காலைவணக்கம்!
இன்று நீண்ட நாட்களாக இடைவெளி ஏற்பட்ட இலக்கிய இன்பக்கவிதையில் "" ஒற்றுப்பெயர்த்தல்""
என்ற சித்துரக்கவிதையைத்தொடங்குகிறேன் அடியேன்:-
ஒருபாடலில் மரங்களின்,நதிகளின்,மாதங்களின்,பழங்களின் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் கருத்துமாறி கலந்திருக்கும். ஒற்றி இருக்கும்!
அதனைத்தனியே பெயர்த்து எடுத்தல், "" ஒற்றுப்பெயர்தல் "
என்பதாகும்.இதுவும் "" சித்திரகவிதையில் ஒருபகுதி""ஆகும்..
இனி கவிதையைக் காணலாம்:-
ஒற்றுப்பெயர்த்தல்:-
காய்கறிகளை ஒற்றிப்பெயர்க்க:-
பாகற்காய்,தீதுகத்திரிக்காய், கருணை
நினையாய்
முருங்கையாய் எங்கும் தேங்காய்-அவனியில்
தன்னவரைக்காய்செய்து குணமிளகாய் நீயும்
வெங்காயத்தில் முள்ளங்கியணிந்த
அன்பீர்க்காயீதவனே!
அப்புடலங்காய் எரிமுன் தண்வெள்ளெரிக்காய் தேடியே
நல்கொத்தவரை நாடியே பாவந்தீர்
சர்க்கரைப்பூசணியே!
பொருள்:-
1) பா கற்காய்:-படம் அல்லது நற்கவிதை கற்க மாட்டாய்!
2) தீது கத்திரிக்காய்:- தீமைகளை வெட்டிவிடமாட்டாய்!
3) கருணை நினையாய்:- உள்ளத்தில் இரக்கம்
நினைக்கமாட்டாய்!
4) முருங்கையாய்:-
கோபத்தில் முருக்கிய கையை உடையவனே!
5) எங்கும் தேங்காய்:-
ஓரிடத்தில் நிலையாகத் தங்க
மாட்டாய்!
6) தன்னவரைக்காய் செய்து:-தன்னைச் சுற்றி உள்ளவரைத் துன்பம் செய்து காயப்படுத்தும்!
7) குணமிளகாய்:- குணத்தில்இளகாய்(இறங்காய் ,
8) வெங்காயத்தில்:-
வீணான உடம்பில்
9) முள்ளங்கியணிந்த:-
தீய குணமான முட்களால்ஆன கடுமையான உடை(உடலின்தோல்
)அணிந்த
10) அன்பீர்க்காயாதவனே!:-அன்பில் கலக்காதவனே!
11) அப்புடலங்காய்
எரியுமுன்:-
தீயினால் உடல் காய்ந்து எரிந்து விடுமுன்னே
12) தண் வெள்ளிரிக்காய்தேடியே:- குளிர்ச்சிதரும் வெள்ளரிக்காய் போன்ற குணத்தை தேடியே
13)நல்கொத்தவரை:-
நல்ல குணமுடைய கூட்டத்தினரை
நாடியே:- விரும்பிஅவர்களிடம்சேர்ந்து
பாவந்தீர்:- பாவங்களைத் தீர்க்க
14) சர்க்கரைப் பூசணியே:-
சர்க்கரை போன்ற
இனிமையான ,பூப்போன்ற குணத்தை அணிவாயாக! உடையவனாகுக!
திரள் கருத்து:-
நல்ல பாடம் அல்லது நல்ல கவிதை கற்க மாட்டாய்!பாகல் போல் கசப்பானவனே!
தீமைகளை வெட்டிவிட மாட்டாய்!
உள்ளத்தில் தயாளகுணம் நினக்க்கமாட்டாய்!
சினத்தில் முருக்குடைய கைகளை உடையவன்!
ஓரிடத்திலும் நிலையாகத்தங்கி இருக்கமாட்டாய்!
(நாய்போல அலைவாய்)
தன்னைச்சுற்றிஉள்ளவர்களைதுன்பமுற காயப்படுத்தும் குணத்தில்சற்றும் இளகமாட்டாய்!
நீயும் வீணான உட்புதனில் தீமையெனும் முட்களாளான ஆடையை அணிந்தவன்போல(உடலின் தோலாடை)
அன்பில் கலக்காதவனே!
தீயினால் உடலம் காய்ந்து எரிந்து போகுமுன்னரே
நல்ல குளிர்ச்சி உடைய வெள்ளரிக்காய் போன்ற குணமுடையவர்களைத் தேடிசென்று,
அந்த நல்லகூட்டத்தவரிடம்
விரும்பிப் பழகியே
நீயும்,மற்றவர்களிடத்தில் சர்க்கரை போன்று இனிமையான்பூப்போன்ற குணத்தினை அணிகலனாக அணிந்துகொள்வாயாக!(உடையவனாகுக!)
-------------------------+++++
இதில் மறைந்துள்ள காய்கறிகள்:-
1) பாகற்காய்
2)கத்திரிக்காய்
3)கருணைக்கிழங்கு
4) முருங்கைக்காய்
5)தேங்காய்
6)அவரைக்காய்
7)மிளகாய்
8)வெங்காயம்
9)முள்ளங்கி
10)பீர்க்கங்காய்
11)புடலங்காய்
12)வெள்ளரிக்காய்
13)கொத்தவரைக்காய்
மற்றும்
14) சர்க்கரைப்
பூசணிக்காய்.
படியுங்கள். இதுபோல பல இயற்றுங்கள்.தமிழை வளருங்கள்!
வாழ்க வளமுடனே!
ஆழ்வார்க்கடியவன்