Saturday, October 13, 2018

#குறியீடு

               #குறியீடு

         எங்கக்கா என்னை தன் மச்சினர் பொண்ணுக்கு வந்திருந்த வரனைப் பற்றி விசாரித்துச் சொல்லுன்னு ஒரு அட்ரஸ் அனுப்பியிருந்தா. நான் எங்காத்துக்கார் சகிதமா அவாத்துக்குப் போக அங்கே வரவேற்பு பலமாயிருந்தது. ஹாலைச் சுற்றி கண்ணை ஓட்டினேன். என்னன்னவோ மாடர்ன் ஆர்ட்ல ஆயிரத்திலும் லக்ஷத்திலும் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு பெருமாள், ஆசார்யர் படம் கூட இல்லை. வழக்கமான விசாரிப்புக்கள் முடிந்தவுடன் நான் அந்த புள்ளையாண்டான்ட்ட #நெத்திக்கிட்டுப்பியா? ன்னு கேட்க, எங்காத்துக்காரர் #சந்தியாவந்தனம் ரெகுலரா செய்வாயானோ? ன்னு கேட்டார்.எங்கக்கா எங்களுக்குச் சொன்னது #நெத்திக்கிட்டுண்டு #மூணுவேளை #சந்தியாவந்தனம் #பண்ணினா #போதும்னு சொல்லியிருந்தா. அதனால் அந்த கேள்வியை நாங்கள் கேட்க.....

         பிள்ளையாண்டான் எனக்கு,"சிம்பல்ஸ்ல #எல்லாம் #நம்பிக்கை #கிடையாது. அந்த ரிச்சுவல்ஸ் எல்லாம் வேஸ்ட்..."மனஸைத் தெளிவா நல்லதா வச்சுண்டா போதும்னு நம்பறவன் நான்-னு பெருமையா சொல்லிண்டான். எனக்குத்தான் சாதாரணமா இதமாதிரி நேரத்ல கோபம் வரும். அன்னிக்கு எங்காத்துக்காரருக்கு வந்தது. ஆனா....அவருக்கு கோபம் வந்தா மெதுவா பாயின்ட் பை பாயின்டா பேச ஆரம்பிப்பார். பையனுக்கு அது புடிபடல. 

          சிம்பல்ஸ் அத்தனையும் வேஸ்டா..? நம்ப நாட்டு தேசியக் கொடிகூட சிம்பல்தான். மேதமாடிக்ஸ்ல ஈக்வல்ஸ் னு சொல்லி ரெண்டு கோடு போடறோமே அதுவும் சிம்பல்தான். எல்லா மொழியிலேயும் எழுத்தெல்லாம் சிம்பல்ஸ்தான்.குறியீடு இல்லாத ஒரு நாடும், இனமும், வளர்ச்சியும் கிடையாது. நீங்க ஒரேயடியா சிம்பல்ஸ்ல நம்பிக்கையில்லைன்னு சொல்ல முடியாது. எது எதுக்கோ சிம்பல்ஸ் வச்சுருக்கா. நாம பெருமாளோட திருப்பாதத்தைத் திருமணா, மஹாலக்ஷ்மியை ஸ்ரீசூர்ணமா இட்டுண்டு அவாளுக்கு எப்போதும் தாஸன்னு காண்பிக்கிறோம். அதை அவமானமா நினைக்கிறயா?  அப்ப நீங்களெல்லாம் வைஷ்ணவாளே இல்லைன்னு அர்த்தம்  எத்தனை புண்யம் பண்ணி இந்த வைஷ்ணவ ஜன்மம் கிடைச்சிருக்கு..இப்ப பார்த்தா வைஷ்ணவா செய்யறதெல்லாம் சிம்பல்ஸ்னு கேலி பண்றே. அப்பறம் எதுக்கு வைஷ்ணவா மேகஸைன்ல விளம்பரம் பண்றேள்? சந்த்யாவந்தனம் ப்யூரிஃபிகேஷன் ப்ராசஸ்..நித்தம் அதைச் செய்யறப்போ மனசை ஃபோகஸ் பண்ண முடியும். அதுல நல்ல எண்ணங்களை வளர்க்கமுடியும். நீங்க சொன்ன மனசை தெளிவா நல்லதா வச்சுக்கத்தான் இதை ரிஷியெல்லாம் கண்டுபிடிச்சு அனுஷ்டிச்சுப் பாத்துட்டு  நம்ம பெரியவாளுக்குக் கொடுக்க அவா நமக்குக் கொடுத்திருக்கா. இத நீங்க எங்காத்துப் பொண்ணை கல்யாணம் செஞ்சுகாட்டியும் தெரிஞ்சுக்கணும் -ங்கறதுக்காகச் சொல்றேன்.

          நான் எங்கே அவாள்ளாம் தப்பா எடுத்துப்பாளோன்னு நினைச்சு எங்காத்துக்காரர் கிட்ட மணி என்ன?ன்னு கேட்டு சிம்பாலிக்கா நிறுத்தச் சொன்னேன். எங்காத்துக்காரரும் ஜாதகம் பொருத்தம் இருக்கு. வைஷ்ணவாளா பார்க்கறோம். யோஜிங்கோ ன்னு சொல்லிட்டுக் கிளம்ப....

         காரில் .....#புருடன் #மணிவரமாகப் #பொன்றா #மூலப்பரகிருதி மறுவாக..தேசிகப்ரபந்த பாசுரத்தை நான் சொல்ல எங்காத்துக்காரர் எத்தனை அழகா எம்பெருமானோட ஒவ்வொரு ஆயுதமும் ஒவ்வொரு தத்துவத்தை ஸிம்பாலிக்கா ரெப்ரெஸண்ட் பண்றத ஸ்வாமி காட்டியிருக்கார். ஸ்வாமி மாதிரி ஸிம்பாலிக்கா ஒரு விஷயத்தைச் சொல்லவும் முடியாது, அடுத்தவா காட்டின குறியீட்டைக் கரெக்டா கட்டவிழ்த்துக் காட்டவும் முடியாதுன்னு சொன்னார். நான், ஸ்தோத்ரரத்னம் மொத்தம் 65 ஶ்லோகம். இந்த 65ங்கறது அஷ்டாக்ஷரம், த்வயம், சரமஶ்லோகம் இந்த மூணோட அக்ஷரங்களின் கூட்டுத் தொகைதான். இதுகூட ஒரு குறியீடு தான்னேன். ஆத்துக்கு வர வரையிலும் குறியீட்டிலேயே பேசிண்டிருந்தோம்.

         அடுத்த ஒரு மாசத்துல நாங்க இந்த விஷயங்களை மறந்தே போன ஸமயத்தில் எங்காத்து காலிங் பெல் அழைத்தது. கதவைத் திறந்த எங்களுக்கு திருமண் ஸ்ரீசூர்ணத்துடன் அந்தப் பையன் நின்று கொண்டிருந்தது சிம்பாலிக்கா அவன் தெரிவிக்க நினைத்ததைப்புரிய வைத்ததால் ஆனந்தத்துடன் உள்ளே அழைத்தோம்.

                    #நப்பின்னை - #வைணவன்குரலில்