Saturday, October 20, 2018

இமயத்தின் மடியில் பகுதி 2

😎இமயத்தின் மடியில் இல்லாளுடன் 😲
கேதார் பத்ரி 🙏🏾பயண அனுபவம் பகுதி 2....


நீங்கள் அக்னி🔥 வெயிலில் ☀வறுபடும் போது குளிர்வாக🌧 ஆன்மீக அனுபவம் பெற மே மாதத்தை தேர்ந்தது என் முதல் தவறு.ரயிலில் கடைசி நேரத்தில் கிடைத்த ஸ்லீப்பரில் டில்லிவரை மிக்க கடும் வெப்பம் ரிஷிக்கேஷ் வரை கடும் வெப்பம்  ராம்பூர் வரை ஓரளவு குளிர் கேதார பத்ரி கடும் குளிர் பின் தலைகீழாய் என பயணித்ததில் உடம்பு புடம் போடப்பட 🐻எங்கும் வெகேஷன் கூடடம் டிராபிக் ஜாம் அவஸ்தை.🦁டில்லி காஷ்மீர் கேட் பஸ் நிலையத்தில் ஏசி பஸ் கிடைத்து எடுத்துச்சென்ற புளியோதரையை ( இனி எப்போது அரிசி சாதமோ) என உண்டோம்.ஹரித்வார் சங்கர மடத்தில் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை.அங்கு கேதாரிலிருந்து திரும் பிய குழுவினர் பலத்த மழையால் வழி அடைக்கப்பட்டதாக கூறி வயிற்றில் புளி கரைத்தனர்.நான் சங்கர மடத்தை புறக்கணித்து அருகில் கர்நாடகா பவனில் 600/ க்கு ரூம் ( போர்டில் இலவசம் என உள்ளது) போட்டதில் மனைவி கோபிக்க ஒருவரை நம்பி ஒருவர் இனி வருவதில்லை என சண்டையிட்ட வாறு கங்கை கரை அடைந்தோம்.இவ்விடத்தில் செருப்பு தொலைந்த அனுபவம் உள்ளதால் இருவரும் இடது கால் பாதணியை👢👞 ஒரு மறைவிடத்தில் வைத்து வலது காலுடன் நடந்து கங்கைக்கரையில் வைத்து தம்பதியாக கங்கையில் நீராடினோம்.வெயிலுக்கு எதிராக உருகிய பனியில் கங்கா உடலை உறைய வைக்க

நீள்வாக்கில் கண்ணுக்கெட்டிய தூரம் கங்கையின் பிரவாகம். பார்த்தவுடன் பிரமிக்கவைக்கும் மலைத்தொடரின் பசும்போர்வை. என்னை எப்போதும் அசைத்துப்பார்க்கும் மலையடிவாரத்தின் நீளும் நெடிய கரம். வெயில் இருந்தும் பனிமூட்டம் பரவும் தட்பம். நல்ல குளிர். விதவிதமான வண்ணங்களில் விதவிதமான பக்தர்கள். மொட்டை போட்டுக்கொண்டு-தாடியுடன்-ஊடுருவும் ஞானப்பார்வையுடன்-சிடுக்கு விழுந்து புறத்தோற்றம் குறித்த கவலை ஏதுமின்றி நிர்வாணத்துடன்-ஹூக்கா புகைத்தபடி- கைரேகை பார்த்தபடி-என்று சாமியார்கள்- ஹரித்வார்.....
ஹரித்வாரை அசை போட்டபடி கரைக்கு வந்தால் இருவரின் வலது கால் செருப்பு மிஸ்ஸிங்.👞👠ஆனால் மறைவிடத்தில் இருந்த இடது கால் இருந்தது.மனைவி அதை கையில் ஏந்தி கண்ணகி போல் கரையோர கடைக்காரர் களிடமும் சாமியார் களிடமும் நியாயம் கேட்க ( அவளுக்கு 9 டாலர் கொடுத்து மகள் வாங்கித் தந்ததாம்) ஒருவன் சாமியாரின் தடியை பிடுங்கி குப்பை களை கிளறி காட்டி  பார்க்கச்சொல்ல அதில் கங்கையில் கழித்த பழைய உடைகளும் மலர் களும் மழித்த முடிகளும் 🍈..கங்கையோ கள்ளச்சிரிப்புடன் ஓடிக்கொண்டிருந்தாள்😀😀பின் இருவரும் கேதார் பயண 18 கிமீ முன்னோட்டமாக 3 கிமீ மானச தேவி கோயிலுக்கு விஞ்சைத் தவிர்த்து வெறுங்காலுடன்😲 ஏறிப் பார்க்க முடிவு செய்ய வெயிலில் சூடேறிய 🔥கரடு முரடான பாதை பாதங்களை பதம்பார்க்க😟 திரும்புகையில் புதிதாய் வாங்கிக்கொண்டோம்.பின் கங்கை கரை ஆரத்தி...ஹரித்வார் கும்பமேளா நடக்கும் ஊர்களில் ஒன்று. இங்குள்ள கங்கை நதிக்கரையில் "ஹர் கி பௌரி" என்று ஒரு இடம் உள்ளது. இதற்கு ஹரனின் காலடி என்பது அர்த்தம் அதாவது "சிவனின் காலடி" என்று பொருள். இந்த இடத்தில் தினமும் மாலை கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து பூஜை செய்கிறார்கள். பஜனை பாடி ஆரத்தி காண்பித்து மலர் தூவி தீபங்களை கங்கை நதியில் மிதக்க விட்டு பூஜை செய்கிறார்கள். இதற்கு மக்கள பெரும் திரளாக தினமும் மாலை கூடுகிறார்கள். இதற்கு 'கங்கா ஆர்த்தி' என பெயர். ஹரித்வாரில் இதே போன்று கங்கா ஆர்த்தி இன்னும் இரண்டு இடங்களில் தினமும் மாலை கங்கை கரையில் நடைபெறுகிறது, ஆனால சிவன் காலடி என சொல்லப்படும் இந்த இடத்தில் நடக்கும் ஆரத்தி தான் மிகவும் பிரசித்தம்.
🔥ஆரத்தி முடிந்து அபூர்வமாய் ஒரு கடையில் கிடைத்த இட்லிகள் 🍚இரவு உணவாயிற்று.
அடுத்து ரிஷிகேஷ் தொடர்கிறேன்...