அமெரிக்காவில் குப்பை அள்ளும் excavator லாரி பார்த்து மகிழும் பேரனுக்காக எழுதிய குழந்தை பாட்டு...கடைசியில் கொஞ்சூண்டு கவிதை(?)
(குப்பை மனம்)
எஸ்கவேட்டர்
லாரி ஒன்று
எக்கி எனும் பெயருடன்- என்
குட்டி பேரன்
துருவன் வீட்டு
குப்பை அள்ள
வருகுது
வெள்ளிக்கிழமை
வாரம்தோறும்
சேரும் குப்பை
அகற்றிட
வெளியில் வைக்கும்
தொட்டிகளை
விரைவாய்
அள்ளி எடுத்திட
நீண்ட கையை
வெளியே எக்கி
குப்பை தொட்டி
பற்றுது
நேக்காய் அதனை
மேலே தூக்கி
ஷோக்காய் தன்னில்
கொட்டுது
கருப்பு நிற
தொட்டி உள்ளே
அழுகும் குப்பை
கிடக்குது
வெள்ளை நிற
தொட்டி உள்ளே
பேப்பர், பிளாஸ்டிக்
நிரம்புது
இரண்டு லாரி
தனியே வந்து
பதமாய் பிரித்து
அள்ளுது
இரும்பு லாரி
வருகை கண்டு
அரும்பு மனம்
துள்ளுது
*மனித மனத்தின்
குப்பை அள்ள
யாரும் இங்கு
வருவரோ?
சேர்ந்த குப்பை
மனதில் ஊறி
நினைவுகளாய் நாறுது
கள்ளமில்லா
குழந்தை மனம்
குப்பை லாரி
ரசிக்குது
குழந்தை மனதை
நாமும் கொண்டால்
குப்பைகள்தாம்
சேருமோ*
வேங்கடன்