Saturday, October 13, 2018

காமராஜர் கவிதை

ஜலை 15..
பிறந்த நாள்..
காமராஜர்...
இவர் கருப்பு
காந்தி மட்டுமல்ல
நெருப்பு
காந்தியும் தான்
ஊழல் என்னும் குப்பைகளை ..
உண்மை
நேர்மை
என்னும் தீயால் எரித்து
கல்வி ஒளி
தந்த
நெருப்பு காந்தி
வயிற்றுக்கு உணவின்றி ..
ஏழை
செவிக்கு
உணவு ஏறாது
என உணர்ந்த
நவீன வள்ளுவர்
இவர் ஒரு
விசித்திர பொறியாளர்.
அணை கட்டி
ஓடும் நதியை
தேக்கி வைத்தார்
மேல் தட்டு மக்களுக்காக
தேங்கிய
கல்வி எனும்
அணை உடைத்து
அனைவருக்கும்
பாய வைத்தார்
இவர் காலத்தில்
மதுக்கூடம்
இன்றி தள்ளாடாத தமிழகம்
பள்ளிக்கூடம்
திறந்து
அறியாமையை
தள்ளாடவைத்தது.
காம ராஜர்
என்பது
மன்மதனின்
மறு பெயர்
கலவிக்கு அரசன்
அதன் பொருள்
இல்வாழ்வை
துறந்து
பொதுவாழ்வை
மணந்தவருக்கோ
அப்பெயர்?
கலவி என்பதில்
ஒரு புள்ளி
வைத்தார்
ஊரெங்கும்
கல்வி
தரும் பள்ளி வைத்தார்.......
வேங்கடன்.....