Friday, October 12, 2018

தர்ப்பை

தர்ப்பை

ஒரு ப்ராமணன் தனது சடங்குகளை செய்ய துவங்றத்துக்கு முன்னாடி தன்னை சுத்த படுத்திக்கொண்டு பாதுகாத்துகோள்ளவும் வேணும். இதற்கு தர்ப்பை துணை செய்யறது. இதை படிப்பவர்கள் எல்லோருக்கும் தர்ப்பையின் முக்கியத்துவம் தெரியும். வாத்தியார் கட்டு கட்டா கொண்டுவரார்னு நான் இதை சாதரணமா எடுத்துண்டுட்டேன். படிச்சவாகிட்டே பேசினப்போ நிறைய மனதை கவரும் விஷயங்கள் தெரிஞ்சுது.

நம்ம வேதங்களில் தர்ப்பை பற்றி பல இடத்திலே சொல்றா. அதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், நடுவில் கேசவனும், நுணியில் சங்கரனும் வசிக்கறார்களாம். இதில் ஒரு பவித்ரம் செஞ்சு வலது கை மோதிர விரலில் போட்டுண்ட அப்புறம் நமக்கு வேற என்ன தேவைப்படப்போறது?

காய்ந்த குசா புல்லை தர்ப்பைன்னு சொல்ரோம். இது நுணி கூராகவும், 2 அடி நீளத்துக்கு வளரும். புல் புதர் பொல வளருவதற்கு உப்பு தண்ணி தேவை. இதனால் நதி முகதுவாரங்களில் கிடைக்கும். தர்ப்பை ஆமையோட முதுகு ரோமம் சிதறி, கரை ஓரம் ஒதுங்கினதால் கிடைத்ததுன்னு சொல்லுவா. இங்கே ஆமை கூர்மாவதாரம் எடுத்த மகாவிஷ்ணு. அவர் தனது முதுகை மந்தார மலையை வைத்து பாற்கடலை கடைவதற்கு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கொடுத்தபோது இது நடந்ததாம். கடைந்து எடுத்த அமிர்தம் தர்ப்பை புல் மேல விழுந்துருக்கு. வடநாட்டில் தர்ப்பாஷ்டமி கொண்டாடுவா.

சென்னை சிவா விஷ்ணு கோவில் முன்னாடி தர்ப்பை, பூணூல் விக்கிறா. ஒரு தடவை திநகர் போய் வாங்கிண்டு வரலாம்னு கிளம்பச்சே, என் மனைவி, இங்கேயே குரொம்பேட்டை நாட்டு மருந்து கடையில் கிடைக்கிறதுன்னு சொல்லிட்டா. எப்படியோ நான் ஜாலியா தி நகர் போவதை கெடுத்தாச்சு.

ப்ராமணாள் நிறைய வாங்குவதால் இதை விற்பது நல்ல வியாபார தந்திரம்தான். தர்ப்பை ஆயுர்வேதத்தில் நீரிழிவு, வலிப்பு, மூலம் மற்றும் வயிற்றுப்போக்கு இத்யாதி ப்ரச்சனைகளுக்கு நல்ல உபயோகம். தவிர, நான் படித்தது: உடல் நிறத்தை மேம்படுத்தவும், புண்களை ஆற்றுவதற்கும். 2 பக்கத்திற்கு இந்த அபூர்வ புல்லை பற்றி.

சடங்குகளை சுத்தமா செய்ய தர்ப்பை பாயும் மான் தோலும் பரப்பி அதன் மேல் உட்காரணும். 2018இல் இது முடியாது. அதனால் ஒரு தர்ப்பை புல் கீழே வச்சுண்டா போரும். தர்ப்பை நல்ல, கெட்ட காரியத்துக்கும் வேணும். 1, 2, 3 அ 4 புல்லை சேர்த்து, விஷயத்துக்கு ஏற்ப உபயோகிக்கணும். தர்ப்பையில் கயிறு திரித்து பாதுகாப்புக்கு இடுப்பில் கட்டுவார்கள். 

இதில் முக்கியாமானது பவித்ரம். இந்த எவ்வளவு பொருத்தமான பெயர்! யாரு போட்டுக்கிராளோ அவா செய்யப்பிடாது. எப்போவும் ஈரம் படாமல் பார்த்துக்கணும். எந்த ஒரு ப்ராமணன் பவித்ரம் போட்டுண்டிருக்கானோ அவன் சுத்தமாவும், பாதுகாப்பாகவும், தேஜஸுடன் இருக்கிறான்.

ப்ராமண சடங்குகளுக்கு வேற காரணங்களுக்காகவும் தர்ப்பை கட்டாயம். இந்த புல் நமக்கு நச்சு கதிர்வீச்சு மற்றும் கேட்ட சக்திகளிடமிருந்து கவசமா இருந்துண்டு ஆன்மீக சக்தியையும் பெறுக்கி கொடுக்கிறது. மந்திர த்வொனிகளை வேகமாய் இன்னொரு இடத்தில் எடுத்துண்டு போகும். அதனால்தான் தர்ப்பை வைத்துக்கொண்டு மந்திரம் சொன்னா அது தேவலோகத்துக்கு கேட்கும். ஒரு இடத்தில் வாத்தியார் உங்கள் மனைவியை உங்கள் பின்னாடி நின்னுண்டு தர்ப்பை புல்லால் உங்களை தொட சொல்லுவார். இது உங்கள் இருவர் சக்தியும் இணைந்து சடங்கில் பங்கேற்க செய்வதற்கு.

அப்போ உங்களோட வெறும் தோளில் தர்ப்பையால் மனைவி குறு குறுன்னு சொரிவதும், நீங்கள் நேளிவதும், ரெண்டு மந்திரம் சரியா கேட்காமல் சொல்லாமல் விட்டுப்போவதும் அதையேல்லாம் இப்பொ விவரிக்க தேவையில்லை.

க்ரஹணத்தின் போது சாப்பட்ற பதார்தங்கள் கேட்ட கதிர்வீச்சால் கெட்டுப்போகாமல் இருக்க தர்ப்பை புல்லை அதில் போட்டு வைக்கிறோம்.

தர்ப்பை புல் பற்றி ரூல்ஸ் இருக்கு. நுணியை கிள்ளி போட்டுடக்கூடாது. நதிக்கரையிலிருந்து எடுக்கும்போது மந்திரம் சொல்லிண்டு எடுக்கணும். 6 மாசத்துக்கு மேல ஸ்டாக் செய்யகூடாது. மறுபயன்பாடு கூடாது. சடங்கு முடிந்ததும் யாரும் நடந்து போகாத இடத்தில் போடணும். ஆனால் கவனம் தேவை: ஒரு கட்டில் நுணி வெட்டப்பட்ட தர்ப்பை புல்லும், பவித்ரம், கூர்ச்சம் சேர்த்து செட்டாக கடையில் விக்கிறா. முடிந்தால் இதை ரெண்டு வாங்கினால் ஒரு பூணூல் கட்டு இலவசம் வேணும்னு பேரம் பேசலாம்.

தர்ப்பணத்துக்கு மணையில் உட்கார்ந்த உடன் வாத்தியார் “தர்ப்பையை எடுத்து காலுக்கடியில் போட்டுக்கோங்கோ” ன்னு சொல்லுவா. ஏன்னு தெரியுமா? அவர் “எரக்ரொஸ்டிஸ் ஸைனோசுராய்தேஸ் எடுத்து போட்டுக்கோங்கோ” ந்னு சொல்லமுடியாது. அது ரொம்ப கஷ்டம். சொன்னாலும் அவர் தாவிரவியல் பேயர் சொல்லி தர்ப்பையைதான் சொல்றார்னு நமக்கு புரியாது. அதுக்குத்தான்.

ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம். தர்ப்பை வேற எங்கேயும் இல்லாமல் இந்தியாவில் மட்டும் தான் கிடைக்கிறதாம். இது நமக்கே நமக்குன்னு கொடுக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த பரிசு. அதை மதித்து போற்ற வேண்டும்.

நன்றி: பதிவிட்ட நண்பருக்கு...!!!!