venkatesan v: 😎இமயத்தின் மடியில் இல்லாளுடன் ...கேதார் பத்ரி..பகுதி 9 தொடரும் முன்...
என் கட்டுரையை படித்து விட்டு சில அன்பர்கள் தென் வட இந்திய ட்ராவல்ஸ் பற்றி குறிப்பிட்டு சிரமமில்லாமல் போயிருக்கலாமே என ஆதங்கப்பட்டமைக்கு நன்றி.என் பதில்1) உந்த அனுபவம் இருந்து இது போன்ற கட்டுரையை நான் எழுதியிருக்க இயலாது.2) இராமானுஜர் ,ஆழ்வார்கள் 1000 ஆண்டுக்கு முன் பல 1000 கிமீ நடந்து எந்த வசதியும் இல்லாமல் சேவித்த இறைவனை எனக்கு பண வசதியிருந்தும் குறைந்த வசதியுடன் சேவிக்க ஆவல்
3) மாற்றமில்லாத வாழ்க்கை சௌகரியமான வாழ்க்கை சலிப்பதால் தான் டூர் போகிறோம்.ஏஜன்ட்கள் திட்டப்படி அவர்கள் பின் எந்த கற்பனை ,தனி விருப்பமின்றி யோசிக்க வாய்ப்பின்றி அவர்கள் காட்டும் லாட்ஜில்,சத்திரத்தில் மற்றவர்களுடன் இடம் பகிர்ந்து குழு உறுப்பினர் அனைவரும் தயாராக காத்திருந்து ஆட்டு மந்தைகளாய் செல்வதில் சலிப்பு ஏற்படுகிறது: 4) நம்மில் பெரும்பாலோர் எளிய பின்புலத்திலிருந்து வாழ்க்கையில் உயர்ந்துள்ளோம்.குறைந்த உடைகளுடன் நம் லக்கேஜை நாமே சுமந்து மீண்டும் அந்த எளிய வாழ்வை ( வசதியை விட்டு நிரந்தர சாமியாராகா விடினும்) மீண்டும் வாழ தற்காலிக சாமியார் வாழ்வு பிடித்திருக்கிறது.
5) ட்ராவல்ஸில் அக்குழு மனிதர்களுடன் மட்டும் பழகும் வாய்ப்பு.ஆனால் எனக்கு இந்தி அறிவை விசாலமாக்வும் அந்த மண்ணின் மைந்தர்களுடன் ( நம் சில தமிழர்களை விட வெள்ளந்தியான வர்களே)பழகும் வாய்ப்பு6) நான் தினசரி வாக்கிங்,விரதம் போன்றவற்றை கடை பிடிக்காத சோம்பேறி.ஆனால் கட்டாய வாக்கிங் ,பட்டினி அனுபவம் இதில்8) சுறு சுறுப்பான பணி ஓய்வுக்குப்பின் இதில் திட்டமிட ,உழைக்க வாய்ப்பு.9) நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு போக ,ரத்து செய்ய இயலும்.ட்ராவல்ஸில் அவர்கள் சொல்லும் நேரத்தில் போக இயலாவிடில் கட்டிய பணம் பெரும் பகுதி அம்போ.( நான் முக்தி நாத் செல்ல ஒருவரிடம் 1லட்சம் கட்டி இரண்டு மாத ஏமாற்ற டென்ஷனுக்குப்பின் அவரே ஆக்சிடென்டில் முக்தி அடைந்தது வரை தனி எபிசொடெ எழுதலாம்)

10)எந்தக்குழுவாயினும் கௌரி குண்ட் கேதார் நாத் பாதையில் நடந்து குதிரையில் சென்றால் உணவளிக்க இயலாது...ஏனெனில் வழியில் சமையல் சாத்தியமில்லை...இனி தொடர்கிறேன்
😄இயந்திரப் பறவைகளின் இடியோசை எழுப்பியது.....டென்டை விட்டு வெளியில் வந்தோம்.கூடுதல் ஒலியுடன் ஹெலிகாப்டர் தூஊஊரத்து மலைக்கப்பால் இறங்கும் காட்சி கேதார் நெருங்குவதை உணர்த்தியது.சாய் குடித்தோம்.நல்ல வேளையாக நிறைய மொபைல் டாய்லெட்கள்.ஆனால் குளிக்க வசதியோ குளிக்கும் மன நிலையிலோ நாங்கள் இல்லை.மீதி 5 கிமீ மலை ஏற ஆரம்பித்தோம்.இது மிக்க கடினமான பகுதி .படிகள் பெயர்ந்த இரவு மழையில் சேறும் சகதியுமான பாதை.ஆனால் எங்கள் எதிர் வீட்டு காலி மனையில் உறையும் ஊர்வன முதல் பறப்பன வரையிலானவற்றைக்கூட இமயத்தில் காண முடியவில்லை.மனிதர் வருமிடத்தில் அவை வருவதில்லையா? எங்கள் பதட்டத்தில் கவனிக்க வில்லையா? எனினும் காலை சூரிய ஒளியில் தங்கத்தை உருக்கி ஊற்றியது போல் மின்னும் பனிச்சிகரங்களின் காட்சி.
ஒரு கிமீ ஏறிய பின் டென்ட் தேநீர்க்கடைசந்திப்பு. அப்பா மகன் என இரு வெள்ளையர்கள் இறங்க ஆயத்தமாகிறார்கள். சின்சினாட்டியில் ஃப்ரொபசர் மகன்.நம் மைலாப்பூர் பெண்ணை டாவடித்து சைவனாக மாறி குழந்தைக்கு கிருஷ்ணமூர்த்தி என பெயரிட்ட பெருமையை சொல்ல நாங்கள் மகன்,மகள் அமெரிக்க பெருமையை சொல்லி கை குலுக்கி விடை பெறுகிறோம்.அடுத்த ஒரு கிமீ மலையோர கடையில் ஆளுக்கொரு பராத்தா.தற்போது இயந்திரப்பறவை இறங்குமிடம் தெளிவாகத் தெரிய மனைவி தன்னால் குதிரையில் இறங்க இயலாது எனவும் ஹெலிகாப்டர்தான் எனவும், தன் பெயரில் உள்ள வீட்டு வாடகையை எடுத்துக் கொள்ளும்படியும் அல்லது, மகன் மகளிடம் வாங்கித்
தருவதாகவும் புலம்பியபடி வந்தாள். உனக்கு குதிரையில் இமயத்தை விட்டு இறங்கும் அற்புத அனுபவம் வேண்டாமா என்றேன். ஒன்றரை கிமீ முன்னரே குதிரை லாயம் வருகிறது. இனி நடந்துதான் அனைவரும். டோலி வாலாக்கள் 1000/ கேட்டு நச்சரிக்கிறார்கள். ஹெலிகாப்டர் தளம். நிமிடத்திற்கு 20 பேரை இறக்கி ஏற்றி செல்ல புக்கிங் ஆபிஸில் கூட்டம்.நான் ஒப்புக்கு விசாரிக்கிறேன் .போக வர தான் புக்கிங்காம்.மனைவியிடம் நான் என்ன செய்ய என்கிறேன்.அதற்குள் ஒருவன் 1000/ ரூபாய்க்கு ஏற்பாடு செய்வதாக சொல்ல நான் அவ்வளவு சீப்பென்றால் பரவாயில்லையே என வியக்க அவன் பின்னால் சென்றால் அவன் சொன்னது க்யூவில் நிற்காது குறுக்கு வழியில் சாமியை தரிசித்து அருள் பெறும் அன்பர்க்கு என புரிந்து நழுவுகிறேன்.

கேதாரம் மேவினானை" எனவும் "கேதாரம் மாமேருவும்" எனவும் திருநாவுக்கரசர் பாடியிருக்கின்றார்.பன்னிரண்டாம் திருமுறையில், "..வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கேதாரம் தொழுது..." என்றும் பாடியுள்ளார்கள்.[கேதார்நாத் பள்ளத்தாக்கும் உத்தராகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளும் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டன. சூன் 16, 2013 அன்று மாலை 7:30 மணி அளவில் கேதார்நாத் கோயிலுக்கு அருகில் பெரும் சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. அன்று மாலை 8:30 மணி அளவில் மந்தாகினி ஆற்றில் நீரோட்டம் பெருக்கெடுத்து கட்டுக்கடங்காது சோர்பாரி தால் என்னும் இடத்தின் வழியாக ஓடத்தொடங்கியது. மறுநாள் காலை 6:40 மணியளவில் சரஸ்வதி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாறைகளையும் அடித்துக் கொண்டு ஓடியது. வெள்ளத்தில் மிதந்து வந்த பெரிய பாறை ஒன்று கேதார்நாத் கோயிலின் பின்புறம் சிக்கிக் கொண்டது. அப்பாறை வெள்ள நீரை கோயிலுக்கு இருப்புறமும் பிரித்துவிட்டது. இதனால் வெள்ளத்தால் கோயிலுக்கு பெரும் சேதம் உண்டாவது தவிர்க்கப்பட்டது. ஆனாலும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். கேதார்நாத்திலுள்ள கடைகள், விடுதிகள் மற்றும் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்திய இராணுவத்தால் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும்வரை பலர் கோயில் வளாகத்தில் தஞ்சமடைந்தனர்.)
கோயிலுக்குள் நுழைந்ததும் பாண்டவர்கள், கிருஷ்ணர், சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், சிவபெருமானின் காவலாளியான வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளைக் காணலாம். கோயில் கருவறையினுள் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இக்கோயிலின் முகப்பு மேற்சுவரில் ஒரு மனிதனின் தலை செதுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதே போன்ற அமைப்பு, கேதார்நாத்திற்கு அருகில் உள்ள, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த கோயிலிலும் உள்ளது. ஆதி சங்கரர் இக்கோயிலோடு சேர்த்து உத்தராகண்டிலுள்ள பல கோயில்களை புனரமைத்தார். கேதார் நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் வீரசைவ ஜங்கம் என்ற சமூகத்தை சேர்ந்தவர்தான் கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் பூசைகளை தலைமை அர்ச்சகர் செய்வதில்லை. அவரின் வழிகாட்டலின்படி அவரது உதவியாளர்களே பூசைகளை செய்கின்றனர். குளிர்காலத்தில் கோயில் விக்கிரகத்தோடு தலைமை அர்ச்சகரும் உகிமத்திற்கு செல்வார். கேதார்நாத் கோயிலில் ஐந்து முக்கிய அர்ச்சகர்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஓராண்டுக்கு தலைமை அர்ச்சகராக இருப்பார்கள்.பூசைகளின் போது கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வழக்கம் பல நூறாண்டுகளாகத் தொடர்கிறது.
4 மணி நேர க்யூ நிற்றலின் போது கேதார் சிறப்பை அசை போட்டு நின்றேன்.ஆங்காங்கே குறுக்கு வழி பக்தர்களை பண்டாக்கள் அழைத்துச்செல்ல திடீரென மழை .எங்களிடம் இருந்த பிளாஸ்டிக் மழைக்கோட்டால் கவர் செய்து நின்றோம்.1 மணி போல ஆலய நுழைவு.கடும் நெருக்கடி.ஆங்காங்கே சுவற்றில் வெண்ணெய்.சிவலிங்கம் போலன்றி ஒழுங்கற்ற கல் வடிவில் இறைவன் அருள் பாலிக்கிறார்.தொட்டு வணங்குகிறோம் பலர் வெண்ணெயை தடவுகிறார்கள் .கனவு நிறைவேறியதும் இறங்க இறைவன் என்ன வழி காட்டுவார்? என்ற கேள்வியோடு வெளி வருகிறோம்.