😎இமயத்தின் மடியில் இல்லாளுட ன்.பகுதி 5
இருள் பிரிந்துகொண்டிருக்கும், சற்று அதிகமாக குளிர் தாக்கிக் கொண்டிருக்கும் அந்த விடிகாலைப்பொழுதில் ரிஷிகேஷிலிருந்து துவங்கியது அந்தப் பயணம். சிறிய மலைச்சாலையில் செல்லும் போது மெல்லிய வெளிச்சத்தில் கடலாய் பரந்திருக்கும் கங்கையும் லக்ஷமண் ஜுலா பாலமும் தெரிகிறது. முந்திய நாள் மாலையில் ஹரித்வாரில் பார்த்த அழகான கங்கா ஆர்த்தி காட்சி இன்னும் மனதில் நிறைந்திருக்க அந்த பஸ்ஸில் பத்ரிநாத்திற்குப் பயணப் பட்டிருக்கும் அனைவரும் ஏதோ பிராத்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ரிஷிகேஷ் முதல் தேவப்ரயாக் வரையான இந்தப் பகுதி தான் நம் கூட ஓடிவரும் கங்கைநதி கொள்ளை அழகு. மேலே செல்ல செல்ல பசுமை குறைவா? கங்கை ஆழத்தில் செல்வதா? அல்லது நமக்கே சலிப்பா? அத்தனை அழகில்லை. பசுமை என எடுத்துக்கொண்டால் நம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகே அழகு. இமயம் கங்கை நதியாலும் பனிச்சிகரங்களாலும் தான் அழகு.பசுமை இல்லை.ஒரு வேளை வேறு பகுதிகளில் இருக்கலாம்.குறுகிய கொண்டை வளைவுகள் நிறைந்த பாதையில் 3 மணி நேரப் பயணத்தில் 70 மைல் சென்ற பின் நின்ற இடம் தேவபிராயக் என்ற சின்னஞ்சிறிய மலைகிராமம். மைல் கல் 2700 அடி உயரம் எனபதைச் சொல்லுகிறது. அங்கிருந்து மலையின் கிழே பிரம்மாண்டமான இரண்டு நதிகள் இணையும் ரம்மியமான காட்சி அந்தக் காலை வெய்யிலில் பளீரென்று தெரிகிறது. உடனே அருகில் போக மனம் துடிக்கிறது. அலக்நந்தா நதியும் பாகீரதி நதியும் ஒரே நதியாக இணைந்து “கங்கை”யாவது இந்த இடத்தில்தான். கங்கோத்திரியில் கங்கை உற்பத்தியானாலும் கங்கையாக அழைக்கபடுவது இங்கிருந்துதான். கடல் கரும்பச்சை நிறத்தில் பாகீரதியும், இளம் செம்மண் நிறத்தில் சீறிப்பாயும் அலக்நந்தாவும், நிறங்கள் துல்லியமாக வேறுபட்டும், இணைந்தபின் இரண்டுமில்லாத ஒரு புதிய வண்ணத்தில் கங்கையாக ஒடுவதும் கண்கொள்ளாக் காட்சி. அரை மூன்றுமணி பயணத்திற்குப் பின்னர் இறங்கினோம். கொண்டு சென்ற லக்கேஜை ஒரு பழக்கடையில் வைத்து காலை உணவாக பழங்கள் வாங்கிய பின் சரிவான மண்பாதைக்குப் பின் ஒரு தொங்கு பாலத்தை கடந்தால் சில படிகளை தொடர்ந்து சரியாக பராமரிக்கப் படாத பாதையின் முடிவில் மிகச்சிறிதாக ஒரு மேடை. பயப்படுபவர்களும், ரத்த அழுத்தம் அதிகமிருப்பவர்களும் குளிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், துணிந்து குளிக்க விரும்புபவர்கள் தங்கள் பொறுப்பில் செய்யலாம் என்றும் நதிக்கரை குகைகளில் .சில சாமியார்கள். காங்கிரீட் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் சங்கலியைப் பிடித்த வண்ணம் இரண்டு நதி மாதாக்களும் சேருமிடத்தில் துவங்கிய அந்தக் குளியல் முதல் நிமிடப் பயம் விலகியபின் சந்தோஷமான, வாழ்நாள் முழுவதும் நினைத்தாலே உடல் சிலிர்க்கும் ஒரு இனிய அனுபவம். சில அடிகள் காலை நகர்த்தினாலே இரண்டு நதிகளின் வெவ்வேறு வேகங்களை உணர முடிகிறது. மறு கரையில் அழகிய படிகளுடனும் துறையுடனும் தெரியும் ஒருகாவி வண்ணக் கோவில். ரகுநாத்ஜி கோவில் என்றார்கள். அதிலிருந்து எழும் மணி ஓசை🎼 துல்லியமாகக் கேட்கிறது. நதியிலிருந்தே அந்தக் கோவிலை நோக்கி செல்கிறோம்.திருமங்கை ஆழ்வாரின் பாடல் தமிழில் பொறிக்கப்பட்டிருக்க பாடல் பெற்ற கண்டம் எனும் கடிநகர் எனும் திருத்தலம் இது என்பதும் ஆழ்வார் சீர்காழி அருகிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து வந்து பாடிய இடம் என உணர்ந்து வணங்கிப் பிரார்த்தித்த பின் பயணத்தைத் தொடர்கிறோம். நீண்ட பயணம். இமயமலைத்தொடரில் அடுத்த ஊர் ஸ்ரீநகர் மற்றொரு ஜீப்பில்.மீண்டும் ருத்ர பிரயாக் வேறொரு ஜீப்பில். மதிய உணவு நேரம் .ஷாகாஹாரி ஓட்டலை கண்டறிந்தோம். நான் தாலி என்னும் சப்பாத்தியும் சாதமும் தாலும் கொண்ட உணவு. மனைவி ஜீரா ரைஸ். ஆனால் அதையும் கடுகெண்ணையில் ( நெய் என்று நினைத்து ஆர்டர் செய்தாள் நம் ஊர் நினைவில்) தாளிக்க அவள் முகத்தில் கடுகு தாளிப்பு😂:
Rudra prayag....Named after Lord Shiva (Rudra), Rudraprayag is situated at the holy confluence of Alaknanda and Mandakani rivers, at a distance of 34 km from Srinagar (Garhwal). The presence of two separate routes for Badrinath and Kedarnath Dham from Rudraprayag render great importance to the place. The entire region is blessed with immense natural beauty, places of religious importance, lakes and glaciers.

Rudra Prayag is a small town that is located in the state of Uttarakhand and in the district of Rudraprayag. The town is situated at the confluence of the River Alaknanda and River Mandakini. It has a special religious significance for many people as well. It is said that the place where the two rivers meet resembles two sisters embracing each other and there is a unique beauty about the place. Many visitors travel to the place to witness this phenomenon every year. The entire area is surrounded by immense beauty and one can see many lakes, glaciers, rivers and streams here. There are a few temples that are located in the town as well and these are a must visit while travelling to Rudra Prayag.
The main temples are the Jagdamaba Temple and the Shiva Temple. The town of Kedarnath which is an important pilgrimage center for many Hindus is located around 86 km from the town of Rudra Prayag and this can be visited as well. The Koteshwar Temple can be seen on the banks of the Alaknanda River and this is also a popular site in the town. Son Prayag and Okhimath are present outside the town and are important religious sites as well.:
இத்தகைய சிறப்பு பெற்ற ருத்ர பிரயாகையை மனதால் வணங்கி கேதார் நோக்கி பயணத்தை தொடங்க முடிவு செய்து ஒருஜீப்பில் ஏறி குப்த காசி எனுமிடம் அடைந்தோம்.இங்கு காசி விசுவநாதர் கோயில் உள்ளது.நேரம் மாலை 4 மணி.நான்கு இந்தி பேசும் பெண்கள் தனியாக வந்தவர்கள் அடுத்து சோன் பிரயாக் எனுமிடத்தில் தங்கலாம் என எங்களையும் அவர்களோடு சேர்த்து ஜீப் பேசி சாமியார்கள் மற்றும் குடிகாரர்கள் இடையில் பயணித்து மாலை ஆறு மணிக்கு சோன் பிரயாக் அடைந்தோம்.வழியில் ராம்பூர்,சீதாப்பூர் எனும் ஊர்களில் நிறைய லாட்ஜ்கள்.ஆனால் சோன் பிரயாக்கில் மூன்று கட்டில் அறை இரண்டு தான் உள்ளது 2500 எனவும் அதை அவர்களில் ஒருவருடன் பகிர வேண்டும் எனவும் தெரிந்த்து.நான் மீண்டும் ராம்பூர் 4 கிமீ போனால் இரண்டு கட்டில் அறை 1000 க்குள் மற்றவருடன் பகிராமல் கிடைக்கும் என அவர்களை கழட்டி விட முடிவெடுத்தேன்.இருட்ட ஆரம்பித்த நேரம்.ராம்பூருக்கு போக வழி? இமயத்தில் ஆட்டோ ஓடுமா? விதிக்கு யாரோ கிச்சு கிச்சு மூட்டினார்கள் போலும் அது எங்களை பார்த்து சிரித்தது.😂😂