைக் கண்டவுடன் வேண்டும் என் றே அவர்களிடம்இருந்து தப்பிக்க எண்ணியதைப்போ ல ஓடத் துவங்கினார். ஆனால் பாண்டவ சகோதரர்க ள் அந்த மாடே சிவபெருமான் என்பதை புரிந்து கொண் டு அதைப் பிடிக்க ஓடினார்கள். அதன் பின்னால் ஓடிச் சென்ற பீமனோ கஷ்டப்பட்டு அந்த மாட்டை பிடித்துக் கொள்ள முயல, அந்த மாடும் பீமனிடம் இருந்து விடு பட்டு திமிறிக் கொண்டு ஓடத் துவங்கியது. பீமன் மாட் டுடன் போராடி அதன் உருவில் இருந்த சிவபெருமா னை அங்கேயே தடுத்து நிறுத்த முயன்றான்.
பீமன் பரம பராக்கிரமசாலி என்பதினால் அந்தப் போ ராட்டத்தில் மாட்டின் உடல் கிழிந்தது. பீமன் இழுத்த இழுப்பில் அதன் உடல் பிய்ந்து விழுந்தது. இப்படியாக அந்த மாட்டின் உடல் கேதார்னாத் அருகில் இருந்த ஐந்து இடங்களில் சென்று விழுந்தன. அவை விழுந்த இடங்கள் பார்வதி சிவபெருமானை லிங்க உருவில் கட்டிப் பிடித்தவை ஆகும். மாட்டின் உடல் பகுதிகள் அ தே சிவலிங்கங்கள் மீது அவை விழ பார்வதி முன்னர் வேண்டிக் கொண்டபடி அங்கிருந்த சிவலிங்கங்களில் சிவபெருமான் குடி கொண்டார். இப்படியாக அந்த ஐந்து இடங்களில் இருந்த சிவலிங்கங்களே கேதார் பஞ்சலிங்க ஆலயங்களாகின. பார்வதி சிவபெருமா னைக் கட்டித் தழுவியவை அந்த ஆலயங்களில் உள் ள சிவலிங்கங்கள் என்று நம்பிக்கைக் கதை உள்ளது.