பிராமணர்கள் தாங்கள் செய்யும் அனைத்து பிரார்த்தனைகளிலும் உலகில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கவே பிரார்த்தனை செய்பவர்கள்.
சர்வே ஜனா: சுகினோபவ: என்பது அவனது பிரார்த்தனை
அதே போல் இறந்தவர்களுக்கும் தன்னாலான பிரார்த்தனையை செய்தே முடிக்கிறான்
எப்படி என்றால்
ஒவ்வொரு முறை தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக, ‘
ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய கோத்ரிண: தேஸா்வே த்ருப்தி மாயாந்து மய:உத்ஸ்ருஷ்டை: குஸோதை: திருப்யத திருப்யத திருப்யத
என்று மந்திரம் சொல்லி முடிப்பார்கள்
இதன் அர்த்தம்
‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ…. இதுபோன்று யாருமே அற்ற அனாதை என்றுசொல்லக்கூடிய அணைவருக்கும் நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை திருப்தியை திருப்தியை அளிக்கட்டும்’ என்று, ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறான். அவனை அப்படி செய்ய சொல்லியுள்ளது நமது சாஸ்திரம்.
இதை தான் ஒவ்வொரு அம்மாவாசை மாதப்பிறப்பு கிரஹணம் என தான் செய்யும் எல்லா தர்பணத்தின் போதும் பிராமணன் சொல்லி தர்பணம் செய்கிறான்- ஆனால் உலகம் குறிப்பாக தமிழ் நாட்டில் அவனை ஜாதி வெறி பிடித்தவன் என்கிறார்கள்- விந்தையான மனிதர்கள்.
படித்து பார்தேன் மிகமிக பிடித்தது