Venkatesan Varadharajan பணி நிறைவு பெறும்போது எனது ஏற்புரை கவிதை.(?)
ஓய்வு...
இது பணி நிறைவா?
பணி ஓய்வா
பணித்
தொந்தரவுகளின்
விடுதலையா?
எதற்கும் பயனில்லை என
ஒதுக்கிய கறி
வேப்பிலையா?😲
பென்ஷன் என்னும்
சிறகுகள் தந்து
பறந்திட வாய்ப்பா?
பென்ஷன் என்னும்
சிலுவைகள் தந்து
ஓரிடத்து முடக்கமா?
இது அரசாங்கம்
தரும் வரமா?😁
சாபமா?😞
வைக்கோல் தின்று
அசைபோடும்
விலங்கினமா?🐄
கறவை நின்ற
கசாப்பு கடை செல்லும்
தாய்ப்பசுவா?🐃
இளமை நந்தனார்களின்
தரிசனத்திற்காக
முதுமை நந்திகளின்
வழிவிலகலா?
வசந்த காலத்தை
வரவேற்க
தரை உதிர்க்கும்
இலையுதிர் கால
மரங்களா?🌳
ஓயாது ஓடிய நதி
ஓய்வு என்னும்
கடலில் கலக்கிறதா?🌪
உபயோகத்து முடித்த நீர் கூவத்தில்
மிதக்கிறதா?🌊
குளிர்ந்த நிலவு வர
அஸ்தமிக்கும் சூரியனா?💥
கதிரவன் ஒளி கண்டு மிரண்டோடும்
கரு நிழலா?👀
இது போதி மர நிழலா? இங்கு
புத்தர்
ஆகப்
போகிறோமா?🤔
இல்லை சுகமாக
உறங்கப்
போகிறோமா?😩
வேலை என்னும்
கூட்டுப்
புழுவிலிருந்து
விடுதலையான
வண்ணத்துப்
பூச்சியா?🦋
பணிச்சுமை
குடும்பச்சுமை
என திரிந்த
தோள்களுக்கு
ஒரு சுமை குறைந்த
ஆறுதலா?😲.....
இதோ என் பதில்...... Venkatesan Varadharajan: .
இரண்டாவது
இன்னிங்ஸ்😁
இல்லை நண்பர்களே
நூலகம் சென்று
அறிவைத்தேட 📖
பாரதம் முழுதும்
தரிசனம் செய்திட🙏🏼
பாரினில் பல
நாடுகள் சுற்றிட✈
பாசமாய்ப் பேரர்கள்
எடுத்துக்
கொஞ்சிட👨👩👧👦
கதைகள் எழுத✒
கவிதைகள் புனைய
கலைகள் கற்றிட
இசையை
அறிந்திட🎼
உழவுத்தொழிலை⛏
சிறிதாய் செய்திட
உலக சினிமாவின்
சிறப்பை அறிய🖥
முனைவர் பட்டம்
முயன்று பெற்றிட
முயற்சியை கெடுக்கும்
சோதிடம்
முதலாய்
மூடநம்பிக்கை🐼
முழுதாய் அகற்றி
முயன்றால்✊ முடியும்
என உலகுக்கு காட்டிட
அறிவுக்கு ஒவ்வா
கதைகள் ஒதுக்கி
அறிவியல் முறையிலோ
ஆன்மீக வழியிலோ
ஆண்டவன் இருப்பை🙏🏼
அடையாளம் கண்டிட
தேடிய செல்வம்
பயனோடு பகிர்ந்திட
வாடிய மனிதன் வாட்டம் போக்கிட😥
இதோ ஓர் வாய்ப்பு
ஆம் முடிந்தது
முதல் இன்னிங்ஸ்தான்
உழைக்கும் மனமிருந்தால்
உடலுக்கு சோர்வில்லை
சாதிக்கும் குணம் இருந்தால்
ஓய்வுக்கு வேலையில்லை🙌
ஓய்வெடுத்த
கம்பளிப்புழு
வண்ணத்துப்
பூச்சியாகிறது🦋
குறுவை ஓய்வுக்குப்
பின்தான் சம்பா
சாதிக்கிறது
நெல்லின்
ஓய்வுதான்
விதை நெல்லாகிறது
முதல் இன்னிங்ஸில்
சொதப்பிய
ஆட்டக்காரர் கள்
இரண்டாவது இன்னிங்ஸில்
சாதிப்பதில்லையா?
நான் முதல்
இன்னிங்ஸில் சாதிக்காத😔
சராசரி ஆட்டக்காரன்தான்
சாதனைக்கு
வயதில்லை
சாதிக்காதவனை
வரலாறு நினைப்பதில்லை😎
இதோ என்
இரண்டாவது இன்னிங்ஸ்😃
இதிலாவது
சாதிப்பேனா?
காலம் பதில் சொல்லட்டும்🙏🏼
உங்கள் வெங்கடேசன்...(9789804417
ஓய்வு...
இது பணி நிறைவா?
பணி ஓய்வா
பணித்
தொந்தரவுகளின்
விடுதலையா?
எதற்கும் பயனில்லை என
ஒதுக்கிய கறி
வேப்பிலையா?😲
பென்ஷன் என்னும்
சிறகுகள் தந்து
பறந்திட வாய்ப்பா?
பென்ஷன் என்னும்
சிலுவைகள் தந்து
ஓரிடத்து முடக்கமா?
இது அரசாங்கம்
தரும் வரமா?😁
சாபமா?😞
வைக்கோல் தின்று
அசைபோடும்
விலங்கினமா?🐄
கறவை நின்ற
கசாப்பு கடை செல்லும்
தாய்ப்பசுவா?🐃
இளமை நந்தனார்களின்
தரிசனத்திற்காக
முதுமை நந்திகளின்
வழிவிலகலா?
வசந்த காலத்தை
வரவேற்க
தரை உதிர்க்கும்
இலையுதிர் கால
மரங்களா?🌳
ஓயாது ஓடிய நதி
ஓய்வு என்னும்
கடலில் கலக்கிறதா?🌪
உபயோகத்து முடித்த நீர் கூவத்தில்
மிதக்கிறதா?🌊
குளிர்ந்த நிலவு வர
அஸ்தமிக்கும் சூரியனா?💥
கதிரவன் ஒளி கண்டு மிரண்டோடும்
கரு நிழலா?👀
இது போதி மர நிழலா? இங்கு
புத்தர்
ஆகப்
போகிறோமா?🤔
இல்லை சுகமாக
உறங்கப்
போகிறோமா?😩
வேலை என்னும்
கூட்டுப்
புழுவிலிருந்து
விடுதலையான
வண்ணத்துப்
பூச்சியா?🦋
பணிச்சுமை
குடும்பச்சுமை
என திரிந்த
தோள்களுக்கு
ஒரு சுமை குறைந்த
ஆறுதலா?😲.....
இதோ என் பதில்...... Venkatesan Varadharajan: .
இரண்டாவது
இன்னிங்ஸ்😁
இல்லை நண்பர்களே
நூலகம் சென்று
அறிவைத்தேட 📖
பாரதம் முழுதும்
தரிசனம் செய்திட🙏🏼
பாரினில் பல
நாடுகள் சுற்றிட✈
பாசமாய்ப் பேரர்கள்
எடுத்துக்
கொஞ்சிட👨👩👧👦
கதைகள் எழுத✒
கவிதைகள் புனைய
கலைகள் கற்றிட
இசையை
அறிந்திட🎼
உழவுத்தொழிலை⛏
சிறிதாய் செய்திட
உலக சினிமாவின்
சிறப்பை அறிய🖥
முனைவர் பட்டம்
முயன்று பெற்றிட
முயற்சியை கெடுக்கும்
சோதிடம்
முதலாய்
மூடநம்பிக்கை🐼
முழுதாய் அகற்றி
முயன்றால்✊ முடியும்
என உலகுக்கு காட்டிட
அறிவுக்கு ஒவ்வா
கதைகள் ஒதுக்கி
அறிவியல் முறையிலோ
ஆன்மீக வழியிலோ
ஆண்டவன் இருப்பை🙏🏼
அடையாளம் கண்டிட
தேடிய செல்வம்
பயனோடு பகிர்ந்திட
வாடிய மனிதன் வாட்டம் போக்கிட😥
இதோ ஓர் வாய்ப்பு
ஆம் முடிந்தது
முதல் இன்னிங்ஸ்தான்
உழைக்கும் மனமிருந்தால்
உடலுக்கு சோர்வில்லை
சாதிக்கும் குணம் இருந்தால்
ஓய்வுக்கு வேலையில்லை🙌
ஓய்வெடுத்த
கம்பளிப்புழு
வண்ணத்துப்
பூச்சியாகிறது🦋
குறுவை ஓய்வுக்குப்
பின்தான் சம்பா
சாதிக்கிறது
நெல்லின்
ஓய்வுதான்
விதை நெல்லாகிறது
முதல் இன்னிங்ஸில்
சொதப்பிய
ஆட்டக்காரர் கள்
இரண்டாவது இன்னிங்ஸில்
சாதிப்பதில்லையா?
நான் முதல்
இன்னிங்ஸில் சாதிக்காத😔
சராசரி ஆட்டக்காரன்தான்
சாதனைக்கு
வயதில்லை
சாதிக்காதவனை
வரலாறு நினைப்பதில்லை😎
இதோ என்
இரண்டாவது இன்னிங்ஸ்😃
இதிலாவது
சாதிப்பேனா?
காலம் பதில் சொல்லட்டும்🙏🏼
உங்கள் வெங்கடேசன்...(9789804417