Thursday, October 18, 2018

வைஷ்ணவ தேவி பகுதி 8

வைஷ்ணவ தேவி பகுதி 8

( நன்றி கதை photo இணைய நண்பர்கள்)

அம்மனை தரிசித்தபின் இன்னும் மேலே 3 கிமீ ஏறி சென்று பைரவரை தரிசிக்கலாம் என உறவினர் சொல்ல நேரம் இரவு 2 மணியைத்தாண்டியதால் இறங்குவது எப்படி என கால்களும் மனமும் உறங்காத கண்களும் கெஞ்ச பைரவர் திசை நோக்கி கும்பிடு போட்டோம் . ஆனால் திரும்ப குதிரைக்காரர்கள் மறுத்து பைரவர் கோயில் சென்று சுற்று வழியில் வர 1500 கேட்க ஒரு சிலர் உடன்படாமையால் வழியில் குதிரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இறங்க ஆரம்பித்தோம். இதோ இதோ என உடல் தளர 8 கிமீ இறங்கும் வரை குதிரை தென்படவில்லை  இயற்கை காட்சிகளை ரசித்தபடி மலையேற்றத்திற்கு எடுத்துக் கொண்ட நேரத்தினை விட அதிக நேரம் ஆனபின் அடாவடியாக குதிரைக்காரன் 5 கிமீக்கு கேட்ட 900 தந்து ஏற முடியாது ஏறி குடல் வெளிவருமோ இடுப்பெலும்பு நொறுங்குமோ என்ற பயத்தில் எப்படியோ அடிவாரம் சேர்ந்தோம் இத்தனை நேரம் தெரியாத கால்வலி தெரிய ஆரம்பித்தது. 

இப்படி மலைப்பாதையில் நடைப்பயணம் மேற்கொள்ளும்போது உங்கள் கால்கள் உங்களைக் கெஞ்சக் கூடும் – “டேய் கொஞ்சம் நேரம் எனக்கு ஓய்வு கொடு!” என்று கூப்பாடு போடும். ஒவ்வொரு வைஷ்ணவ தேவி பயணத்திலும் சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த கட்ரா நகரில் மலைப்பாதை முடியும் இடங்களில் கைகளில் ஒரு எண்ணைக் குப்பியோடு நிறைய ஆண்களையும் பெண்களையும் பார்க்க முடிந்தது.  யார் அவர்கள்?

வலியோடு வரும் பக்தர்களின் கால்களில் எண்ணை தடவி நன்றாக பிடித்து விடுவார்கள்.கால்களை நீட்டியபடி உட்கார்ந்து கொண்டால் போதும் – அவர்கள் கைகளின் மூலம் நடந்து வந்த பாதங்களுக்கு இதமாய் பிடித்து விடுவார்கள். இதற்காக அவர்களுக்குக் கிடைக்கப் போகும் தொகை அப்படி ஒன்றும் அதிகம் இல்லை நண்பர்களே – பத்து ரூபாய் இருபது ரூபாய் என்று தான் கிடைக்கும்.  ஆனாலும் மகிழ்ச்சியோடு செய்வார்கள்.ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்குப் பெண்களும் பிடித்து விட்டு தங்களுக்குக் கிடைக்கும் பணத்தினைப் பெற்றுக் கொண்டு அடுத்த பக்தரை நோக்கி நகர்வதைப் பார்க்க முடியும் 

பெரும்பாலான தங்கும் இடங்களின் வாயிலில் இப்படி நிறைய பேரைப் பார்க்க முடியும். நடந்து வந்தவர்களுக்கும் இது மிகவும் இதமான ஒன்றாக இருந்தது. முதல் முறையாக பார்த்தபோது பாவம் இவர்கள் – அடுத்தவர்கள் கால்களைப் பிடிக்க வேண்டி இருக்கிறதே என்று நினைதேன். ஆனால் அவர்களுக்கு இது தொழில் அதனால் தவறில்லை என்றும் தெரிந்தது. நான் முதல் முறை இப்படி ஒருவரிடம் எனது கால்களை ஒப்படைத்தேன் – ஆஹா என்ன ஒரு சுகம்!  அப்படியே நீவி விட்டு, பிடித்துவிட்டு, கால்களில் இருந்த வலியை வெகுவாக குறைத்து விட்டார் அந்த மனிதர்.

இவர்கள் போன்றவர்களின் பிழைப்பிலும் இப்போது மண்.வெகுவான தங்குமிடங்களில் இப்போதெல்லாம் இயந்திரங்களை வைத்து விட்டார்கள் – நாற்காலியில் அமர்ந்து கொண்டு பொத்தானை அமுக்கினால் அதுவாகவே Massage செய்து விடுகிறது! மலைப்பாதையிலும் இப்படி ஐந்தாறு இயந்திரங்களைக் கொண்ட Parlour-களையும் காண முடிகிறது. இம்முறை பயணித்தபோது கால் பிடித்து விடும் மனிதர்களைக் காண முடியவில்லை.

நாங்கள் தங்குமிடத்திலும் அப்படி ஒரு இயந்திரம் இருந்தது. அரை மணி நேரத்திற்கு 75 ரூபாய் வாங்கிக் கொண்டார் அங்கே இருந்த பெண். அரை மணி நேரத்திற்குப் பிறகும் ஏனோ கால் வலி குறையவில்லை – அதிகமாகிவிட்டதோ என்ற எண்ணம் கூட எனக்கு வந்தது! என்ன தான் இயந்திரம் என்றாலும், அது மனிதர்கள் பிடித்து விட்டது போல இருப்பதில்லை!

அறைக்குச் சென்று சுடு நீரில் நீண்ட நேரம் குளித்து கால்வலியையும் உடல் வலியையும் போக்குவது இருக்கட்டும் தேநீர் அருந்திபடுக்கையில் படுத்தது தான் தெரியும். அதன் பிறகு பூகம்பமோ, பிரளயமோ வந்திருந்தால் கூட எங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அப்படி ஒரு அசாத்திய தூக்கம்.அடுத்த நாள் காலை எழுந்திருக்கும்போது பத்தரை மணி! 


பொதுவாகவே வைஷ்ணவ தேவி வருபவர்கள், இருக்கும் கால்வலியினால், தேவியைத் தரிசித்த பின்னர் நேராக தாங்கள் இருக்குமிடம் திரும்புவார்கள்.ஆனால் ஒரு சிலர் மட்டும், பக்கத்தில் இருக்கும் இடங்களுக்குச் சென்று வருவார்கள்.  கட்ராவிற்கு அருகிலேயே பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உண்டு நாங்கள் ஜம்முவில் அடுத்த நாள் shopping செய்ய இருந்தமையால் ஜம்மு திரும்பினோம் ....ஜம்மு  கலவர காஷ்மீரில் இந்துக்கள் மெஜாரிட்டி ஊர் 
முதலில் சென்றது ரகுநாத்ஜி கோயில்

இக்கோயில் மூலவர் இராமராக இருப்பினும், சீதை, விஷ்ணு, கிருஷ்ணர், அனுமார், சிவன், பிரம்மா, துர்கை, பார்வதி ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதிகள் உண்டு.

இக்கோயில் கட்டும் பணி, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜா குலாப் சிங்கால் 1835-இல் துவக்கப்பட்டு, அவரது மகன் மகாராஜா ரண்பீர் சிங் என்பவரால், 1860-இல் கட்டிமுடிக்கப்பட்டது.

இக்கோயிலை 30 மார்ச் 2002இல் பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகள் துப்பாக்கிகளாலும், குண்டு வீச்சாலும் தாக்கியதில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் உட்பட பத்து பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.இரகுநாத் கோயில் மீதான இரண்டாம் தாக்குதலை நவம்பர் 24, 2002இல் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் மேற்கொண்டனர். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதிலும், குண்டுகளை வீசியதாலும், 13 பக்தர்கள் இறந்தனர்

எனவே உள்ளூர நடுக்கத்துடன் .CRPF உறவினர் தந்த தைரியத்துடன் தரிசனம் செய்தோம்

கடைத்தெருவில் காஷ்மீர் பட்டு கம்பளி dry fruits sweets வீரத்துடன் (?)காஷ்மீர் ல்சென்று வந்த அடையாளமாக வாங்கினோம்
       நாளை மேலும் சில தகவலுடன் நவராத்திரியின் 9ம் நாள் 9 ம் பகுதி நிறைவு