Wednesday, October 10, 2018

ஒருங்கிணைப்புக்குழுவின் பெயர் ஆண்டாளின் தமிழில்

நம் திருமணக்குழுக்களின் நோக்கம் நிறைவேற நமது ஒருங்கிணைப்புக்குழுவின் பெயர் ஆண்டாளின் தமிழில் மாற்றப்படுகிறது

வாரணம் ஆயிரம் என்னும் பாடல் நல்ல திருமணப் பேற்றினை அளிக்கிறது. இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர் கொடி என்னும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப் பெற்றது.

திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் நூல்கள் ஆண்டாளால் இயற்றப்பட்டு இன்றும் அவரது புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இப்பதிகத்தினைப் பாடி நல்வாழ்க்கையோடு நன்மக்கட்பேறையும் பெறலாம்.

இப்பதிகத்தின் முதல் பாடல் மாப்பிளை அழைப்பு பற்றியும்

இரண்டாவது பாடல் நிச்சயதார்த்தம் பற்றியும்

மூன்றாம் பாடல் பெரியோர்களின் அனுமதி பற்றியும்

நான்காம் பாடல் காப்பு கட்டுதல் பற்றியும்

ஐந்தாம் பாடல் மணம் முடிக்க மணமகனாக‌ பெருமாள் வந்த நிலை பற்றியும்

ஆறாம் பாடல் திருமணம் முடித்து கைபிடித்தல் பற்றியும்

ஏழாம் பாடல் அக்னியை வலம் வருதல் பற்றியும்

எட்டாம் பாடல் அம்மி மிதித்தல் பற்றியும்

ஒன்பதாம் பாடல் பொரியிடுதல் பற்றியும்

பத்தாம் பாடல் மணமக்கள் ஊர்வலம் பற்றியும்

பதினொன்றாம் பாடல் இப்பதிகத்தினைப் பாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுகிறது.

 வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்