இமயத்தின் மடியில் கேதார் நாத் பத்ரி நாத்...பகுதி 7... ...
குறுகிய பாதையில் மட்டக் குதிரைகள் இடத்தை அடைத்தபடி ,நடப்பதை தடை செய்தன.இது குதிரை இனங்களில் குள்ளமான ஒரு வகை.சிறிய தலையுடன், அகன்ற முகத்தினையும், கூர்மையான காதுகளையும் கொண்டிருக்கும். இந்த இனத்தில் சிறியது நல்ல தசையுள்ள கழுத்தையும், கச்சிதமான உடலமைப்பையும், சிறிய வலிமையான கால்களையும், அதன் அளவுக்கேற்ற கணுக்கால்களையும் கொண்டிருக்கும். மேலும் நீண்ட பிடரி மயிரினையும், வாலினையும், கடுங்குளிரைத் தாங்கும் அடர்த்தியான தோலினையும் பெற்றிருக்கும். பல்வேறு நிறங்களில் வெவ்வேறு உயரங்களில் காணப்படுகின்றன. பெண்களும் குழந்தைகளும் ஏற அதன் உயரக்குறைவு வசதி.குதிரை அளவு ஓடாது.ஆனால் அதில் அமர்ந்து இறங்கிய திகில் அனுபவம் பின்னர் நடக்கும் பாதையெங்கும் குதிரை சாணம்( 100 க்கணக்கில் போய் வந்தால்) எப்படியோ நடக்க ஆரம்பித்தோம்.
16 கிமீ ஐ மணிக்கு 4 கிமீ வேகத்தில் 4 மணி நேரத்தில் கடக்கப்போவதாக கற்பனை செய்து முதல் ஒரு மணி நேரத்தில் 2 கிமீதான் கவர் செய்தாம் இமயத்தில் ஏறுகின்ற பெருமித உணர்வுடன் நடையை எட்டி வைக்க முயற்சித்தோம் இமயத்தின் பெருமைகளை அசை போட்ட படியே!!!மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநிலமீதினில் இது போல் பிரிதில்லையே'' என்றும்“வெள்ளிப்பனி மலை” என்றும் மகாகவி பாரதியார் போற்றிய மாமலையான இமயமலைபுவியியலின் படி, இந்நில உலகிலேயே ஒப்பற்ற மிகப் பெரிய, மிக உயர்ந்த, மாபெரும் மலைத்தொடராகும். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும் இந்த இமயமலைத் தொடர்ஆசியாவிலுள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடருக்கு வடக்கே 4,300 மீட்டர் உயரத்திலே திபெத் உயர் பீடபூமி உள்ளது. உலகத்திலேயே உயரமானதும், அதே சமயத்தில் இளைய மலை அம்மலைத்தொடர் சுமார் 30மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது
மஞ்சு கொஞ்சும் மலை முகடுகள் நிறைந்த இமயமலை
ஹிம் என்றால் பனி ஹிமாலயம் என்றால் பனி ஆலயம் என்று பொருள். எனவே இமாலயத்தில்எப்போதும் பனி நிறைந்திருக்கும். பனி மூடிய சிகரங்களை கொண்டுள்ளதால் இம்மலைத் தொடர்அதிகமாக சிதைவு அடையவில்லை. இம்மலைத் தொடர் கிழக்கு மேற்கில் இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம் விரிந்து பரந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தொடங்கி, பாகிஸ்தான். இந்தியா, நேபாளம். சீனா, பூடான், மியான்மார் வரை பரவியுள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இந்த மலைத்தொடர்கள் மட்டும் இல்லாமல்இருந்திருந்தால் நம்முடைய இந்தியத் திருநாடே பாலைவனமாக மாறியிருக்கும். இந்து மஹா
சமுத்திரத்திலிருந்து வரும் மேகக்கூட்டங்களை தடுத்து நிறுத்தி இந்திய திருநாட்டை வளமிக்க நாடாகமாற்றியுள்ளது இம்மலைகள். அதே சமயம் திபெத்திலிருந்து வரும் குளிர் காற்றை தடுத்து நிறுத்தி நல்ல தட்பவெப்ப நிலை வடநாட்டில் நிலவ உதவுவது இம்மலைத்தொடர்கள்தான். செங்கிஸ்கானின் படையின் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியதில் இமயமலைக்கு பங்கு உண்டு
எப்போதும் பனியால் மூடப்பட்டிருப்பதால் அப்பனி உருகி பாயும் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, யாங்சிகீ, மஞ்சளாறு, ஐராவதி என்னும் வற்றாத ஜீவநதிகள் அனைத்தும் உருவாகி ஆசிய கண்டத்தையே வளமாக்குகின்றன.இவ்வாறு நாகரீகத்தின் தொட்டிலும் இமயமலைதான். இப்பூவுலகின் ஒப்பற்ற கொடுமுடியாகிய எவெரெஸ்ட் தொடங்கி அனைத்து 8000 மீட்டருக்கும் உயர்வான பனி மூடிய சிகரங்கள் அனைத்தும் அமைந்திருப்பதும் இம்மலைகளிள்தான். உலகின் பத்து மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்பது சிகரங்கள் இமயமலையில் உள்ளன.
பச்சைப் போர்வை போர்த்தது போல காட்சி தரும் இமயமலை
இமயமலை கொடுமுடிகள் இறைவனின் வாசஸ்தலம் இவற்றில்விண்ணைத் தொடும் கைலாயம் சிவலிங்க முடி எழிலின் திரு வடிவமாகும், திருக்கயிலாயம்எல்லை கடந்த இமயத்தில் அமைந்துள்ளது. பெரிய இமயத்தின் தென் பகுதில் மற்ற இமய மலையின்புண்ய தலங்களான ரிஷ’கேசம், திருக்கேதாரம், பத்ரிகாச்ரமம். கங்கோத்ரி, யமுனோத்ரி முதலியவைஉள்ளன.
உத்தரகாண்ட மாநிலத்தின் கிழக்குப்பகுதிக்கு குமோன் என பெயர் வரக்காரணம் விஷ்ணு பகவான்எடுத்த கூர்ம அவதாரம் ஆகும். இரண்டாவது அவதாரமாக கூர்ம அவதாரம் எடுத்த போது எம்பெருமான்இமயமலையில் இப்பகுதியில் மூன்று மாதங்கள் தங்கியதாக ஐதீகம். அவரது காலடித்தடம் இன்னும்இம்மலைகளில் உள்ளன,
பாண்டவர்களுடன் தொடர்புடையது இமயமலை. இந்த இமயமலைப் பகுதியில்தான் அர்ஜூனன் தவம் புரிந்து சிவபெருமானுடன் விற்போரும், மல்யுத்தமும் புரிந்து பாசுபதாஸ்திரம் பெற்றான். பாண்டவர்கள் சொர்க்கம் புகுந்ததும் யமதர்மராஜன் அவர்களை நாய் ரூபத்தில் சோதித்ததும் இம்மலைகளில்தான். வேதவியாசர் வேதங்களைச் சரிபார்த்து நான்கு ஆக்கிய நல்லிடம் இமயமலைப் பகுதியே. மகாபாரதம் எழுதப்பட்ட புனித இடம் இமயமலைப் பகுதிதான் என்று இமயமலையின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்..
இவ்வாறாக நினைத்து எட்டி வைத்த நடை செங்குத்தான படிகளைக்கண்டு தளர்ந்து அடுத்த ஒருமணி நேரத்தில் ஒன்றரை கிமீ தான் தாண்டினோம் .உணவுக்கடைகளில் 15 ரூபாய்க்கு தரும் 50 மில்லி தேநீர் தான் ஆகாரம்.வளைந்து நெளிந்து செல்லும் பாதையை தவிர்த்து நான் ட்ரெக்கிங் செய்கிறேன் என குறுக்கு வழியில் மனைவி ஏற ஆரம்பிக்க நான் பின் தொடர்ந்து சேறை பூசி சிராய்ப்புகளுடன் 3 மணி நேரத்தில் கடந்ததோ 5 ஏ கிமீதான். எதிரில் காலியாக வரும் குதிரை கீழே இறங்க 1000/ கேட்டு சிலர் அதில் வாபஸானார்கள். திரும்புவது அவமானம் மட்டுமல்ல இனி வாழ்நாளில் நடந்து ஏறி கேதார் நாதனை தரிசிக்க இயலாது.நடை, குதிரை தவிர டோலா எனப்படும் கூடையில் சுமந்து செல்ல 6000/ முதலும் ,ஒரு நாற்காலியில் கழி கட்டி நான்கு பேர் சுமக்க 10000 ம் என சிலர் செல்கிறார்கள்.ஆன்லைனில் 7000/ க்கு முன்னரே ஹெலிகாப்டரில் புக் செய்தால் 20 நிமிடத்தில் கேதார் நாத்.ஆனால் கடைசி நிமிடத்தில் போக வர 15000/ என்றார்கள்.உடல் வருத்தி வரும் பக்தருக்கும் பிக்னிக் போல் ஹெலிகாப்டரில் வந்து 1000/ பண்டாவிடம் தந்து குறுக்கு வழியில் செல்லும் பக்தருக்கும் கேதார்நாதன் அருள் ஒன்றா வேறா என யோசித்தபடி நேரம் 7 ஐ நெருங்க நாங்கள் பாதி தூரத்தையும் கடந்தோமில்லை.மறந்தும் புறந்தொழா😄 வைணவப்பெண்ணான என் மனைவி கேதார் நாதனை தரிசிக்க சிரமத்துடன் ஏறும் முரண் எனக்கு ஆச்சரியமாயிருக்க😇
எங்கும் நமசிவாய எனும் ஐந்தெழுத்தின் ஒலி.தீவிர பக்தையான அவளிடம் ஐந்தெழுத்தை ஓது அவனருள் கிட்டும் உன்னால் முடியும் என்றேன்.அவள் தசாவதாரம் கமல் போல் என்னை சோகமாகப்பார்த்து நாராயணா! பெருமாளே ! என்று அடுத்த மலை உறையும் பத்ரி நாதனை கூப்பிட்டாள்.😨நான் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது என மனதில் பாடியபடி ஏறத்துவங்க எதிரில் வரும் குதிரைகள் இருட்டில் உருட்டிவிடுவது போல் சாரி சாரியாக வரத்துவங்கின👿.நேரம் இரவு எட்டு.கடக்க வேண்டிய தூரம் 6 கிமீ.இன்னும் ஒரு கிமீல் லிஞ்செட்டி எனும் காம்ப் பற்றிய செய்தி ஆறுதல் தர நாக்கு உலர🤑 கால்கள் பின்ன இஞ்ச் இஞ்ச்சாய் லிஞ்ச்செட்டி நோக்கி நகர்ந்தோம்😩😩
(போட்டோவில் எங்காத்து மாமி)
No comments:
Post a Comment